Get Mystery Box with random crypto!

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
चैनल का पता: @aatchithamizh
श्रेणियाँ: तथ्यों
भाषा: हिंदी
ग्राहकों: 95.49K
चैनल से विवरण

ஆட்சித்தமிழில் சேருங்கள்;
ஆட்சித்தலைவராக மாறுங்கள்!

Ratings & Reviews

4.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

2

4 stars

1

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 9

2023-04-24 19:30:53
2.7K viewsTNPSC THAMIZH, 16:30
ओपन / कमेंट
2023-04-24 17:09:40
ஏப்ரல்.24:
இன்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்!

அடித்தட்டு மக்களுக்கு அதிகாரத்தைப் பரவலாக்கும் வகையில் 1992-ம் ஆண்டு ஏப்ரல் 24 நடைமுறைக்கு வந்த அரசியலமைப்பு சட்டத்தின் 73-வது திருத்தத்தைக் கொண்டாடும் வகையில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதியை தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக (NPRD) கொண்டாடுகிறது.
4.7K viewsTNPSC THAMIZH, 14:09
ओपन / कमेंट
2023-04-23 12:27:07
ஏப்ரல்.23:
இன்று உலக புத்தக தினம்!

"வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட, அழகான பொருட்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை." என்றார் ஹென்றி வார்ட் பீச்சர்,

அறிவுசார் சொத்துகளான புத்தகங்களை பாதுகாக்கும் வகையிலும் அவற்றை வளர்க்கும் நோக்குடனும் யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஏப்ரல் 23-ம் நாளை உலகப் புத்தக தினமாகக் கொண்டாடுகிறது.

உலக இலக்கியத்துக்கான ஒரு குறியீடாக விளங்கும் இந்நாளை, 1995-ம் ஆண்டு ஸ்பெயின் நாட்டிலுள்ள கட்டலோனியாவில்தால் முதன்முதலில் கொண்டாடப்பட்டது.

உலகப் புத்தக தினம் என்ற ஒரு தினத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை, சர்வதேச பதிப்பாளர் சங்கம்தான் யுனெஸ்கோவுக்கு முதன்முதலில் பரிந்துரைத்தது.

புத்தக உரிமைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று ரஷ்யப் படைப்பாளிகள் கருதியதால், இந்த நாளை புத்தக உரிமை தினமாகவும் கொண்டாடப்படுகிறது.

உலகின் தலைசிறந்த இலக்கியவாதியான வில்லியம் ஷேக்ஸ்பியர், பிறந்ததும் ஏப்ரல் 23, அவர் உலகைவிட்டு மறைந்ததும் ஏப்ரல் 23.

அது போலவே, ஸ்பெயின் நாட்டில் (1923) ஏப்ரல் 23ம் நாள் இறந்த பிகுல்டி செர்வேண்டிசின் நினைவாகவும் புத்தக தினம் கொண்டாடுவதாக சொல்லப் படுகிறது.
3.5K viewsTNPSC THAMIZH, 09:27
ओपन / कमेंट
2023-04-22 13:17:11
ஏப்ரல்.22:
இன்று உலக பூமி தினம்!

பூமியில் சுற்றுச்சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியும், புவி மாசடைவதைத் தடுக்கும் எண்ணத்துடனும், உலக பூமி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இயற்கை வளம், சுற்றுசூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

1970-ல் 150 ஆண்டுகால தொழிற்சாலை கழிவால் பாதிக்கப்பட்ட சுற்றுச்சூழலை பாதுகாக்ககோரி சில நாடுகளில் லட்சக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

இதுவே பூமி தினமாக உருவெடுத்தது.

முதல் உலக பூமி தினம் அமெரிக்காவில் 1970, ஏப்.22ல் கடைபிடிக்கப்பட்டது.

1990-ம் ஆண்டில், ஐ.நா சபையால் 'புவி தினம்' அங்கீகரிக்கப்பட்டு, உலகம் முழுவதும் அன்று முதல் கடைப்பிடிக்கப்பட்டுவருகிறது.

இந்த நாளில் பூமியின் இயற்கைச் சூழலை மாசுபடுத்தாமல் காக்கும் நோக்கில் மக்களிடையே பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

2023 ஆம் ஆண்டு புவி நாளின் கருத்துரு, 'எங்கள் கிரகத்தில் முதலீடு செய்யுங்கள் ' (Invest In Our Planet) என்பதாகும்.
4.3K viewsTNPSC THAMIZH, edited  10:17
ओपन / कमेंट
2023-04-21 05:32:33
ஏப்ரல்.21:
இன்று
தேசிய குடிமைப் பணிகள் தினம்!

நாட்டின் வளர்ச்சியில் 'சிவில் சர்வீசஸ் ' எனும் குடிமைப் பணி அதிகாரிகளின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது.

1947 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி டெல்லி 'மெட்கால்பே' இல்லத்தில் இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சரான வல்லபாய் படேல், இந்திய குடிமைப் பணி அதிகாரிகளின் முதல் குழுவிடம் (பேட்ஜ்) ஆற்றிய உரையை நினைவு கூர்ந்திடும் வகையில் 2006 ஏப்ரல் 21ல் தேசிய குடிமைப் பணிகள் தினம் கொண்டாடப்பட்டது.

