Get Mystery Box with random crypto!

துவரம் பருப்பு டெண்டரில் அதிக விலைக்கு Christy நிறுவனங்களுக்கு | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

துவரம் பருப்பு டெண்டரில் அதிக விலைக்கு Christy நிறுவனங்களுக்கு செட்டிங் செய்யப்படுவதாக அறப்போர் இயக்கம் புகார் கொடுத்து, இந்த செட்டிங் டெண்டர்களை தடுக்க, செய்யவேண்டிய மாற்றங்களையும் அரசுக்கு அனுப்பியது. இதையடுத்து புதிய டெண்டர் விதிகளின் படி துவரம் பருப்பு டெண்டரில் Christy தவிர 7 நிறுவனங்களும், பாமாயில் டெண்டரில் Christy தவிர 6 நிறுவனங்களும் பங்கேற்றுள்ளன. இதன் மூலம் Chisty நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்து ரேஷன் துறை மீட்கப்பட்டது. மக்கள் பணம் செட்டிங் செய்யப்பட்டு கொள்ளை அடிக்கப்படுவது தடுக்கப்பட்டது.
தற்பொழுது தடை கேட்டு நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள். தமிழக அரசு சரியான விவாதங்களை நீதிமன்றம் முன் வைத்து மக்கள் பணம் கொள்ளை போவதை தடுக்க வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.
நீங்களும் அறப்போர் இயக்கத்தின் ஊழலுக்கு எதிரான பயணத்தில் இணைந்து பயணிக்க விரும்பினால் உங்கள் விவரங்களை https://arappor.org/volunteer.php இங்கு பதிவு செய்யுங்கள். அறப்போர் இயக்கத்தின் மாவட்ட குழுக்கள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது.