Get Mystery Box with random crypto!

நவம்பர் 22: இன்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி | ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

நவம்பர் 22:
இன்று
அமெரிக்க முன்னாள் அதிபர் ஜான் எப் கென்னடி நினைவு தினம்!

அமெரிக்காவின் 35-வது அதிபராக பதவி வகித்தவர் ஜான் எப் கென்னடி.

இவர் கடந்த மே 29, 1917-ம் தேதி பிறந்தவர்.

கடந்த 1961-ம் ஆண்டு முதல் 1963-ம் ஆண்டு வரை அதிபராக பதவி வகித்தார்.

இரண்டாம் உலகப் போரின் போது கடற்படை லெப்டினன்ட்டாகப் பணிபுரிந்தார்.

போரின் முடிவில் அவர் தீவிர அரசியலுக்குத் திரும்பினார்.

கடந்த 1960-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில், குடியரசுக் கட்சி வேட்பாளர் ரிச்சார்ட் நிக்சனைத் தோற்கடித்தார்.

புலிட்சர் விருது பெற்ற ஒரே அமெரிக்க அதிபர் என்ற பெருமை இவருக்கு உள்ளது.

கடந்த 1963-ம் ஆண்டு நவம்பர் 22-ம்தேதி டெக்சாஸ், டல்லாஸ் நகரில் கென்னடி சுட்டுக் கொல்லப்பட்டார்.

உலகிலேயே மிக திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலையாக இன்று வரை பேசப்படுகிறது.