சர்தார் வல்லபாய் படேல் தான் குடிமைப் பணிகளின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

மாறிவரும் காலத்தின் சவால்களை எதிர்கொள்ள அர்ப்பணிப்பு நோக்குடன் அதனை மன உறுதியுடன் செயல்படுத்துவதற்காக இத்தினம் கொண்டாடப்படுகிறது.

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமாக கருதப்படும் ஐ.ஏ.எஸ்.,(நிர்வாகம்), ஐ.பி.எஸ்.,(காவல்துறை), ஐ.எப்.எஸ். (வனத்துறை) அதிகாரிகளை கௌரவிக்கும் வகையில் ஆண்டு தோறும் ஏப்ரல் 21-ம் தேதி தேசிய குடிமைப் பணிகள் தினமாக கொண்டாடப்படுகின்றது.

இன்றைய நாளில் மிகச் சிறந்த சேவை புரிந்த அரசு அதிகாரிகளுக்கு, சிறந்த பொது சேவைக்கான பிரதமர் விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
8.3K viewsTNPSC THAMIZH, edited  02:32
ओपन / कमेंट
2023-04-20 10:35:35
ஏப்ரல்.20:
இன்று
ஐநா உலக சீன மொழி தினம்!

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 20 ஆம் தேதி, ஐக்கிய நாடுகள் சபை உலக சீன மொழி தினமாக அனுசரிக்கிறது.

ஐ.நாவின் கூற்றுப்படி, இந்த கொண்டாட்டத்தின் குறிக்கோள் "அமைப்புக்குள் உள்ள ஆறு அதிகாரப்பூர்வ மொழிகளின் சமமான பயன்பாட்டை ஊக்குவிப்பதாகும், அதே நேரத்தில் பன்மொழி மற்றும் கலாச்சார பன்முகத்தன்மையைக் கொண்டாடுகிறது."
 
நவம்பர் 12, 2010 அன்று, தொடக்க சீன மொழி தினம் கொண்டாடப்பட்டது.

2011 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 20 ஆக மாற்றப்பட்டது.

இது ஏப்ரல் 20 ஆம் தேதி புகழ்பெற்ற சீன வரலாற்றாசிரியர் காங்ஜியை கௌரவிப்பதும் மற்றும் சீன நாட்காட்டியில் உள்ள "தினை மழை" (குயு) உடன் தொடர்புடையது என்பதும் காரணமாகும். 
4.7K viewsTNPSC THAMIZH, edited  07:35
ओपन / कमेंट
2023-04-19 09:45:08
ஏப்ரல்.19:
இன்று
இந்தியாவின் முதல் செயற்கை கோளான ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்ட தினம்!

ஆரியபட்டா இந்தியாவின் முதல் செயற்கைகோள் ஆகும்.

இந்தியாவில் வானவியலில் சிறந்து விளங்கிய ஆரியபட்டரின் பெயரை இந்த முதல் செயற்கை கோளுக்கு சூட்டினர்.

ஆரியபட்டா செயற்கைக் கோளானது, சோவியத் யூனியன் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.

இதன் எடை 360கிகி ஆகும்.

சோவியத் ரஷ்யாவின் ராக்கெட் மூலம், கபூஸ்டியன்யார் ஏவுதளத்தில் இருந்து 1975-ல் ஏப்ரல் 19ஆம் தேதி ஏவப்பட்டது.

பூமியில் இருந்து சுமார் 619 கிமீ உயரத்தில் பறந்து வந்தது இந்த ஆரியபட்டா.

எனினும், விண்வெளியில் இது 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டது.

செயற்கைகோளுக்கு மின்சாரத்தை தயாரித்து அனுப்பும் பகுதி பழுதானதால், இந்த செயற்கைக் கோள் தொடர்ந்து செயல்படாமல் போனது.

பிறகு 1979ஆம் ஆண்டு மீண்டும் ரஷ்யாவின் உதவியுடன் பாஸ்கரா என்ற செயற்கைக் கோளை அனுப்பியது.

அதன்பிறகு 1980-ல் இருந்து இந்தியா சுயமாக செயற்கைக் கோளை ஏவ ஆரம்பித்தது.
8.1K viewsTNPSC THAMIZH, 06:45
ओपन / कमेंट
2023-04-19 06:08:28
கதிரியக்கத்தைக் கண்டறிந்தமைக்காக 1903 ஆம் ஆண்டு ஹென்றி பெக்கெரல், மேரி கியூரி ஆகியோருடன் இணைந்து இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்ற இயற்பியலாளர் பியரி கியூரி நினைவு தினம் இன்று (ஏப்ரல்.19!
7.9K viewsTNPSC THAMIZH, edited  03:08
ओपन / कमेंट
2023-04-19 05:27:40
ஏப்ரல்.19:
இன்று
குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன் என்று கூறிய
சார்லஸ் டார்வின் நினைவு தினம்!

பரிணாம வளர்ச்சியியலின் தந்தை என்று அழைக்கப்படும் சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தார்.

