Get Mystery Box with random crypto!

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
चैनल से विषय:
Tnpsc
टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
चैनल से विषय:
Tnpsc
चैनल का पता: @aatchithamizh
श्रेणियाँ: तथ्यों
भाषा: हिंदी
ग्राहकों: 112.66K
चैनल से विवरण

ஆட்சித்தமிழில் சேருங்கள்;
ஆட்சித்தலைவராக மாறுங்கள்!

Ratings & Reviews

4.50

0 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश

2023-04-30 06:18:07
3.8K viewsTNPSC THAMIZH, 03:18
ओपन / कमेंट
2023-04-29 05:49:21 ஏப்ரல்.29:
இன்று பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள்!

“தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை” எனப் பாடி தன் வாழ்நாள் முழுவதும் தமிழுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர் புரட்சிக் கவிஞர் பாரதி தாசன்.

1891-ஆம் ஆண்டு ஏப்ரல் 29 ஆம் நாள் புதுச்சேரியில் கனகசபை, இலக்குமி தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார்.

பெற்றோர் இவருக்கு வைத்த பெயர் கனக சுப்புரத்தினம்.

18 வயதில், காரைக்காலில் உள்ள பள்ளியில் அரசு ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார்.

கே.எஸ்.ஆர்., கண்டெழுதுவோன், கிறுக்கன், கிண்டல்காரன், கே.எஸ். பாரதிதாசன் போன்ற பல்வேறு புனைபெயர்களில் கவிதைகள், கட்டுரைகள் எழுதினார் .

பாரதியார் மீது பற்று கொண்டிருந்த கனகசுப்புரத்தினம், அவரை நேரில் சந்தித்து உரையாடி தனது மானசீக குருவாகவும் ஏற்றுகொண்டார்.

அவர் மீது கொண்ட பற்றின் காரணமாகவே தனது பெயரை பாரதிதாசன் என மாற்றிக் கொண்டார்.

1928-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தில் இணைந்தார்.

திராவிட மேடைகளில் கவிஞரின் கவிதைகள் முரசென முழுங்கின.

1929ம் ஆண்டு ‘குடியரசு‘ ‘பகுத்தறிவு’ ஏடுகளில் பாடல், கட்டுரை, கதை எழுதினார்.

குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன் முதலில் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புப் பெற்றார்.

தமிழியக்கம், தமிழச்சியின் கத்தி, தமிழுக்கு அமுதென்று பேர் போன்ற படைப்புகள் தமிழ்த்தேசிய அரசியலை கூர்மைபடுத்தின.

சென்னை சாந்தோம் சாலையில் ‘முத்தமிழ் மன்றம்’ நிறுவினார்.

1946ம் ஆண்டு அறிஞர்களின் வாழ்த்து, பாராட்டுக் கவிதைகள், கட்டுரைகள் கொண்ட ‘புரட்சிக் கவிஞர்’ என்னும் தொகுப்பு நூலை முல்லை முத்தையா வெளியிட்டார்.

அதிலிருந்து இவர் புரட்சிக் கவிஞர் எனப் பாராட்டப்பட்டார்.

1954-ஆம் ஆண்டு புதுவை சட்டமன்றத் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்திற்கு தலைமை வகித்தார்.

1964-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு ஏப்ரல் 21-ஆம் தேதி சென்னையில் இயற்கை எய்தினார்.

