Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 81

2021-06-15 12:22:05 Covid மரணங்கள் குறித்த அறப்போர் இயக்கத்தின் ஆய்வறிக்கையை எளிதில் புரிந்து கொள்ள இந்த தகவல்களை அறிந்து கொண்டாலே போதும்.

Corona இரண்டாவது அலை தீவிரமாக இருந்த 2021 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சராசரியாக இதற்கு முந்தைய வருடங்களில் இதே ஏப்ரல் மே மாதங்களில் ஏற்பட்ட மரணங்களை விட அதிக அளவு மரணங்கள் ஏற்பட்டுள்ளன. இதை படித்தவுடன் உங்களுக்கு என்ன தோன்றும்? ஆமா Covid இறப்புகள் அதிகமாக இருந்ததால் இறப்பு எண்ணிக்கை இந்த இரண்டு மாதங்களில் அதிகமாக இருந்திருக்கும் என்று தானே தோன்றும்!

ஆனால் அங்கே தான் டுவிஸ்ட்டு. இந்த இரண்டு மாதங்களில் 6 மருத்துவமனைகளில் மொத்த இறப்பு எண்ணிக்கை 11699 என்று இருக்க, தமிழ்நாடு அரசாங்கம் இந்த இரண்டு மாதங்களில் இந்த 6 மருத்துவமனைகளில் Corona இறப்பு எண்ணிக்கை வெறும் 863 என்று அறிவித்துள்ளார்கள். இதில் 2019 கணக்குப்படி இறந்தவர்கள் எண்ணிக்கையான 4437ஐ கழித்து விட்டு பார்த்தால் கூட கூடுதலாக 7262 இறப்பு எண்ணிக்கை வருகிறது.

இப்போ கேள்வி என்ன என்றால், வெறும் 6 மருத்துவமனைகளில் 7262 இறப்புகளில் வெறும் 863 இறப்புகளை மட்டுமே Covid இறப்புகள் என்று அறிவித்துள்ள அரசாங்கம் தமிழகம் முழுவதுமுள்ள 500 Covid மருத்துவமனைகளிலும் இதே போல எண்ணிக்கை குளறுபடி செய்திருந்தால் மொத்த Covid இறப்பு எண்ணிக்கை தமிழகத்தில் 1 லட்சத்தை தாண்டுமே? அப்படி Covid இறப்புகள் மூடி மறைக்கப்பட்டு இருந்தால் பெற்றோர்களை இழந்த அடித்தட்டு நிலையில் இருக்கும் குழந்தைகளுக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் உதவி தொகை எவ்வாறு சென்றடையும்?

தமிழ்நாடு அரசு தற்பொழுது என்ன செய்ய வேண்டும்?
முதலில் தவறு நடந்துள்ளதை ஒப்புக்கொள்ள வேண்டும். தனி குழு அமைத்து முறையாக ஆய்வுகள் நடத்தி சரியான இறப்பு கணக்குகளை வெளியிட வேண்டும்.

அறப்போர் ஆய்வறிக்கை படிக்க:
https://arappor.org/Arappor-Citizensreport_Coronadeath
பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு பார்க்க:


208 views09:22
ओपन / कमेंट
2021-06-15 12:21:56
183 views09:21
ओपन / कमेंट
2021-06-15 10:53:08 தமிழ்நாட்டில் Covid இறப்பு எண்ணிக்கை குறித்த அறப்போர் இயக்கத்தின் ஆய்வறிக்கை.
Citizens Research Report on Covid Deaths in TamilNadu.


219 views07:53
ओपन / कमेंट
2021-06-14 18:33:55
Citizens Report on Analysis of #Covid Deaths in Tamil Nadu.
முகநூல் நேரடி ஒளிபரப்பில் இந்த நிகழ்வை நாளை பகல் 12 மணிக்கு நீங்கள் காணலாம்.
Follow https://www.facebook.com/Arappor
202 views15:33
ओपन / कमेंट
2021-06-14 13:57:18
கூட்டி கழித்து பார்த்தாலும் சரியா வரல !

நாளை முழு விவரங்களுடன் அறப்போர்.
264 views10:57
ओपन / कमेंट
2021-06-13 08:04:56
#தண்ணீரும்_தமிழகமும்
இன்று இரவு 8 மணிக்கு டிவிட்டருக்கு வாங்க பேசலாம்.

