Get Mystery Box with random crypto!

நவம்பர்.20: இன்று நோபல் பரிசு பெற்ற முதல் பெண் படைப்பாளி | ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடெமி

நவம்பர்.20:

இன்று நோபல் பரிசு பெற்ற முதல் பெண் படைப்பாளி செல்மா லேகர்லாவ் (Selma Lagerlof) பிறந்த தினம்!

இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியும், ஸ்வீடனை சேர்ந்த படைப்பாளியுமான செல்மா லேகர்லாவ் (Selma Lagerlof) பிறந்த தினம் இன்று.

ஸ்வீடன் நாட்டின் வார்ம்லேண்ட் நகரில் (1858) பிறந்தார். இடுப்பில் காயத்துடன் பிறந்தார் செல்மா.

ஸ்டாக்ஹோம் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

லேண்ட்ஸ்குரோனா நகரப் பள்ளியில் ஆசிரியராக 1885-ல் சேர்ந்தார்.

ஆசிரியர் பணிக்கு இடையே ‘கோஸ்ட்டா பெர்லிங்ஸ் சகா’ என்ற தனது முதல் நாவலை எழுதினார்.

தன் படைப்புகளுக்கு கருத்துகளை சேகரிக்க  இத்தாலிக்கு சென்றவர், ‘ஆன்டிகிறிஸ்ட்ஸ் மிராக்ளர்’ என்ற புத்தகத்தை எழுதினார்.

1902-ல் வெளிவந்த ‘ஜெருசலேம்’ என்ற நூல் அமோக வரவேற்பை பெற்றது.

பள்ளிக் குழந்தைகளுக்காக ‘தி ஒண்டர்ஃபுல் அட்வென்சர்ஸ் ஆஃப் நீல்ஸ்’ என்ற நூலை எழுதினார்.

இது உலக அளவில் குழந்தைகளால் மிகவும் விரும்பப்படும் புத்தகம் என்ற பெருமையைப் பெற்றது.

ஸ்வீடன் இலக்கியக் கழகத்தின் தங்கப் பதக்கத்தை 1904-ல் பெற்றார்.

1907-ல் உப்சலா பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கியது.

ஜெருசலேம் நகரில் ஒரு தெருவுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசை 1909-ல் பெற்றார்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வறுமையை வென்று, சுய முயற்சியாலும் அபாரத் திறமையாலும் உலகப் புகழ்பெற்ற படைப்பாளியாக பரிணமித்த செல்மா லேகர்லாவ் 1940-ம் ஆண்டு மறைந்தார்