1982-ஆம் ஆண்டு திருச்சியில் நிறுவப்பட்ட பல்கலைக் கழகத்திற்குப் பாவேந்தரின் நினைவாகப் பாரதிதாசன் பல்கலைக்கழகம் எனத் தமிழக அரசு பெயர் சூட்டிப் பெருமை சேர்த்தது.
9.6K viewsTNPSC THAMIZH, edited  02:49
ओपन / कमेंट
2023-04-29 05:49:15
8.2K viewsTNPSC THAMIZH, edited  02:49
ओपन / कमेंट
2023-04-29 05:09:28
8.6K viewsTNPSC THAMIZH, 02:09
ओपन / कमेंट
2023-04-28 18:47:07 GROUP- I RESULT
10.8K viewsTNPSC THAMIZH, edited  15:47
ओपन / कमेंट
2023-04-28 13:14:03
12.0K viewsTNPSC THAMIZH, 10:14
ओपन / कमेंट
2023-04-27 14:42:55
2.9K viewsTNPSC THAMIZH, 11:42
ओपन / कमेंट
2023-04-27 07:05:59 TNPSC:
JUNIOR SCIENTIFIC OFFICER தேர்வுக்கான புதிய அறிவிப்பு!

(TAMIL NADU FORENSIC SCIENCES SUBORDINATE SERVICE)
6.9K viewsTNPSC THAMIZH, edited  04:05
ओपन / कमेंट
2023-04-26 10:53:45 அறிவு சார் சொத்துரிமை என்றால் என்ன ?

சொத்துகளை, பொதுவாகத் தொட்டுணரக் கூடிய சொத்துகள் (tangiable assets), தொட்டுணர முடியாத சொத்துகள் (intangiable assets) என இரண்டாகப் பிரிப்பார்கள்.

நிலம், கட்டடம், வாகனம் ஆகியவை தொட்டுணரக்கூடிய சொத்துகள்.

அறிவுசார் சொத்துகள் தொட்டுணர முடியாத சொத்துகள்.

வணிகக் குறிகள் (Trademark), பதிப்புரிமை (காப்புரிமை), புத்தாக்க உரிமைகள் அல்லது காப்பொருளுரிமை (Patent), வடிவமைப்புகள் (Design), நில இயல் குறியீடுகள் (Geographical Indications), தாவர வகைகள் மற்றும் உழவர்களின் உரிமைகள் பாதுகாப்பு (Plant Varieties and Plant Breeders Rights), ஒருங்கிணை மின்சுற்று (Integrated Circuits) ஆகியவை அறிவுசார் சொத்துகள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. 

எப்படி தொட்டுணரக்கூடிய சொத்துகளுக்கு உரிமை கொண்டாட, பாதுகாக்க வழிமுறைகள் சட்டங்கள் உள்ளனவோ அது போன்று அறிவுசார் சொத்துகளையும் பாதுகாக்கச் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 
10.5K viewsTNPSC THAMIZH, 07:53
ओपन / कमेंट
2023-04-26 10:46:59
ஏப்ரல்.26:
இன்று அறிவுசார் சொத்துரிமை தினம்!

அறிவுசார் சொத்துரிமை தினம் ஆண்டுதோறும் ஏப்ரல் 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

அன்றாட வாழ்வில் அறிவுசார் சொத்துரிமையின் பங்கு என்ன என்பது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கம். 

ஒருவரது அறிவின் வெளிப்பாடான கருத்துகள், வணிக முறைகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், கலை படைப்புகள் போன்றவை அறிவுசார் சொத்தாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

எழுத்தாளர்கள், கலைஞர்கள், கண்டுபிடிப்பாளர்கள், வணிகர்கள் தங்களின் அறிவுசார் சொத்துகளை மற்றவர்கள் முறைகேடாக திருடிவிடாமல் பாதுகாப்பது அவசியமாகிறது.

இதற்கு அதை காப்புரிமை, பதிப்புரிமை செய்வது அவசியம்.

இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப்ரல் 26ம் தேதியான இன்று, உலக அறிவுசார் சொத்துரிமை தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அறிவுசார் சொத்துரிமை அலு வலகங்கள் தற்போது சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதா பாத்தில் உள்ளன.

அறிவுசார் சொத்துரிமை இயக்கம் சார்பில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப் படுகிறது.
9.3K viewsTNPSC THAMIZH, edited  07:46
ओपन / कमेंट