Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 84

2021-05-29 10:18:09 கடந்த 5 வருடங்களாக தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் கொள்முதல் செய்வதில் Christy என்ற ஒற்றை நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை இன்று உடைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக Christy அல்லாத வேறு சில நிறுவனங்களும் டெண்டரில் பங்கேற்று Covid மளிகை நிவாரண பொருட்களுக்கு டெண்டர் கொடுத்து வெற்றி பெற்றுள்ளன.

ஆனால்..

2.1 கோடி குடும்பங்களுக்கு Covid நிவாரண மளிகை பொருட்கள் வழங்கும் விஷயத்தில் இந்த டெண்டர்களை மாவட்ட வாரியாக பிரித்து அதிக சிறிய நிறுவனங்களும் பங்கேற்கும் வகையில் கொடுப்பதால் பல நிறுவனங்கள் பயனடையும் என்றும் அரசுக்கும் ஏற்படும் நஷ்டம் தவிர்க்கப்படும் என்றும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் நிவாரண பொருட்கள் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பெரிய நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் டெண்டர் விடப்பட்டது. ஆகையால் இந்த டெண்டர் மூலம் அரசுக்கு மீண்டும் 142 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சரியான திட்டமிடல் மூலம் இது போன்ற இழப்புகளை தவிர்க்கலாம்.

அடுத்ததாக கொடுப்பட்டுள்ள துவரம் பருப்பு மற்றும் பாமாயில் டெண்டர்களில் Christy நிறுவனங்கள் தவிர மேலும் 7 நிறுவனங்கள் போட்டியிட்டிருப்பதால் சந்தை விலையை விட குறைந்த விலைக்கு டெண்டர் கொடுக்கப்பட்டு இது வரை அரசுக்கு ஏற்பட்டு வந்த இழப்பு தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
179 viewsedited  07:18
ओपन / कमेंट
2021-05-29 10:18:06
171 views07:18
ओपन / कमेंट
2021-05-26 18:39:26 துவரம் பருப்பு டெண்டரில் அதிக விலைக்கு Christy நிறுவனங்களுக்கு செட்டிங் செய்யப்படுவதாக அறப்போர் இயக்கம் புகார் கொடுத்து, இந்த செட்டிங் டெண்டர்களை தடுக்க, செய்யவேண்டிய மாற்றங்களையும் அரசுக்கு அனுப்பியது. இதையடுத்து புதிய டெண்டர் விதிகளின் படி துவரம் பருப்பு டெண்டரில் Christy தவிர 7 நிறுவனங்களும், பாமாயில் டெண்டரில் Christy தவிர 6 நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இதன் மூலம் Chisty நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்து ரேஷன் துறை மீட்கப்பட்டது. மக்கள் பணம் செட்டிங் செய்யப்பட்டு கொள்ளை அடிக்கப்படுவது தடுக்கப்பட்டது.
தற்பொழுது தடை கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள். தமிழக அரசு சரியான விவாதங்களை நீதிமன்றம் முன் வைத்து மக்கள் பணம் கொள்ளை போவதை தடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
நீங்களும் அறப்போர் இயக்கத்தின் ஊழலுக்கு எதிரான பயணத்தில் இணைந்து பயணிக்க விரும்பினால் உங்கள் விவரங்களை https://arappor.org/volunteer.php இங்கு பதிவு செய்யுங்கள். அறப்போர் இயக்கத்தின் மாவட்ட குழுக்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.
126 views15:39
ओपन / कमेंट
2021-05-26 18:39:20
119 views15:39
ओपन / कमेंट
2021-05-26 16:29:01 துவரம் பருப்பு டெண்டருக்கு இடைக்கால தடை!

Christy நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்று சந்தையில் கிலோ 100 ரூபாய்க்கு கிடைக்கும் துவரம் பருப்பை ரேஷன் கடைகளுக்கு கிலோ 143 ரூபாய்க்கு விற்பதால் அரசுக்கு ஏற்படும் 100 கோடி ரூபாய் இழப்பை சுட்டிக்காட்டி அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரை விசாரித்த தமிழக அரசு அந்த டெண்டரை ரத்து செய்து, சிறிய நிறுவனங்களும் பங்கேற்கும் வகையில் டெண்டர் விதிகளில் தேவையான மாற்றங்களை செய்து மீண்டும் டெண்டர் கோரியது.

