Get Mystery Box with random crypto!

கடந்த 5 வருடங்களாக தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் கொள் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

கடந்த 5 வருடங்களாக தமிழகத்தில் ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் கொள்முதல் செய்வதில் Christy என்ற ஒற்றை நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலை இன்று உடைக்கப்பட்டுள்ளது. முதல் முறையாக Christy அல்லாத வேறு சில நிறுவனங்களும் டெண்டரில் பங்கேற்று Covid மளிகை நிவாரண பொருட்களுக்கு டெண்டர் கொடுத்து வெற்றி பெற்றுள்ளன.

ஆனால்..

2.1 கோடி குடும்பங்களுக்கு Covid நிவாரண மளிகை பொருட்கள் வழங்கும் விஷயத்தில் இந்த டெண்டர்களை மாவட்ட வாரியாக பிரித்து அதிக சிறிய நிறுவனங்களும் பங்கேற்கும் வகையில் கொடுப்பதால் பல நிறுவனங்கள் பயனடையும் என்றும் அரசுக்கும் ஏற்படும் நஷ்டம் தவிர்க்கப்படும் என்றும் அறப்போர் இயக்கம் வலியுறுத்தி அரசுக்கு கோரிக்கை வைத்தது. ஆனால் நிவாரண பொருட்கள் கொடுப்பதில் காலதாமதம் ஏற்பட்டு விடக்கூடாது என்ற காரணத்தால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டு பெரிய நிறுவனங்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் டெண்டர் விடப்பட்டது. ஆகையால் இந்த டெண்டர் மூலம் அரசுக்கு மீண்டும் 142 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சரியான திட்டமிடல் மூலம் இது போன்ற இழப்புகளை தவிர்க்கலாம்.

அடுத்ததாக கொடுப்பட்டுள்ள துவரம் பருப்பு மற்றும் பாமாயில் டெண்டர்களில் Christy நிறுவனங்கள் தவிர மேலும் 7 நிறுவனங்கள் போட்டியிட்டிருப்பதால் சந்தை விலையை விட குறைந்த விலைக்கு டெண்டர் கொடுக்கப்பட்டு இது வரை அரசுக்கு ஏற்பட்டு வந்த இழப்பு தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.