Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 73

2021-08-09 11:42:39
Facebook Page: https://www.facebook.com/Arappor
Twitter id: https://twitter.com/Arappor
Youtube Channel: https://www.youtube.com/c/Arappor
Instagram id: https://www.instagram.com/arapporiyakkam/
Telegram Channel: https://t.me/arapporchannel
Whatsapp: 7200020099
Email: contact@arappor.org
Website: www.arappor.org
148 views08:42
ओपन / कमेंट
2021-08-08 10:38:07
நடைபாதைகளை ஆக்கிரமித்து பயன்படுத்த ஆளுங்கட்சியினருக்கு மட்டும் தான் அனுமதியா? அல்லது பொது மக்களுக்கும் அனுமதி கொடுக்கப்படுமா? ஆக்கிரமிப்பு விண்ணப்பம் எங்கு கிடைக்கும் என்று காவல்துறை அறிவிக்குமா?
162 views07:38
ओपन / कमेंट
2021-08-08 10:37:30
ஏரி என்று தெரிந்தும், கடந்த அதிமுக ஆட்சியில் அந்த ஏரியை ஆக்கிரமிப்பவர்களுக்கே பட்டா போட்டுக்கொடுக்கும் தைரியத்தை அந்த ஆபீசர்களுக்கு கொடுத்தது யார்? நீர்நிலைகளை காப்பாற்றுகிறோம் என்று நாடகம் போட்ட முன்னாள் அமைச்சர் வேலுமணி பதில் சொல்வாரா?
159 views07:37
ओपन / कमेंट
2021-08-07 15:30:44 கீழ்கட்டளை ஏரியை பல்லாவரம் நகராட்சி மற்றும் பொதுப்பணித்துறை இருவரும் இணைந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க வேண்டும் என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை அடுத்து பல்லாவரம் நகராட்சி நாங்களே இதை சீரமைக்கிறோம் என்று பணியை துவங்கியது. ஆனால் 2016ம் ஆண்டு முதல் ஏரியை சீரமைப்பதற்கு பதிலாக வருவாய்துறையின் துணையோடு அதை ஆக்கிரமித்தவர்களுக்கே பட்டா போட்டு கொடுத்து ஏரியின் எல்லையை சுருக்கி வேலி அமைத்தது பல்லாவரம் நகராட்சி.

இதை தொடர்ந்து கடந்த மூன்று வருடங்களாக அறப்போர் இயக்கம் பல புகார்களை தொடர்ந்து கொடுத்து இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியின் உண்மையான எல்லையை குறிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. கடந்த வருடம் ஏரியை ஆய்வு செய்த pwd அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தியதால் மேலும் ஆக்கிரமிப்புகள் அதிகரிக்க துவங்கின. மீண்டும் மீண்டும் அறப்போர் இயக்கம் கொடுத்த தொடர் அழுத்தத்தின் காரணமாக தற்பொழுது ஏரியின் எல்லைகள் pwd அதிகாரிகள் மூலம் குறிக்கப்பட்டுள்ளன. இந்த படங்களில் பார்ப்பது போல பல இடங்களில் ஏரி உள்ளே மண் அடித்து சமப்படுத்தி சுற்றுச்சுவர் கட்டியுள்ளனர். concrete கம்பங்கள் அடித்து முள் வெளி கட்டியுள்ளனர். சிலர் ஆக்கிரமித்த இடங்களில் தற்காலிக கட்டிடங்களையும் கட்டியுள்ளனர்.

கிட்டத்தட்ட சுமார் 10 ஏக்கர் ஏரி நிலம் பல்லாவரம் நகராட்சியின் துணையுடன் ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ளது. இதன் மதிப்பு சுமார் 200 கோடி வரை இருக்கும் என்று சொல்லப்படுகிறது. தற்பொழுது ஏரி எல்லை குறிக்கப்பட்டதை அடுத்து அந்த பகுதிகள் மீண்டும் ஆக்கிரமிப்பாளர்கள் கையில் சிக்காமல் இருக்க உடனடியாக அந்த பகுதியில் கொட்டப்பட்ட மணலை அகற்றி தண்ணீர் தேங்கும் படியான நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக் கொள்கிறது.
251 views12:30
ओपन / कमेंट
2021-08-07 15:30:40
209 views12:30
ओपन / कमेंट
2021-08-07 08:03:58
லஞ்சம் கொடுத்தவர் லஞ்சமாக கொடுத்த பணம் திருப்பி கிடைத்து விட்டதால் வழக்கை வாபஸ் பெறுவதாக சொல்லி இருக்கிறார். இது அமைச்சர் செந்தில் பாலாஜி லஞ்சம் வாங்கியதை உறுதி செய்வது போல உள்ளதே..? இனி இதை ஆதாரமாக வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை செந்தில் பாலாஜி மீது லஞ்ச வழக்கு தொடர்ந்து நடவடிக்கை எடுக்கலாமே..!

