Get Mystery Box with random crypto!

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
चैनल का पता: @aatchithamizh
श्रेणियाँ: तथ्यों
भाषा: हिंदी
ग्राहकों: 95.49K
चैनल से विवरण

ஆட்சித்தமிழில் சேருங்கள்;
ஆட்சித்தலைவராக மாறுங்கள்!

Ratings & Reviews

4.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

2

4 stars

1

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 7

2023-12-03 09:08:28
டிசம்பர்.3:

இன்று
இளம் விடுதலை வீரர்
குதிராம் போஸ் பிறந்த தினம்!

இந்திய விடுதலைப் போராட்ட வீரர் குதிராம் போஸ் 1889-ம் ஆண்டு வங்காளத்தின் மிதுனப்பூர் கிராமத்தில் பிறந்தார்.

இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டார்.

1902-ம் ஆண்டு 13 வயதிருக்கும்போதே விடுதலைப் போராட்ட வீரர்கள் அரவிந்தர், சகோதரி நிவேதிதை ஆகியோரின் சொற்பொழிவுகளால் ஈர்க்கப்பட்டார்.

1904-ல் மேதினிப்பூர் கல்லூரியில் படித்தார்.

1905-ல் வங்கப் பிரிவினை போராட்டத்தில் பங்கேற்றார்.

பின்னர், பல காவல் நிலையங்களை குதிராமின் குழு குண்டுகளால் தாக்கியது. யார் தாக்குகிறார்கள் என்று தெரியாமல் ஆங்கிலேய அரசு மிரண்டது.

1908-ல்குதிராம் கைது செய்யப்பட்டபோது, குதிராம் என்ற இளைஞனின் செயல் என்று ஆங்கிலேய அரசு கண்டுபிடித்தது.

அதனால் குதிராமுக்கு 1908 ஆகஸ்ட் 11-ம் தேதி முசாபர்பூர் சிறையில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

18 வயதான அவர் "வந்தே மாதரம்" என முழங்கி கொண்டே அகால மரணமடைந்தார்.
14.7K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 06:08
ओपन / कमेंट
2023-11-23 07:09:41
நவம்பர்.23:
இன்று
உவமை கவிஞர் சுரதா பிறந்த நாள்!

கவிஞர் திலகம், தன்மானக் கவிஞர், கலைமாமணி, கவிமன்னர் என அழைக்கப்படுபவர் ராசகோபாலன்.

இவர் தஞ்சை மாவட்டம், பழையனூரில் 1921-ல் நவம்பர் 23-ம் தேதி பிறந்தார்.

சீர்காழி அருணாசல தேசிகரிடம் தமிழ் இலக்கணங்களை கற்று தேர்ந்தார்.

பாரதிதாசன் மீது கொண்ட பற்றால் தன் பெயரை சுப்புரத்தினதாசன் ஆக மாற்றினார்.

சுப்புரத்தினதாசனை சுருக்கி சுரதா என மாற்றிக் கொண்டார்.

1944-ல் மங்கையர்கரசி திரைப்படத்திற்கு வசனம் எழுதினார்.

இவரது ‘தேன்மழை’ கவிதை நூலுக்கு தமிழக அரசு 1969-ல் விருது வழங்கியது.

1972-ல் கலைமாமணி விருது பெற்றார்.

திருச்சி வானொலியில் சுரதாவின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.

“இரட்டை கிளவி போல் இணைந்தே வாழுங்கள் பிரிந்தால் பொருளில்லை” என்ற இவரது கவிதை வரிகள் மிகவும் புகழ்பெற்றது.
14.2K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 04:09
ओपन / कमेंट
2023-11-22 08:15:38
15.1K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 05:15
ओपन / कमेंट
2023-11-22 07:04:58
நவம்பர் 22:
இன்று
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி நினைவு தினம்!

அமெரிக்காவின் 35-வது அதிபராக பதவி வகித்தவர் ஜான் எப் கென்னடி.

இவர் கடந்த மே 29, 1917-ம் தேதி பிறந்தவர்.

கடந்த 1961-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது கடற்படை லெப்டினன்ட்டாகப் பணிபுரிந்தார்.

போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார்.

கடந்த 1960-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ரிச்சார்ட் நிக்சனைத் தோற்கடித்தார்.

புலிட்சர் விருது பெற்ற ஒரே அமெரிக்க அதிபர் என்ற பெருமை இவருக்கு உள்ளது.

கடந்த 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ம்தேதி டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.

உலகிலேயே மிக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இன்று வரை பேசப்படுகிறது.
14.7K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 04:04
ओपन / कमेंट
2023-11-21 16:26:12
13.7K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 13:26
ओपन / कमेंट
2023-11-21 16:26:01
13.5K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 13:26
ओपन / कमेंट
2023-11-20 15:24:12
12.8K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, 12:24
ओपन / कमेंट
2023-11-20 15:04:42 நவம்பர்.20:

இன்று நோபல் பரிசு பெற்ற முதல் பெண் படைப்பாளி செல்மா லேகர்லாவ் (Selma Lagerlof) பிறந்த தினம்!

