Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 79

2021-06-30 18:14:37 அறப்போர் ஆய்வறிக்கை குறித்த ஒரு விரிவான அலசல். வருகிற ஞாயிறு மாலை 7 மணிக்கு. அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுங்கள்.
Zoom Meeting
https://us02web.zoom.us/j/85653115430
166 views15:14
ओपन / कमेंट
2021-06-30 18:14:32
166 views15:14
ओपन / कमेंट
2021-06-29 10:18:09
தமிழகம் முழுவதும் அறப்போர் இயக்கத்தின் மாவட்ட குழுக்களில் இணைய https://arappor.org/volunteer.php இன்றே உங்கள் விவரங்களை பதிவு செய்யுங்கள். நாங்கள் உங்களை அழைத்து பேசுகிறோம்.
142 views07:18
ओपन / कमेंट
2021-06-28 13:21:37
இத்தனை துணிச்சலாக மாநகராட்சி இடத்தை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டுகிறார்கள் என்றால் அரசியல் பின்புலம் இருந்து தானே ஆக வேண்டும். இந்த #அதிமுக முன்னாள் கவுன்சிலர் மீது ஏற்கனவே ஆக்கிரமிப்பு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
எதிர்க்கட்சி முன்னாள் கவுன்சிலர் என்ற தயக்கமோ பயமோ இல்லாமல் தமிழ்நாடு அரசு ஆக்கிரமிப்புக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
294 views10:21
ओपन / कमेंट
2021-06-27 10:47:02
ஒரே வாரத்தில் அவசர அவசரமாக சாலையில் இந்த கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. கேட்டால் ஏரியா தாதா கட்டுகிறார் என்று மிரட்டல் பதில். சென்னை காவல்துறையும், சென்னை மாநகராட்சியும் வேடிக்கை தான் பார்க்கிறார்கள்.
ஆக்கிரமிப்பை தடுக்க என்ன பயம்?
Place: Kalliamman Koil Street, Zone 15, Ward 197.
193 views07:47
ओपन / कमेंट
2021-06-25 17:56:18
மாதம் 40 கோடி இழப்பு தடுப்பு. திமுக அரசுக்கு பாராட்டுக்கள். ஆனால் கடந்த 4 வருடங்களாக சந்தை விலையை விட அதிகமான விலையில் பாமாயில் வாங்கியதால் பல கோடி நஷ்டம் ஏற்படுத்திய Christy நிறுவனங்களை டெண்டர்களில் பங்கேற்க தடை விதிப்பதில் என்ன தயக்கம்? மக்கள் வரிப்பணத்தை கொள்ளையடித்தவர்களை மீண்டும் டெண்டர்கள் எடுக்க அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்?
இந்த செட்டிங் டெண்டர்களுக்கு துணை போன முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் மற்றும் சுதா தேவி IAS ஆகியோர் மீது எப்பொழுது நடவடிக்கை எடுக்கப்படும்? இந்த முறைகேடு குறித்து திமுக அரசு மவுனம் காப்பது ஏன்?
#BlacklistChristy
231 views14:56
ओपन / कमेंट
2021-06-25 10:49:23
இரண்டாவது மாதமாக தொடர்ந்து சந்தை விலையை விட குறைவான விலையில் டெண்டர் எடுக்கப்பட்டுள்ள துவரம் பருப்பு. இதற்கு ஒரே காரணம் டெண்டரில் அனுமதிக்கப்பட்ட போட்டி. 10 நிறுவனங்கள் பங்கேற்றதால் ஏற்பட்ட மாற்றம். அறப்போர் புகாரை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுக்கள். இதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் 200 கோடிக்கும் மேல் அரசுக்கு இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 6 வருடங்களாக போட்டியே இல்லாமல் தாங்கள் மட்டுமே பங்குபெற்று சந்தை விலையை விட மிக அதிக விலைக்கு டெண்டர் எடுத்து 2000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்திய Christy நிறுவனங்களை டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஏன் இந்த தயக்கம்? Christy நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கும் திமுகவுக்கும் அழுத்தம் கொடுக்கிறதா? உணவுத்துறை அமைச்சர் திரு. சக்கரபாணி இது குறித்து வெளிப்படையாக அறிக்கை அளிப்பாரா?

#BlacklistChristy
292 views07:49
ओपन / कमेंट
2021-06-24 18:49:00 எந்த தனியாரிடம் கொள்முதல் செய்கிறார்கள்?
என்ன விலைக்கு கொள்முதல் செய்கிறார்கள்?
சந்தை விலையை விட எவ்வளவு அதிகம்?
இப்படி வாங்குவதால் அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்படுகிறது?

இதோ!

இவை அனைத்தும் அரசாங்கத்திடம் இருந்து வாங்கிய தகவல்கள் தான். என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள்? எப்பொழுது எடுக்க போகிறார்கள்? எப்படி எடுக்க போகிறார்கள்? என்று தமிழ்நாடு அரசாங்கம் மக்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க கேட்டுக் கொள்கிறோம்.

#1LakhCroreScam
ஆதாரங்கள் மற்றும் புகார்: https://bit.ly/1LakhCroreTangedcoScamDocuments
344 views15:49
ओपन / कमेंट
2021-06-24 18:48:55
330 views15:48
ओपन / कमेंट
2021-06-24 09:53:59
கடந்த அதிமுக ஆட்சியில் சந்தை விலையை விட அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சட்டசபையில் குற்றம் சாட்டியுள்ளார். குற்றம் சாட்டியதோடு நின்றுவிடாமல், அதிக விலைக்கு கொள்முதல் செய்யும் டெண்டர்களை ரத்து செய்து, இனி சந்தை விலைக்கு மின்சாரம் வாங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.
மேலும் 2013 முதல் இந்த செட்டிங் டெண்டர் மூலம் அரசுக்கு இழப்பை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், தங்கமணி மற்றும் இதற்கு துணை போன அரசு ஊழியர்கள் அனைவரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
#அனில்_பாவம்
134 views06:53
ओपन / कमेंट