Get Mystery Box with random crypto!

துவரம் பருப்பு டெண்டருக்கு இடைக்கால தடை! Christy நிறுவனங்கள் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

துவரம் பருப்பு டெண்டருக்கு இடைக்கால தடை!

Christy நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்று சந்தையில் கிலோ 100 ரூபாய்க்கு கிடைக்கும் துவரம் பருப்பை ரேஷன் கடைகளுக்கு கிலோ 143 ரூபாய்க்கு விற்பதால் அரசுக்கு ஏற்படும் 100 கோடி ரூபாய் இழப்பை சுட்டிக்காட்டி அறப்போர் இயக்கம் கொடுத்த புகாரை விசாரித்த தமிழக அரசு அந்த டெண்டரை ரத்து செய்து, சிறிய நிறுவனங்களும் பங்கேற்கும் வகையில் டெண்டர் விதிகளில் தேவையான மாற்றங்களை செய்து மீண்டும் டெண்டர் கோரியது.

இதன் பலனாக 4 christy நிறுவனங்கள் தவிர மேலும் 7 நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்றுள்ளன. இதன் மூலம் Christy நிறுவனங்கள் தங்கள் இஷ்டத்துக்கு விலையை ஏற்றி துவரம் பருப்பு விற்பது தடுக்கப்படும். மேலும் பல சிறிய நிறுவனங்கள் பங்கேற்பதால் சந்தை விலையை விட குறைவாக தமிழக அரசுக்கு துவரம் பருப்பு கிடைக்க வழி பிறக்கும். இதனால் கோடிக்கணக்கான மக்கள் பணம் சேமிக்கப்பட்டு இந்த இக்கட்டான நேரத்தில் Corona தடுப்பு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்.

இன்று டெண்டர் திறக்கப்படும் நிலையில் இந்த டெண்டரை தடை செய்ய கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நீதிமன்றம் தமிழக அரசு விளக்கம் கொடுக்கும் வரை டெண்டருக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கை யார் போட்டிருப்பார்கள் என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்தாலும் தமிழக அரசு நீதிமன்றத்தில், இந்த டெண்டர் விதி மாற்றங்களால் அரசுக்கு கிடைக்கும் லாபத்தை விளக்கமாக எடுத்துக்கூறி தடையை உடைத்து அதனுடன் சேர்த்து ரேஷன் துறையில் Christy நிறுவனங்களின் ஆக்கிரமிப்பையும் உடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்.

அறப்போர் தொடரும்..