Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 89

2021-05-03 13:59:32
ஒரு பக்கம் மக்கள் Corona தொற்று காரணமாக தினமும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்து கொண்டு இருக்கும் போது மறுபுறம் மக்களை கூட்டமாக கூடுவதற்கு அனுமதித்து தொற்றின் வேகத்தை அதிகப்படுத்தும் அலட்சியப்போக்கு நிலவி வருகிறது.
சமீபத்தில் மதுரை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் மீன்பிடி திருவிழா என்ற காரணத்தை சொல்லி நூற்றுக்கணக்கான மக்கள் மாஸ்க் இல்லாமல், தனி மனித இடைவெளி இல்லாமல் ஒன்று கூடியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் இந்த நிகழ்வை தடுக்க தவறியது மிகப்பெரிய தவறு. இந்த தவறினால் தொற்று பரவல் அதிகமாவதை தடுக்க அந்த விழாவில் பங்கேற்றவர்கள் அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். நோய் தொற்று இருப்பவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்கள் மேலும் நோயை பரப்பாமல் தடுக்க வேண்டும்.
மாவட்ட அதிகாரிகள் உடனடியாக இந்த பணியை துவக்கி பல உயிர்களை காப்பாற்றுவார்களா?
72 views10:59
ओपन / कमेंट
2021-05-03 10:46:54
We Are Watching!
வெளிப்படையான அரசு நிர்வாகம், ஊழலை தடுக்க, ஊழல் செய்பவர்களை தண்டிக்க தேவையான சட்ட திருத்தங்கள் ஆகியவற்றை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிதாக பதவி ஏற்கும் திமுக அரசு நிறைவேற்றும் என்ற நம்பிக்கையுடன் வாழ்த்தி வரவேற்கிறோம்.

அரசாங்கத்தின் பணிகளை கண்காணித்து, தவறுகளை சுட்டிக்காட்டி, தட்டிக்கேட்டு நமது உரிமைகளை நிலைநாட்ட தமிழகமெங்கும் அறப்போர் இயக்கத்தை கொண்டு செல்ல எங்களுடன் இணைந்து செயல்பட வாருங்கள்.
உங்கள் விவரங்களை https://arappor.org/volunteer.php இங்கு பதிவு செய்யுங்கள்.
132 views07:46
ओपन / कमेंट
2021-05-02 08:52:29
நான்கு வருடங்களுக்கு முன்பே குறித்த நேரத்தில் இந்த மென்பொருள் தயாராகி இருந்தால் இன்று எந்த அரசு மருத்துவமனையில் எத்தனை ஆக்ஸிஜன் படுக்கைகள் காலியாக இருக்கின்றன என்ற தகவலுக்காக மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டு இருக்காது.

மிகவும் இழுத்தடித்து காலதாமதமாக அளிக்கப்பட்ட மாதிரி மென்பொருளை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுத்த வேஸ்ட் என்று நிராகரித்த பின்பு அந்த டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு கால அவகாசத்தை நீட்டிக்குமாறு அன்றைய சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் கோரிக்கை வைத்ததை அடுத்து மேலும் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த கால அவகாசமும் முடிவடைந்த நிலையில் மென்பொருள் தயாராகவில்லை.