அறிவியல் வளர்ச்சியில் டார்வினின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இவருடைய பிறந்த தினம் உலகம் முழுவதும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது.

தனது பேராசிரியரின் மூலமாக தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ்.பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார்.

தன் கண்டுபிடிப்புகளையும், அனுபவங்களையும் திரட்டி The Voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கி On the Origin of Species என்ற புத்தகத்தை எழுதினார்.

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து புதிய சிந்தனையை உருவாக்கிய சார்லஸ் டார்வின் 1882 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று தனது 73வது வயதில் மறைந்தார்.
8.2K viewsTNPSC THAMIZH, 02:27
ओपन / कमेंट
2023-04-19 04:49:20 ஏப்ரல்.19:
இன்று
புகழ்பெற்ற புலி வேட்டைக்காரரான ஜிம் கார்பெட் பிறந்த நாள்!

ஆங்கிலேயரான ஜிம் கார்பெட், இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலம் நைனிடாலில், 25-07-1875இல் பிறந்தார்.

அவருடைய பெற்றோர் கோடைக் காலத்தில் நைனிடாலிலும், குளிர்காலத்தில் தற்போதைய உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள காலதுங்கி என்கிற காடுகளால் சூழ்ந்த கிராமத்திலும் வசித்து வந்தார்கள்.

சிறு வயதிலிருந்தே ஜிம் கார்பெட்டிற்கு காடுகளில் சுற்றித் திரியும் வாய்ப்பு கிடைத்ததால் காடுகளையும் காட்டுயிர்களையும் அவர் நேசித்தார்.

சாகசத்திற்காக வேட்டையிலும் ஈடுபட்டார். அவருடைய காலத்தில் வேட்டை என்பது கௌரவமாகக் கருதப்பட்டது.

அவரின் கூரியக் கண்பார்வை, கேட்கும் சக்தி, நினைவாற்றல், துணிச்சல், விலங்குகள், பறவைகள் போல ஒலியெழுப்பும் திறன், இரவில் நிலவு வெளிச்சத்திலும், நட்சத்திர ஒளியிலும்கூட சுடும் ஆற்றல், புலி, சிறுத்தை ஆகியவற்றின் காலடித் தடத்தை வைத்து அவற்றின் வயது, பாலினம், ஆரோக்கியம் ஆகிய அம்சங்களைக் கணித்தல் போன்ற திறமைகள் காடுகளின் ‘ஷெர்லாக் ஹோம்ஸ்' என அவரைப் போற்ற வைத்தது.

ஜிம் கார்பெட் காலமாகி 68 ஆண்டுகள் ஆனபோதிலும், இன்றுவரை அவருடைய வேட்டை இலக்கிய நூல்கள் விற்பனையாகி வருகின்றன.

அவருடைய வாழ்நாளில் 1,500 மனித உயிர்களைப் பலிகொண்ட 12 ஆட்கொல்லிகளை வேட்டையாடி குமாயுன் மலைப்பிரதேச மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.

காலப்போக்கில் வேட்டையாடுவதைத் தவிர்த்துவிட்டு‌, புலிகளைப் படமெடுக்கத் தொடங்கினார்.

அவர் எடுத்த படங்கள் லண்டன் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் இப்போதும் காணக்கிடைக்கின்றன.

அவர் வாழ்ந்த காலதுங்கியின் அருகிலிருந்த ஹால்த்வானி என்ற 221 ஏக்கர் பரப்பளவுள்ள கைவிடப்பட்ட கிராமத்தை ரூ1,500/-க்கு வாங்கி புதர்கள், செடிகளை நீக்கி, நிலப் பகுதிகளாகப் பிரித்து, அத்துடன் வீடுகளையும் கட்டி, தண்ணீர் வசதிக்காக சிமென்ட் கால்வாய்களையும், விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காக்க, ஆறு அடி உயரச் சுற்றுச்சுவரையும் கிராமத்தைச் சுற்றி அமைத்து, அந்த வீடுகளில் மலைவாழ் மக்களைக் குடியமர்த்தினார்.

அங்கிருந்த வீடுகளுக்கும் நிலங்களுக்கும், அவரே வரி செலுத்திவந்தார்.

காலதுங்கியில் இருந்த அவரின் வீடு‌, ஒரு சிறிய மருத்துவமனையாகவே செயல்பட்டது.

அவருடைய தமக்கை மேகி என்பவர் மருத்துவச் செவிலியர் பயிற்சி பெற்றிருந்ததால், ஒவ்வொரு நாளும் அங்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக வைத்தியம் செய்யப்பட்டது.

இந்தியா 1947ல் சுதந்திரம் பெற்றபோது அவரும், அவருடைய தமக்கையும் கென்யா சென்று அங்கேயே தங்குவது என்று முடிவெடுத்தனர். ஆதலால் ஹால்த்வானி கிராமத்தை அந்த மக்களுக்கே இலவசமாக வழங்கி விட்டார்.

ஜிம் கார்பெட் கென்யாவில் உள்ள நையேரியில் 19-04-1955 அன்று மாரடைப்பால் காலமானார். .
7.7K viewsTNPSC THAMIZH, 01:49
ओपन / कमेंट