Get Mystery Box with random crypto!

சென்னை மாநகராட்சியில் E Tender நடைமுறைகளை புறக்கணித்து கொடுக்க | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

சென்னை மாநகராட்சியில் E Tender நடைமுறைகளை புறக்கணித்து கொடுக்கப்பட்ட டெண்டர்கள் குறித்து அறப்போர் கொடுத்த புகாரை அடுத்து அந்த டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டது நினைவிருக்கலாம்.

ஆனால் தற்பொழுது PWDல் விடப்பட்டுள்ள 31 கோடி ரூபாய் டெண்டர்களில் ஆன்லைன் மூலம் டெண்டர் கொடுக்க தடை செய்யப்பட்டு டெண்டர் விண்ணப்பிப்பவர்கள் மூன்று முறை அரசு அதிகாரிகளை சந்திக்க நிர்பந்திக்கப்பட்டுள்ளனர். மேலும் விதிகளின்படி டெண்டர் தொகையில் 30% Annual Turnover இருந்தால் போதும் என்று இருக்க இந்த டெண்டரில் 75 முதல் 150% Annual Turnover இருக்க வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பல ஒப்பந்ததாரர்கள் டெண்டர் விண்ணப்பிப்பதில் இருந்து தடுக்கப்படுவார்கள். இந்த தகுதிகளுடன் இருப்பவர்கள் விண்ணப்பிக்க முயன்றாலும் அவர்கள் அதிகாரிகள் சொல்படி நடந்தால் மட்டுமே அவர்களுக்கு விண்ணப்பமே வழங்கப்படும். விண்ணப்பம் கிடைத்தாலும் அவர்கள் அதை சமர்ப்பிக்கும் போது வாங்க மறுப்பார்கள். டெண்டர் வைப்புத்தொகையை ஆன்லைன் மூலம் செலுத்த அனுமதிக்காமல் நேரில் செலுத்த சொல்வதால் அதிகாரிகள் சொல்வதை கேட்பவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் நிலை உருவாகும்.

இதனால் டெண்டர்கள் செட்டிங் செய்யப்படுவதற்கு வாய்ப்பு உருவாகும். டெண்டர்களில் போட்டியே இல்லாத நிலை உருவாகும். இதன் மூலம் அதிக விலைக்கு டெண்டர்கள் செட்டிங் செய்யப்பட்டு அரசுக்கு கோடிக்கணக்கில் நஷ்டம் ஏற்படும்.

வெளிப்படையான அரசு நிர்வாகத்தை தருவதாக உறுதி அளித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற என்ன செய்ய போகிறார்?

இந்த டெண்டர்கள் ரத்து செய்யப்படுமா?
இனி நேரில் வர வேண்டிய நிலையை தவிர்த்து அனைத்தும் ஆன்லைன் மூலம் செய்யப்பட வழிவகை செய்யப்படுமா?
டெண்டரில் ஆரோக்கியமான போட்டி உருவாகும் வகையில் டெண்டர் விதிகள் பின்பற்றப்படுமா?
டெண்டர் வைப்புத்தொகை ஆன்லைன் வாயிலாக மட்டுமே வாங்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்படுமா?

அமைச்சர் துரைமுருகன் பதில் அளிப்பாரா?