Click the link to set a reminder: https://twitter.com/i/spaces/1lPJqXLjEDwGb
362 views05:04
ओपन / कमेंट
2021-06-12 12:31:39
கோவை ஆர்.எஸ்.புரத்தில் ராமச்சந்திரா தெரு எண் 72ல் அமைந்துள்ள சுகாதார ஆய்வாளர் அலுவலக இடத்தை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சில பொது ஊழியர்கள் பாரபட்சமாக முறைகேடாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் தனிப்பட்ட அமைப்பான நல்லறம் டிரஸ்டுக்கு வழங்கியது குறித்து ஊழல் தடுப்பு மற்றும் பிற சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொள்ளுமாறு லஞ்ச ஒழிப்பு துறையிடம் அறப்போர் இயக்கம் 2019ம் ஆண்டு அனுப்பிய புகார் மனு விசாரணைக்கு எடுக்கப்படுமா? அரசு கட்டிடம் முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் இருந்து மீட்கப்படுமா?
இது குறித்து ஆதாரங்களுடன் விளக்கும் வீடியோ:


211 views09:31
ओपन / कमेंट
2021-06-10 13:31:49 கடந்த ஆட்சியில் 2028 கோடி மக்கள் பணம் கொள்ளை போய் இருக்கிறது. Christy என்கிற ஒரே ஒரு நிறுவனம் ரேஷன் டெண்டர்களை போட்டியே இல்லாமல் அதிக விலைக்கு எடுத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தி இருக்கிறது. இது குறித்து 190 பக்க ஆதாரங்களுடன் 45 பக்க புகார் https://arappor.org/blog/blog/post/arappor-complaint-dvac-ration-scam-2015-2021 DVACல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இது வரை எந்த அரசியல் கட்சியும் இந்த ஊழல் குறித்து வாய் திறக்கவில்லை.

Christy நிறுவனம் தவறு செய்திருப்பது விசாரணையில் உறுதியானால் அவர்களை இனி டெண்டர்களில் பங்கேறக்க முடியாத வகையில் Blacklist செய்வோம் என்று சொல்ல திமுகவுக்கும் அதன் கூட்டணி கட்சிகளுக்கும் என்ன தயக்கம்? மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிடுவதற்கு கூட Coronaவை காரணம் காட்டி பதுங்குவது மிகவும் மோசமான செயல்.

கடந்த ஆட்சியில் ஊழலே நடக்கவில்லை என்று சொல்லும் அதிமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் இந்த விசாரணையை நடத்த சொல்லி தங்கள் மீதுள்ள ஊழல் கரையை துடைக்க முயற்சிக்காமல் ஒளிந்து ஓடுவது ஏன்? ஊழலை ஒழிப்போம் என்று கோஷமிட்டு ஆட்சிக்கு வந்த பிஜேபியின் மாநில தலைவர்கள் கூட அவர்கள் தலைமையின் ஊழல் ஒழிப்பு கோஷத்தை நம்பவில்லை போல.

திமுக அதிமுக கட்சிகளை ஒழிப்போம் என்று தேர்தலில் சூளுரைத்த இதர கட்சிகள் இந்த ஊழல் பற்றி மூச்சு விடக்கூடிய பயப்படுவது ஏன்? இந்த ஊழலை தட்டி கேட்க துணிவில்லாதவர்கள் என்ன மாற்றத்தை ஏற்படுத்த போகிறார்கள்?

2000 கோடி ஊழலை பற்றி பேசுவதற்கு கூட தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளே இல்லை என்ற விஷயம் எத்தனை பெரிய அவமானம்!

#2028CroreRationScam #BlacklistChristy
235 views10:31
ओपन / कमेंट
2021-06-10 13:31:45
156 views10:31
ओपन / कमेंट
2021-06-10 11:02:47
எச்சரிக்கை விட்டு 12 மாசம் ஆயிடுச்சு. எப்போ சார் வேலுமணி MLA @SPVelumanicbe ஜெயிலுக்கு போவார்? @KN_NEHRU
https://www.kalaignarseithigal.com/politics/2020/06/08/dmk-leader-kn-nehru-has-warned-that-minister-sp-velumani-will-be-imprisoned-for-another-11-months
203 views08:02
ओपन / कमेंट