DVAC வழக்கு தொடர்வார்களா? தமிழ்நாடு முதலமைச்சர் M. K. Stalin வழக்கு தொடர அனுமதி கொடுப்பாரா?
279 viewsedited  05:03
ओपन / कमेंट
2021-08-06 11:12:57
அதிமுக ஆட்சிக்கும், திமுக ஆட்சிக்கும் வித்தியாசம் உண்டா இல்லையா என்பது டெண்டர்களில் தமிழ்நாடு அரசு கடைபிடிக்கப்போகும் வழிமுறைகள் மூலம் தெளிவாக தெரிந்துவிடும். முதலமைச்சர் M. K. Stalin என்ன செய்ய போகிறார்?

விரிவான பதிவு: https://www.facebook.com/Arappor/photos/a.601231350015901/2136789736460047/
செய்தி: https://www.dtnext.in/News/City/2021/08/05141532/1310328/Arappor-Iyakkam-wants-PWD-tenders-to-be-cancelled.vpf
353 views08:12
ओपन / कमेंट
2021-08-05 11:20:00 சென்னை மாநகராட்சியில் E Tender நடைமுறைகளை புறக்கணித்து கொடுக்கப்பட்ட டெண்டர்கள் குறித்து அறப்போர் கொடுத்த புகாரை அடுத்து அந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

ஆனால் தற்பொழுது PWDல் விடப்பட்டுள்ள 31 கோடி ரூபாய் டெண்டர்களில் ஆன்லைன் மூலம் டெண்டர் கொடுக்க தடை செய்யப்பட்டு டெண்டர் விண்ணப்பிப்பவர்கள் மூன்று முறை அரசு அதிகாரிகளை சந்திக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். மேலும் விதிகளின்படி டெண்டர் தொகையில் 30% Annual Turnover இருந்தால் போதும் என்று இருக்க இந்த டெண்டரில் 75 முதல் 150% Annual Turnover இருக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஒப்பந்ததாரர்கள் டெண்டர் விண்ணப்பிப்பதில் இருந்து தடுக்கப்படுவார்கள். இந்த தகுதிகளுடன் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முயன்றாலும் அவர்கள் அதிகாரிகள் சொல்படி நடந்தால் மட்டுமே அவர்களுக்கு விண்ணப்பமே வழங்கப்படும். விண்ணப்பம் கிடைத்தாலும் அவர்கள் அதை சமர்ப்பிக்கும் போது வாங்க மறுப்பார்கள். டெண்டர் வைப்புத்தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த அனுமதிக்காமல் நேரில் செலுத்த சொல்வதால் அதிகாரிகள் சொல்வதை கேட்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் நிலை உருவாகும்.

இதனால் டெண்டர்கள் செட்டிங் செய்யப்படுவதற்கு வாய்ப்பு உருவாகும். டெண்டர்களில் போட்டியே இல்லாத நிலை உருவாகும். இதன் மூலம் அதிக விலைக்கு டெண்டர்கள் செட்டிங் செய்யப்பட்டு அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும்.

வெளிப்படையான அரசு நிர்வாகத்தை தருவதாக உறுதி அளித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற என்ன செய்ய போகிறார்?

இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்படுமா?
இனி நேரில் வர வேண்டிய நிலையை தவிர்த்து அனைத்தும் ஆன்லைன் மூலம் செய்யப்பட வழிவகை செய்யப்படுமா?
டெண்டரில் ஆரோக்கியமான போட்டி உருவாகும் வகையில் டெண்டர் விதிகள் பின்பற்றப்படுமா?
டெண்டர் வைப்புத்தொகை ஆன்லைன் வாயிலாக மட்டுமே வாங்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுமா?

அமைச்சர் துரைமுருகன் பதில் அளிப்பாரா?
169 views08:20
ओपन / कमेंट
2021-08-05 11:19:55
153 views08:19
ओपन / कमेंट
2021-08-04 10:20:19
தரமற்ற அரிசி வழங்கிய ஆலைகளின் உரிமங்களையே ரத்து செய்யும் அமைச்சர் சக்கரபாணி, ரேஷன் பொருட்கள் வாங்குவதில் அதிமுக ஆட்சியில் 2028 கோடி முறைகேடு செய்த கிறிஸ்டி நிறுவனங்களை தடை செய்யாமல் தொடர்ந்து அவர்களே கோடிக்கணக்கில் டெண்டர் எடுக்க அனுமதிப்பது ஏன்?
287 views07:20
ओपन / कमेंट