Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 83

2021-06-03 09:42:57
Register to join Arappor District Teams: https://arappor.org/volunteer.php

தமிழகம் முழுவதும் ஆக்கிரமிக்கப்படும் நீர்நிலைகளை பாதுகாக்க நாம் ஒன்றாக இணைந்து செயல்படுவது அவசியம். மக்களுடன் இணைந்து வில்லிவாக்கம் ஏரியை சட்டபூர்வமாக மீட்டெடுத்த அறப்போர் இயக்கத்தின் முயற்சி இதற்கு ஒரு உதாரணம். மேலும் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட செம்மஞ்சேரி காவல்நிலையத்தை அங்கிருந்து அகற்ற சட்டப்பூர்வமாக அறப்போர் இயக்கம் போராடி வருகிறது.

இதே போல உங்கள் பகுதிகளில் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகும் நீர்நிலைகளை இயக்கமாக இணைந்து சட்ட வழிகளை பின்பற்றி மீட்டெடுக்க வாருங்கள்.
200 views06:42
ओपन / कमेंट
2021-06-02 09:42:49 தமிழ்நாடு ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு விற்பனை செய்ய Christy நிறுவனம் டெண்டர் எடுத்துள்ளது. அவர்கள் விற்பனை செய்ய இருக்கும் விலை: ரூ. 85 / கிலோ
இதே துவரம்பருப்பு டெண்டர் போட்டியே இல்லாமல் Christy நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய போது அவர்கள் டெண்டரில் கொடுத்த விலை: ரூ. 146.50 / கிலோ.
20000 மெட்ரிக் டன் துவரம் பருப்பு டெண்டரில் ஆரோக்கியமான வெளிப்படையான போட்டியை உருவாக்கியதன் மூலம் தமிழக மக்களின் 120 கோடி வரிப்பணம் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் வேறு யாரும் டெண்டர் எடுத்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் Chrsity நிறுவனம் போட்டியில் மிகக்குறைந்த விலைக்கு டெண்டர் கொடுத்துள்ளது. தன்னை Blacklist செய்யப்படுவதில் இருந்து காப்பாற்றிக்கொள்ள தனக்கு நஷ்டமே வந்தாலும் பரவாயில்லை என்று இந்த வேலையை செய்துள்ளது.
மக்கள் பணத்தை காப்பாற்றிய மகிழ்ச்சி இருந்தாலும், கடந்த ஆட்சியில் டெண்டர் செட்டிங் செய்து அரசுக்கு பல கோடி இழப்பு ஏற்படுத்திய Christy நிறுவனங்கள் Blacklist செய்யப்படவில்லை என்பது ஒரு கரும்புள்ளியாக தொடர்கிறது.
இனி அடுத்தடுத்த அனைத்து டெண்டர்களிலும் போட்டியை ஊக்குவித்து சந்தை விலையை விட குறைவான விலைக்கு ரேஷன் பொருட்களை வாங்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். மேலும் கடந்த ஆட்சியில் டெண்டர் செட்டிங் செய்ய துணை போனவர்கள் தண்டிக்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
அரசாங்கம் மறந்தாலும் நாங்க மறக்க மாட்டோம். அறப்போர் தொடரும்..!
190 views06:42
ओपन / कमेंट
2021-06-02 09:42:45
181 views06:42
ओपन / कमेंट
2021-06-02 09:42:19
கடந்த 5 வருட அதிமுக ஆட்சியில், அனைத்து ரேஷன் டெண்டர்களும் Christy நிறுவனங்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் எந்த போட்டியும் இல்லாமல் அவர்கள் சொல்லும் விலைக்கு கொடுக்கப்பட்டதில் தமிழக அரசுக்கு எத்தனை கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கும் ? அந்த பணம் எல்லாம் யாருக்கு போயிருக்கும்?
#BlacklistChristy
185 views06:42
ओपन / कमेंट
2021-06-01 15:16:31 ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் வாங்கும் டெண்டர்களில் பங்கேற்பதில் இருந்து அனைத்து Christy நிறுவனங்களும் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும்.

கடந்த 5 வருடங்களாக, போட்டிக்கு எந்த நிறுவனங்களையும் டெண்டர் விட முடியாத அளவிற்கு, முன்னாள் ரேஷன் துறை செயலாளர் சுதா தேவி மற்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜ் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து கொண்டு, அனைத்து டெண்டர்களையும் மிக அதிக விலைக்கு செட்டிங் செய்து, தமிழ்நாடு அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்ப்படுத்திய, Christy நிறுவனங்களின் குட்டு ரத்து செய்து மீண்டும் விடப்பட்ட துவரம் பருப்பு டெண்டர் மூலம் தற்பொழுது வெளிப்பட்டு விட்டது.

அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு ஏற்படுத்திய Chirsty நிறுவனங்களை மீண்டும் டெண்டர்களில் பங்கேற்க அனுமதிப்பது அவர்கள் இது வரை செய்த செட்டிங் ஊழல்கள் அனைத்தையும் அங்கீகரிக்கும் செய்யலாகவே பார்க்கப்படும் என்பதை தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு அறப்போர் இயக்கம் சொல்லிக் கொள்கிறது.
79 views12:16
ओपन / कमेंट
2021-06-01 15:16:25
78 views12:16
ओपन / कमेंट
2021-06-01 12:31:43 துவரம் பருப்பு டெண்டரில் 120 கோடி கொள்ளை அடிக்க Christy - சுதா தேவி - காமராஜ் போட்ட மெகா திட்டம் முறியடிக்கப்பட்டது. தமிழ்நாடு மக்களின் வரிப்பணம் காப்பாற்றப்பட்டது.

ஒரே மாதத்தில் விடப்பட்ட இரண்டு துவரம் பருப்பு டெண்டர்களில் Christy நிறுவனங்களில் ஒன்றான Rasi Nutri Foods நிறுவனம் ஒரு கிலோவுக்கு 59.50 ரூபாய் வித்தியாசத்தில் டெண்டர் கொடுத்துள்ளது. ரத்து செய்யப்பட்ட முந்தைய டெண்டரில் மூன்று நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றன. மூன்றில் Rasi நிறுவனம் Christy நிறுவனத்திற்கு சொந்தமானது. மற்ற இரண்டு நிறுவனங்களும் (Kendriya மற்றும் Nacof) Christy நிறுவனத்திற்காக டெண்டர் எடுப்பவர்கள். மூவருமே ரத்து செய்யப்பட்ட பழைய டெண்டரில் கிலோவுக்கு 143.50 ரூபாய்க்கு அதிகமாக விலை கொடுத்துள்ளனர். இவர்கள் மட்டுமே பங்கேற்று விலையை அதிகமாக கொடுக்கும் செட்டிங் டெண்டர் இது தான்.

இந்த செட்டிங் டெண்டர்களுக்கு எதிராக அறப்போர் இயக்கம் தொடர்ந்து போராடி புகார் அளித்து வருகிறது. இந்த புகாரின் விளைவாக புதிதாக பதவி ஏற்ற தமிழ்நாடு அரசு பழைய டெண்டரை ரத்து செய்துவிட்டு பல நிறுவனங்களும் பங்குபெற்று போட்டியிடும் வகையில் டெண்டர் விதிகளை மாற்றி புதிய டெண்டர் வெளியிட்டது. அதன் விளைவு 4 Christy நிறுவனங்களோடு சேர்த்து மொத்தம் 9 நிறுவனங்கள் புதிய துவரம் பருப்பு டெண்டரில் பங்கேற்றுள்ளன. சந்தையில் கிலோ 100 ரூபாய்க்கு குறைவாக கொள்முதல் விலையில் கிடைக்கும் துவரம் பருப்பு டெண்டரில் பங்கேற்ற 8 நிறுவனங்கள் கிலோ 100 ரூபாய்க்கு குறைவாகவே டெண்டர் கொடுத்துள்ளன. இதன் மூலம் தமிழ்நாடு அரசு அதிக விலைக்கு துவரம் பருப்பு வாங்கி அதன் மூலம் கோடிக்கணக்கில் மக்கள் பணம் கொள்ளை போவது தடுக்கப்பட்டது.

ஆனால் கிலோ 146.50 ரூபாய்க்கு முதலில் டெண்டர் கொடுத்த Christyன் Rasi Foods நிறுவனம் டெண்டரில் போட்டி உருவான உடனே இந்த முறை கிலோ 87 ரூபாய் அதாவது கிலோவுக்கு 59.50 ரூபாய் குறைவாக டெண்டர் கொடுக்கிறது. இதன் மூலம் Christy நிறுவனங்கள் இதற்கு முன்பாக எடுத்த அனைத்து டெண்டர்களிலும் போட்டியே இல்லாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் தமிழ்நாட்டு மக்களிடம் கொள்ளை அடித்தது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த 5 வருடங்களாக ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் சப்ளை செய்வதில் Christy - சுதா தேவி - காமராஜ் கூட்டணி அடித்த கொள்ளைகள் முழுமையாக விசாரிக்கப்பட வேண்டும். இப்படிப்பட்ட பகிரங்க கொள்ளைகளில் ஈடுபட்ட Christy நிறுவனங்கள் உடனடியாக BlackList செய்யப்பட வேண்டும். இதற்கு துணையாக இருந்த சுதா தேவி மற்றும் காமராஜ் இருவர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை செய்து கடும் தண்டனை கொடுக்க வேண்டும். இவர்களால் தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை இவர்களிடம் இருந்து அபராதமாக வசூல் செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
245 views09:31
ओपन / कमेंट
2021-06-01 12:31:37
148 views09:31
ओपन / कमेंट
2021-05-31 20:07:11 Verified
Kindly follow us at https://twitter.com/Arappor
105 views17:07
ओपन / कमेंट
2021-05-31 20:07:07
105 views17:07
ओपन / कमेंट