Get Mystery Box with random crypto!

ஏப்ரல்.19: இன்று குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனி | ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

ஏப்ரல்.19:
இன்று
குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவன் மனிதன் என்று கூறிய
சார்லஸ் டார்வின் நினைவு தினம்!

பரிணாம வளர்ச்சியியலின் தந்தை என்று அழைக்கப்படும் சார்லஸ் ராபர்ட் டார்வின் 1809ஆம் ஆண்டு பிப்ரவரி 12ஆம் தேதி இங்கிலாந்திலுள்ள ஷ்ராஸ்பெரி என்ற இடத்தில் பிறந்தார்.

அறிவியல் வளர்ச்சியில் டார்வினின் பங்களிப்பை முன்னிலைப்படுத்தவும், விஞ்ஞானத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் இவருடைய பிறந்த தினம் உலகம் முழுவதும் டார்வின் தினமாக கொண்டாடப்படுகிறது.

தனது பேராசிரியரின் மூலமாக தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக புறப்படவிருந்த ஹெச்.எம்.எஸ்.பீகில் என்ற கப்பலின் கேப்டன் ராபர்ட் ஃபிட்ஸ்ராயின் அழைப்பைப் பெற்றார்.

தன் கண்டுபிடிப்புகளையும், அனுபவங்களையும் திரட்டி The Voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார்.

உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கி On the Origin of Species என்ற புத்தகத்தை எழுதினார்.

உயிரினங்களின் பரிணாம வளர்ச்சி குறித்து புதிய சிந்தனையை உருவாக்கிய சார்லஸ் டார்வின் 1882 ஆம் ஆண்டு ஏப்ரல் 19 அன்று தனது 73வது வயதில் மறைந்தார்.