Get Mystery Box with random crypto!

ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
टेलीग्राम चैनल का लोगो aatchithamizh — ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி
चैनल का पता: @aatchithamizh
श्रेणियाँ: तथ्यों
भाषा: हिंदी
ग्राहकों: 95.49K
चैनल से विवरण

ஆட்சித்தமிழில் சேருங்கள்;
ஆட்சித்தலைவராக மாறுங்கள்!

Ratings & Reviews

4.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

2

4 stars

1

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 13

2023-04-06 18:32:59
ஏப்ரல்.6:
இன்று வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம்!

International Day of Sport for Development and Peace (IDSDP)

உடல், மனதை ஆரோக்கியமாக வைக்க விளையாட்டு உதவுகிறது.

பல்வேறு மொழி, இனம், கலாசார வேறுபாடுகளை கடந்து விளையாட்டு உலக மக்களை ஒருங்கிணைக்கிறது.

விளையாட்டுக்கு உலகை மாற்றும் சக்தி உண்டு. சர்வதேச அளவில் நிலையான வளர்ச்சி, அமைதி, ஒற்றுமை, மனிதநேயம் ஏற்பட விளையாட்டு வழிவகுக்கிறது.

2013ம் ஆண்டு ஆகஸ்ட் 23 இல் ஐ.நா. பொதுச் சபையால் இந்த தினம் உருவாக்கப்பட்டது.

2014 ம் ஆண்டு ஏப்ரல் 6 முதல் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியால் ஆதரிக்கப்பட்டது.

இந்த தேதி 1896-இல் ஏதென்ஸில் நடைபெற்ற முதல் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்கத்தை குறிக்கிறது என்பது கூடுதல் தகவல்.

ஐ.நா., சார்பில் ஏப். 6ல் வளர்ச்சி மற்றும் அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் கடை பிடிக்கப்படுகிறது

இந்த ஆண்டிற்கான மையக்கருத்து 'மக்கள் மற்றும் கிரகத்துக்கான மதிப்பெண்' ( “Score for People and Planet”) என்பதாகும்.
13.6K viewsTNPSC THAMIZH, edited  15:32
ओपन / कमेंट
2023-04-06 15:24:42 TNPSC
குரூப் - 4 தேர்வு:
சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு!

GROUP -IV
(Certificate Verification List)
13.1K viewsTNPSC THAMIZH, edited  12:24
ओपन / कमेंट
2023-04-05 18:53:46
ஏப்ரல் 5 :

இன்று தேசிய கடல்சார் தினம்!


தேசிய கடல்சார் தினம் 1919 ஆம் ஆண்டு மும்பையிலிருந்து லண்டனுக்கு சிந்தியா ஸ்டீம் நேவிகேஷனின் முதல் பயணத்தை குறிக்கிறது.

கிழக்கே வங்கக்கடல், தெற்கே இந்தியப் பெருங்கடல், மேற்கே அரபிகடலென்று மூன்று பக்கமும் கடல் பகுதியை கொண்ட தீபகற்ப (peninsular) நாடு தான் இந்தியா.

ஐரோப்பியர்கள் எல்லாம் கப்பல் கட்டும் காலத்திற்கு முன்னரே கடல் தாண்டி நாடுகளை கைப்பற்றிய "கடாரம் கொண்டான்" ராஜேந்திர சோழன் வாழ்ந்த நாடு நம் நாடு.


வரலாறு தொடங்கிய காலம் முதல் இன்று வரை இந்திய பெருங்கடலின் முக்கிய ஆளுமையாக இந்தியா தான் இருந்து வருகிறது.

அதனால் அதன் கடல் சார் வணிகத்தை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 5 அன்று தேசிய கடல்சார் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30 அன்று தொடங்கும் தேசிய கடல் வாரத்தின் கடைசி நாளில் தேசிய கடல்சார் தினம் (national maritime day ) கொண்டாடப்படுகிறது.

இது இந்தியாவின் வளமான கடல்சார் வரலாற்றைக் கொண்டாடுகிறது.

2023 ஆண்டு கொண்டாட்டம் என்பது கடல் சார் தினம் தொடங்கிய 60 வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது.
15.9K viewsTNPSC THAMIZH, edited  15:53
ओपन / कमेंट
2023-04-05 07:36:49 **
நீங்
கள் யார் என்று
நீங்கள் சிந்தித்துக்
கொண்டிருக்கிறீர்களோ,
அவர் அல்லர்
நீங்கள்.
ஆனால் நீங்கள்
எப்படிச்
சிந்திக்கிறீர்களோ,
நீங்கள்
அப்படிப்பட்டவராக
ஆவீர்கள்!
-நார்மன் வின்சென்ட் பீல்
**
15.6K viewsTNPSC THAMIZH, 04:36
ओपन / कमेंट
2023-04-04 20:20:45
16.2K viewsTNPSC THAMIZH, 17:20
ओपन / कमेंट