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியும், ஸ்வீடனை சேர்ந்த படைப்பாளியுமான செல்மா லேகர்லாவ் (Selma Lagerlof) பிறந்த தினம் இன்று.

ஸ்வீடன் நாட்டின் வார்ம்லேண்ட் நகரில் (1858) பிறந்தார். இடுப்பில் காயத்துடன் பிறந்தார் செல்மா.

ஸ்டாக்ஹோம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

லேண்ட்ஸ்குரோனா நகரப் பள்ளியில் ஆசிரியராக 1885-ல் சேர்ந்தார்.

ஆசிரியர் பணிக்கு இடையே ‘கோஸ்ட்டா பெர்லிங்ஸ் சகா’ என்ற தனது முதல் நாவலை எழுதினார்.

தன் படைப்புகளுக்கு கருத்துகளை சேகரிக்க  இத்தாலிக்கு சென்றவர், ‘ஆன்டிகிறிஸ்ட்ஸ் மிராக்ளர்’ என்ற புத்தகத்தை எழுதினார்.

1902-ல் வெளிவந்த ‘ஜெருசலேம்’ என்ற நூல் அமோக வரவேற்பை பெற்றது.

பள்ளிக் குழந்தைகளுக்காக ‘தி ஒண்டர்ஃபுல் அட்வென்சர்ஸ் ஆஃப் நீல்ஸ்’ என்ற நூலை எழுதினார்.

இது உலக அளவில் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் புத்தகம் என்ற பெருமையைப் பெற்றது.

ஸ்வீடன் இலக்கியக் கழகத்தின் தங்கப் பதக்கத்தை 1904-ல் பெற்றார்.

1907-ல் உப்சலா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

ஜெருசலேம் நகரில் ஒரு தெருவுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1909-ல் பெற்றார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையை வென்று, சுய முயற்சியாலும் அபாரத் திறமையாலும் உலகப் புகழ்பெற்ற படைப்பாளியாக பரிணமித்த செல்மா லேகர்லாவ் 1940-ம் ஆண்டு மறைந்தார்
12.7K viewsAATCHI THAMIZH IAS ACADEMY, edited  12:04
ओपन / कमेंट
2023-04-30 06:18:07
3.8K viewsTNPSC THAMIZH, 03:18
ओपन / कमेंट
2023-04-29 05:49:21 ஏப்ரல்.29:
இன்று பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்!

“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” எனப் பாடி தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்.

1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் புதுச்சேரியில் கனகசபை, இலக்குமி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.

பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் கனக சுப்புரத்தினம்.

18 வயதில், காரைக்காலில் உள்ள பள்ளியில் அரசு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

கே.எஸ்.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எஸ். பாரதிதாசன் போன்ற பல்வேறு புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதினார் .

பாரதியார் மீது பற்று கொண்டிருந்த கனகசுப்புரத்தினம், அவரை நேரில் சந்தித்து உரையாடி தனது மானசீக குருவாகவும் ஏற்றுகொண்டார்.

அவர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

1928-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார்.

திராவிட மேடைகளில் கவிஞரின் கவிதைகள் முரசென முழுங்கின.

1929ம் ஆண்டு ‘குடியரசு‘ ‘பகுத்தறிவு’ ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை எழுதினார்.

குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன் முதலில் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புப் பெற்றார்.

தமிழியக்கம், தமிழச்சியின் கத்தி, தமிழுக்கு அமுதென்று பேர் போன்ற படைப்புகள் தமிழ்த்தேசிய அரசியலை கூர்மைபடுத்தின.

சென்னை சாந்தோம் சாலையில் ‘முத்தமிழ் மன்றம்’ நிறுவினார்.

1946ம் ஆண்டு அறிஞர்களின் வாழ்த்து, பாராட்டுக் கவிதைகள், கட்டுரைகள் கொண்ட ‘புரட்சிக் கவிஞர்’ என்னும் தொகுப்பு நூலை முல்லை முத்தையா வெளியிட்டார்.

அதிலிருந்து இவர் புரட்சிக் கவிஞர் எனப் பாராட்டப்பட்டார்.

1954-ஆம் ஆண்டு புதுவை சட்டமன்றத் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு தலைமை வகித்தார்.

1964-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு ஏப்ரல் 21-ஆம் தேதி சென்னையில் இயற்கை எய்தினார்.

1982-ஆம் ஆண்டு திருச்சியில் நிறுவப்பட்ட பல்கலைக் கழகத்திற்குப் பாவேந்தரின் நினைவாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் எனத் தமிழக அரசு பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தது.
9.6K viewsTNPSC THAMIZH, edited  02:49
ओपन / कमेंट