Get Mystery Box with random crypto!

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
चैनल का पता: @aatchithamizh
श्रेणियाँ: तथ्यों
भाषा: हिंदी
ग्राहकों: 95.49K
चैनल से विवरण

ஆட்சித்தமிழில் சேருங்கள்;
ஆட்சித்தலைவராக மாறுங்கள்!

Ratings & Reviews

4.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

2

4 stars

1

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 11

2023-04-15 10:16:23
நமது வழிகாட்டியும் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவருமான டாக்டர் ஆர்.நட்ராஜ் ஐ.பி.எஸ் அவர்கள்,
நேற்று தீயணைப்போர் தியாகிகள் தின வீர வணக்க அஞ்சலி செலுத்திய போது..
4.7K viewsTNPSC THAMIZH, 07:16
ओपन / कमेंट
2023-04-15 10:03:15
ஏப்ரல்.15:
இன்று உலக கலை தினம்!

உலக கலை தினம் என்பது நுண்கலைகளின் சர்வதேச கொண்டாட்டமாகும்.

இது உலகளவில் ஆக்கப்பூர்வமான செயல்பாடு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதற்காக சர்வதேச கலை சங்கம் (IAA) அறிவித்தது .

குவாடலஜாராவில் உள்ள சர்வதேச கலைச் சங்கத்தின் 17வது பொதுச் சபையில் ஏப்ரல் 15ஆம் தேதியை உலகக் கலை தினமாக அறிவிக்கும் முன்மொழிவு முன்வைக்கப்பட்டது .

முதல் கொண்டாட்டம் 2012 இல் நடைபெற்றது.

லியோனார்டோ டா வின்சியின் பிறந்தநாளை முன்னிட்டு தேதி முடிவு செய்யப்பட்டது .

உலக அமைதி , கருத்து சுதந்திரம் , சகிப்புத்தன்மை , சகோதரத்துவம் மற்றும் பன்முக கலாச்சாரம் மற்றும் பிற துறைகளில் கலையின் முக்கியத்துவத்தின் சின்னமாக டாவின்சி தேர்ந்தெடுக்கப்பட்டார்
4.6K viewsTNPSC THAMIZH, 07:03
ओपन / कमेंट
2023-04-15 09:48:48
ஏப்ரல் 15:
இன்று தேசிய திருநங்கையர் தினம்!

ஏப்ரல் 15, 2008 ஆம் ஆண்டு தமிழக அரசால் திருநங்கைகளுக்கு என தனி நலவாரியம் ஒன்று அமைக்கப்பட்டது

திருநங்கைகளைச் சிறப்பிக்கும் வகையில் இந்நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை திருநங்கைகள் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற திருநங்கைகளின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு இவ்வறிவிப்பை வெளியிட்டது.

திருநங்கைகளின் சமூகப் பாதுகாப்பைக் கருதி, அவர்களின் சிறப்பை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15 ஆம் நாளை திருநங்கையர் நாள் எனக் கொண்டாட தமிழக அரசு மார்ச் 11, 2011 அன்று அரசாணை பிறப்பித்தது.

கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 15ம் தேதி உச்சநீதிமன்றம் திருநங்கைகளுக்கு மூன்றாம் பாலினம் என்ற அங்கீகாரம் கொடுத்து தீர்ப்பு வழங்கியது.

இந்த நாளை ஆண்டு தோறும் தேசிய திருநங்கையர் தினமாகக் திருநங்கைகள் கொண்டாடி வருகின்றனர்.
4.5K viewsTNPSC THAMIZH, edited  06:48
ओपन / कमेंट
2023-04-15 08:12:14 https://www.dinamani.com/tamilnadu/2023/apr/15/free-training-tomorrow-at-ias-academy-3991608.html
5.1K viewsTNPSC THAMIZH, 05:12
ओपन / कमेंट
2023-04-15 06:14:48
ஏப்ரல்.14:
தீயணைப்போர் தியாகிகள் தினம்!

ஒவ்வோர் ஆண்டும் ஏப்.14-ம் தேதி இந்தியா முழுவதிலும் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

1944-ம் ஆண்டு ஏப்.14-ம் தேதி மும்பை துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, ‘எஸ்எஸ் போர்ட் ஸ்டைக்கின்ஸ்’ என்ற கப்பல் தீ விபத்துக்குள்ளானது.

