Get Mystery Box with random crypto!

நான்கு வருடங்களுக்கு முன்பே குறித்த நேரத்தில் இந்த மென்பொருள் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

நான்கு வருடங்களுக்கு முன்பே குறித்த நேரத்தில் இந்த மென்பொருள் தயாராகி இருந்தால் இன்று எந்த அரசு மருத்துவமனையில் எத்தனை ஆக்ஸிஜன் படுக்கைகள் காலியாக இருக்கின்றன என்ற தகவலுக்காக மக்கள் திண்டாடும் நிலை ஏற்பட்டு இருக்காது.

மிகவும் இழுத்தடித்து காலதாமதமாக அளிக்கப்பட்ட மாதிரி மென்பொருளை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சுத்த வேஸ்ட் என்று நிராகரித்த பின்பு அந்த டெண்டர் ரத்து செய்யப்படுகிறது. ஆனால் அவர்களுக்கு கால அவகாசத்தை நீட்டிக்குமாறு அன்றைய சுகாதார செயலாளர் பீலா ராஜேஷ் கோரிக்கை வைத்ததை அடுத்து மேலும் கால அவகாசம் கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்த கால அவகாசமும் முடிவடைந்த நிலையில் மென்பொருள் தயாராகவில்லை.

இந்த நிலையில் தேர்தலுக்கு ஒரு வாரம் முன்னதாக அந்த நிறுவனத்திற்கு 4.5 கோடி ரூபாய் பணத்தை இன்றைய சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் கொடுத்துள்ளார். மென்பொருள் தயாராகாத நிலையில் அவசரமாக அவர்களுக்கு பணம் கொடுக்க என்ன காரணம்? யாருடைய உத்தரவின் பெயரில் மக்கள் வரிப்பணம் வேலை செய்யாத ஒரு நிறுவனத்திற்கு அள்ளி கொடுக்கப்படுகிறது? ராதாகிருஷ்ணன் பதில் அளிப்பாரா?