இதன் பலனாக 4 christy நிறுவனங்கள் தவிர மேலும் 7 நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றுள்ளன. இதன் மூலம் Christy நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்துக்கு விலையை ஏற்றி துவரம் பருப்பு விற்பது தடுக்கப்படும். மேலும் பல சிறிய நிறுவனங்கள் பங்கேற்பதால் சந்தை விலையை விட குறைவாக தமிழக அரசுக்கு துவரம் பருப்பு கிடைக்க வழி பிறக்கும். இதனால் கோடிக்கணக்கான மக்கள் பணம் சேமிக்கப்பட்டு இந்த இக்கட்டான நேரத்தில் Corona தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

இன்று டெண்டர் திறக்கப்படும் நிலையில் இந்த டெண்டரை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் தமிழக அரசு விளக்கம் கொடுக்கும் வரை டெண்டருக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கை யார் போட்டிருப்பார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தாலும் தமிழக அரசு நீதிமன்றத்தில், இந்த டெண்டர் விதி மாற்றங்களால் அரசுக்கு கிடைக்கும் லாபத்தை விளக்கமாக எடுத்துக்கூறி தடையை உடைத்து அதனுடன் சேர்த்து ரேஷன் துறையில் Christy நிறுவனங்களின் ஆக்கிரமிப்பையும் உடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அறப்போர் தொடரும்..
189 views13:29
ओपन / कमेंट
2021-05-26 16:28:56
168 views13:28
ओपन / कमेंट
2021-05-26 08:39:32 கடந்த அதிமுக ஆட்சியில் ஊழலில் திளைத்த நெடுஞ்சாலைத்துறையில் ஊழலை ஒழிக்க நியமிக்கப்பட்டவர் தான் காரதிக்கேயன் IAS அவர்களா? இவர் சென்னை மாநகராட்சி ஆணையராக இருந்த போது முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்களுடன் சேர்ந்து அவர் செய்தது என்ன என்று வீடியோவில் பாருங்க. இவரை வைத்து தான் தமிழக அரசு ஊழல் இல்லாத, செட்டிங் டெண்டர் இல்லாத நிர்வாகத்தை கொடுக்க போகிறதா?


Corona பரவல் முடிந்த பிறகு ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை என்று சொன்னவர்கள் இவருடைய நியமனத்தை என்ன சொல்லி சமாளிக்க போகிறார்களோ!
285 views05:39
ओपन / कमेंट
2021-05-26 08:39:24
269 views05:39
ओपन / कमेंट
2021-05-25 08:17:40 முட்டை, பருப்பு, சர்க்கரை, பாமாயில் என்று ஒரு பொருளையும் விட்டு வைக்காமல் தமிழக உணவு மற்றும் உணவுபொருள் வழங்கள் துறையை மொத்தமாக குத்தகைக்கு எடுத்து டெண்டர்களை செட்டிங் செய்த Christy நிறுவனத்திற்கு என்ன தண்டனை? தமிழக அரசால் அவர்களை Blacklist கூட செய்ய முடியாதா?

இந்த கொள்ளைகளுக்கு உடந்தையாக இருந்த சுதா தேவி IAS எந்த வேலையும் செய்யாமல் சம்பளம் வாங்கிக்கொண்டு இருக்கிறாரே? ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு தமிழக அரசு கொடுக்கும் தண்டனை இது தானா?

இந்த கொள்ளைகளை தடுக்க முழு அதிகாரம் இருந்தும் அதை செய்யாமல் கொள்ளையர்களை தட்டிக்கொடுத்து அனுமதித்த முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் முன்னாள் முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் மீது எப்பொழுது விசாரணை நடத்தப்படும்?

ஒரு அதிகாரியை இடமாற்றம் செய்வதும், ஒரு டெண்டரை ரத்து செய்வதும் எப்படி ஊழலை தடுக்கும்?
82 views05:17
ओपन / कमेंट
2021-05-25 08:17:36
80 views05:17
ओपन / कमेंट