இக்கப்பலில் 1,200 டன் வெடிபொருட்கள் மற்றும் எண்ணெய் வைக்கப்பட்டிருந்தது.

உடனடியாக மும்பை தீயணைப்புத் துறை வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, கப்பலில் உள்ள வெடி பொருட்கள் வெடித்து சிதறியதில் மும்பை தீயணைப்பு துறையைச் சேர்ந்த 66 வீரர்கள் வீரமணம் அடைந்தனர்.

அவர்கள் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் இந்திய அரசால் தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

ஒவ்வோர் ஆண்டும் இந்திய அரசால் ஒருதலைப்பு வழங்கப்பட்டு அந்த தலைப்பின்கீழ் நாடு முழுவதும் ஏப்.14 முதல் ஒரு வாரகாலம் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.

2023 ஆம் ஆண்டு, ‘தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும்’ என்ற தலைப்பின்கீழ் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட உள்ளது.
6.4K viewsTNPSC THAMIZH, 03:14
ओपन / कमेंट
2023-04-15 05:26:01
6.3K viewsTNPSC THAMIZH, 02:26
ओपन / कमेंट
2023-04-14 16:07:38
ஏப்ரல் 14:
இன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள்!

இந்திய அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த புரட்சியாளர் அம்பேத்கரின் பிறந்தநாள் இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் உள்ள மோவ் எனும் நகரில் பிறந்தார்.

தாழ்த்தப்பட்டோரின் விடுதலைக்காக "பகிஷ்கரித் ஹித்தஹாரிணி" என்ற இயக்கத்தை தொடங்கினார்.

இரண்டாம் வட்டமேசை மாநாட்டில் உலகமே வியக்கும் வகையில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைக்காக உரையாற்றினார்.‌‌

1946 ஆம் ஆண்டு சித்தார்த்தா சட்டக் கல்லூரியை தொடங்கினார்.

சுதந்தி‌ர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக நியமிக்கப்பட்டார் அம்பேத்கர்.

பிறப்பு, இனம், மொழி, மத, சாதி பேதமின்றி இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அம்பேத்கர் உருவாக்கினார்.

8 அட்டவணைகளை கொண்ட இந்தச் சட்டம், 1949ஆம் ஆண்டு ‌நவம்பர் 26 ஆம் தேதி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட்டது.

1956ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் காலமானார்.

டாக்டர் அம்பேத்கரின் பிறந்தநாள் - ஏப்ரல் 14 அன்று அரசு விழாவாக மட்டுமின்றி, இந்தியா முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களால் ஒவ்வோர் ஆண்டும் தன்னெழுச்சியாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.
9.3K viewsTNPSC THAMIZH, edited  13:07
ओपन / कमेंट
2023-04-14 06:43:16 அனைவருக்கும்
இனிய
சித்திரை முதல் நாள் வாழ்த்துகள்...
*
நம்மை
உழைக்கத் தூண்டுவதும்
நம்மை உயர்த்துவதும்
எல்லாம்
நம் சிந்தனைகள் தான்!
*
சித்திரை மாதத்தில்
சிந்தனை மாறட்டும்!
சிறந்த சிந்தனைகளால்
செயல்திறன் சிறக்கட்டும்!
*
உளம் உயர
வளம் வழங்க
நலம் நல்க
உளம் நிறைந்த
நல்வாழ்த்துகள்...
*
ஆட்சித்தமிழுடன்...
ச.வீரபாபு
*
10.1K viewsTNPSC THAMIZH, edited  03:43
ओपन / कमेंट
2023-04-12 06:21:01 ASSISTANT JAILOR 2023 தேர்வுக்கான அறிவிப்பு!

(MEN & WOMEN)

(TAMIL NADU JAIL SUBORDINATE SERVICE)
7.8K viewsTNPSC THAMIZH, edited  03:21
ओपन / कमेंट
2023-04-08 19:57:21
13.2K viewsTNPSC THAMIZH, 16:57
ओपन / कमेंट