இந்த நிலையில் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக அந்த நிறுவனத்திற்கு 4.5 கோடி ரூபாய் பணத்தை இன்றைய சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கொடுத்துள்ளார். மென்பொருள் தயாராகாத நிலையில் அவசரமாக அவர்களுக்கு பணம் கொடுக்க என்ன காரணம்? யாருடைய உத்தரவின் பெயரில் மக்கள் வரிப்பணம் வேலை செய்யாத ஒரு நிறுவனத்திற்கு அள்ளி கொடுக்கப்படுகிறது? ராதாகிருஷ்ணன் பதில் அளிப்பாரா?
163 views05:52
ओपन / कमेंट
2021-05-01 15:59:55
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகள் விவரம், காலியாக இருக்கும் படுக்கைகள் எண்ணிக்கை மற்றும் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் மருந்துகள் பற்றிய அனைத்து தகவல்களும் உடனுக்குடன் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டடு மக்கள் பார்வைக்கு வைக்கும் வகையில் மென்பொருளை 4 மாதங்களில் உருவாக்க டெண்டர் கொடுக்கப்பட்ட நிலையில், மிகவும் தாமதமாக கொடுக்கப்பட்ட அதன் மாதிரியை ஆய்வு செய்த அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மென்பொருளில் பல குறைகள் இருப்பதாகவும், இது சுத்த வேஸ்ட் என்றும் நிராகரிக்கிறார்கள். அதையடுத்து அந்த டெண்டர் ரத்தும் செய்யப்படுகிறது. ஆனால் அதற்கு பிறகும் அன்றைய சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் இந்த டெண்டர் காலத்தை நீட்டிக்கும் படி கடிதம் எழுதி அழுத்தம் கொடுக்கிறார். இதையடுத்து மீண்டும் அனுமதி கொடுத்து கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் 4 வருடங்கள் கடந்தும், 5.5 கோடி பணத்தை பெற்றுக்கொண்ட பிறகும் இந்த மென்பொருள் தயாராகவில்லை.
இது குறித்து பீலா ராஜேஷ் அவர்கள் பதில் அளிப்பாரா? இதற்கு பொறுப்பு ஏற்றுக்கொள்வாரா?
239 views12:59
ओपन / कमेंट
2021-05-01 12:44:57
4 வருடங்களுக்கு முன்பு விடப்பட்ட இந்த software டெண்டர் முறையாக நிறைவேற்றப்பட்டு இருந்தால் இன்று நாம் சந்திக்க முடியாவிட்டாலும் இணையத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் Corona நோய் சிகிச்சை பெறும் நமது சொந்தங்களின் உடல்நிலை பற்றிய தகவல்களை உடனுக்குடன் அறிந்து கொண்டிருக்க முடியும்.
ஆனால் 4 மாதங்களில் முடிக்க வேண்டிய இந்த பணியை, 5.5 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு Oasys Cybernetics நிறுவனம் 4 வருடங்களாக முடிக்காமல் இருக்கிறது என்றால் அதற்கு யார் காரணம்? யார் பொறுப்பு?
சுகாதார துறை செயலாளர் பதில் சொல்வாரா?
இந்த டெண்டர் ஊழல் பற்றி விவரமாக தெரிந்து கொள்ள

வீடியோ பாருங்கள்.
252 views09:44
ओपन / कमेंट
2021-05-01 08:24:59
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் மருந்துகள் குறித்த வெளிப்படையான தகவல்களை வெளியிட ஒரு மென்பொருள் உருவாக்க கொடுக்கப்பட்ட 17 கோடி டெண்டரில் நடந்த ஊழல் குறித்த வீடியோ -


ஆவணங்களை பார்வையிட http://bit.ly/HMIS_Annexures
272 viewsedited  05:24
ओपन / कमेंट
2021-04-30 20:38:13
24 மணி நேர Corona மருத்துவ உதவி எண்:
99949 57070
59 views17:38
ओपन / कमेंट
2021-04-30 13:16:23
Corona தொற்று ஏற்பட்டவர்களுக்கு மருத்துவமனை சிகிச்சை தேவைப்பட்டால் தமிழக அரசாங்கத்தை தொடர்பு கொள்ளுங்கள்.
Twitter id: @104_GoTN
Twitter Hashtag: #BedsForTN
Website: https://tncovidbeds.tnega.org/
165 views10:16
ओपन / कमेंट
2021-04-27 11:57:32
கண்ணிற்கு தெரியாமல் காற்றில் பரவும் நோய் கிருமிகளிடமிருந்து நீங்களும் உங்கள் குடும்பமும் பாதுகாப்பாக இருக்க மாஸ்க் அணியுங்கள்.
41 views08:57
ओपन / कमेंट
2021-04-25 13:20:36
வட இந்திய மாநிலங்களில் இருந்து கேள்விப்படும் corona நோய் குறித்த செய்திகள் மிகுந்த கவலை தரும் வகையில் இருப்பதால் அந்த நிலை தமிழகத்தில் ஏற்படாமல் தடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கோரிக்கை அனுப்பியுள்ளது.
213 views10:20
ओपन / कमेंट