Get Mystery Box with random crypto!

ஏப்ரல்.19: இன்று இந்தியாவின் முதல் செயற்கை கோளான ஆர்யபட்டா வி | ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

ஏப்ரல்.19:
இன்று
இந்தியாவின் முதல் செயற்கை கோளான ஆர்யபட்டா விண்ணில் ஏவப்பட்ட தினம்!

ஆரியபட்டா இந்தியாவின் முதல் செயற்கைகோள் ஆகும்.

இந்தியாவில் வானவியலில் சிறந்து விளங்கிய ஆரியபட்டரின் பெயரை இந்த முதல் செயற்கை கோளுக்கு சூட்டினர்.

ஆரியபட்டா செயற்கைக் கோளானது, சோவியத் யூனியன் உதவியுடன் தயாரிக்கப்பட்டது.

இதன் எடை 360கிகி ஆகும்.

சோவியத் ரஷ்யாவின் ராக்கெட் மூலம், கபூஸ்டியன்யார் ஏவுதளத்தில் இருந்து 1975-ல் ஏப்ரல் 19ஆம் தேதி ஏவப்பட்டது.

பூமியில் இருந்து சுமார் 619 கிமீ உயரத்தில் பறந்து வந்தது இந்த ஆரியபட்டா.

எனினும், விண்வெளியில் இது 5 நாட்கள் மட்டுமே செயல்பட்டது.

செயற்கைகோளுக்கு மின்சாரத்தை தயாரித்து அனுப்பும் பகுதி பழுதானதால், இந்த செயற்கைக் கோள் தொடர்ந்து செயல்படாமல் போனது.

பிறகு 1979ஆம் ஆண்டு மீண்டும் ரஷ்யாவின் உதவியுடன் பாஸ்கரா என்ற செயற்கைக் கோளை அனுப்பியது.

அதன்பிறகு 1980-ல் இருந்து இந்தியா சுயமாக செயற்கைக் கோளை ஏவ ஆரம்பித்தது.