Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 70

2021-08-23 08:52:04
இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுத்தால் சாலைகளில் கொடி மற்றும் பேனர்களை வைப்பதை அரசியல்வாதிகள் நிறுத்துவார்கள்? அதிமுக பேனர் விழுந்து Subashree இறந்த போது அதை வைக்க சொன்னவர் மீது FIR பதிவு செய்ய சொன்ன எதிர்க்கட்சி திமுக தற்பொழுது ஆளுங்கட்சியாக திமுக கொடி கம்பம் வைக்க சொன்னவர் மீது FIR போடுவார்களா?

பள்ளி சிறுவனை வேலைக்கு அமர்த்திய கொடிகள் வைக்கும் contractor மீது வழக்கு பதியப்படுமா?
சட்டத்தை மீறி, மற்றவர்களுக்கு ஆபத்து ஏற்படும் வகையில், உங்களுக்காக கொடுக்கப்படும் வரவேற்பை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு கூச்சமாகவே இருக்காதா? 1.5 லட்சம் கொடுத்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா?

ஆளுங்கட்சி அமைச்சர்களும் MLAக்களும் இப்படி சட்டத்தை மீறி விளம்பரம் செய்தால் சட்டத்தை மீறும் மற்ற அரசியல் கட்சிகள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள்? உங்க விளம்பரத்திற்கு எங்க உயிர் தானே வேணுமா?
241 views05:52
ओपन / कमेंट
2021-08-22 07:10:18
262 views04:10
ओपन / कमेंट
2021-08-22 07:10:02 Channel photo updated
04:10
ओपन / कमेंट
2021-08-21 09:03:49
இரண்டு அமைச்சர்களுக்கும் ஒரு சவால்.
Tha Mo Anbarasan Vs R Sakkarapani BA MLA.
கடந்த அதிமுக ஆட்சியில் ரேஷன் பொருட்கள் கொள்முதலில் 2028 கோடி தமிழ்நாடு அரசுக்கு இழப்பு ஏற்படுத்திய Christy நிறுவனம் மற்றும் கடந்த அதிமுக ஆட்சியில் குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் கட்டுவதில் முறைகேடுகள் செய்து மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் தரமற்ற கட்டிடங்களை கட்டிய PST Empire நிறுவனம் ஆகிய இரண்டில் முதலில் Blacklist செய்யப்பட இருப்பது எது?

எந்த அமைச்சர் முதலில் நடவடிக்கை எடுத்து தன்னுடைய துறையில் முறைகேடுகள் செய்பவர்களுக்கு இடமில்லை என்று சொல்ல போகிறார்? காத்திருப்போம் !!
#Arappor | #Blacklist | #Christy | #PSTempire
218 views06:03
ओपन / कमेंट
2021-08-20 18:13:47 2028 கோடி ரேஷன் பொருட்கள் கொள்முதல் ஊழலில் ஒரு IAS அதிகாரியை இடமாற்றம் செய்தாகிவிட்டது. அவர் நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு நிம்மதியாக இருக்கிறார். அந்த ஊழலுக்கு காரணமான Christy நிறுவனம் தொடர்ந்து எந்த தடையும் இல்லாமல் தமிழ்நாடு அரசுடன் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்து வருகிறது. அந்த துறையை நிர்வாகித்த முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் மிகவும் மோசமான தரத்தில் கட்டப்பட்டுள்ள விஷயம் கண்கூடாக தெரிந்த பிறகும் இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து விட்டு கட்டிடம் கட்டிய PST நிறுவனத்தை காப்பாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. தரமற்ற கட்டிடம் கட்டப்பட ஊழல் தான் காரணம் என்று யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட நிறுவனமும் அரசியல்வாதிகளும் காப்பாற்றப்படுகிறார்கள்.
ஊழலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அறப்போர் இயக்கத்திற்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் ஊழல் செய்தவர்களை தப்பிக்க வைத்துவிட்டு ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களை மட்டும் தண்டிப்பது போல பாவனை செய்து அந்த ஊழலையே மூடி மறைக்க செய்யும் முயற்சியை அறப்போர் இயக்கம் கண்டிக்கிறது.
அதிமுக அரசின் ஊழல் ஒப்பந்ததாரர்களையே திமுக அரசும் தாலாட்டி சீராட்டி பாதுகாக்க போகிறதா? அல்லது ஊழல் செய்த அவர்கள் நிறுவனங்கள் அனைத்தையும் இனி அரசு பணிகளுக்கு டெண்டர் எடுக்க முடியாத வண்ணம் தடை செய்ய போகிறதா?
#Arappor | #Blacklist | #Christy | #PSTempire
272 views15:13
ओपन / कमेंट
2021-08-20 18:13:44
249 views15:13
ओपन / कमेंट
2021-08-20 18:13:05 76,65,00,000 ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை சேர்க்க 10 வருடத்தில் வருமானம் எப்படி வந்தது ?
முன்னாள் அமைச்சர் தைரியமாக பதில் சொல்வாரா?
#Arappor | #KCVeeramani | #DVAC


267 views15:13
ओपन / कमेंट
2021-08-20 10:07:22
ஒரு கட்டிடத்தில் சுவற்றில் கை வைத்து சுரண்டினால் பூச்சு வேலை உடைந்து விழுகிறது. இப்படிப்பட்ட மோசமான தரத்தில் கட்டிடம் கட்டிய ஒப்பந்ததாரர் மக்கள் மீது பழி போட்டு அறிக்கை அளித்து தப்பிக்க முயல்கிறார். ஆனால் இது வரை அந்த ஒப்பந்ததாரர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஒப்பந்ததாரர் தவறு செய்திருந்தால் blacklist செய்யப்படுவார் என்று சொல்லும் அமைச்சர் அன்பரசன், எந்த தவறுக்காக இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்தார்கள் என்று விளக்கம் அளிப்பாரா? தவறான கட்டுமானத்தை கட்டிய ஒப்பந்ததாரரை கண்காணிக்காத குற்றத்திற்கு தானே அவர்களை சஸ்பெண்ட் செய்தீர்கள். பிறகு ஒப்பந்ததாரரை blacklist செய்வதில் என்ன தயக்கம்?

அதிகாரிகள் மீது மட்டும் பழி போட்டு ஒப்பந்ததாரரை காப்பாற்றும் திட்டமா ?

#Arappor | #PSTempire | #Blacklist
306 views07:07
ओपन / कमेंट
2021-08-19 18:49:27
ஒரு மாநிலத்தின் பதிவுத்துறை அமைச்சராக இருந்தவரே தன்னுடைய பெயரில் வாங்கும் நிலத்தின் மதிப்பை குறைத்து காட்டி பதிவு செய்கிறார் என்றால் அவர் தன்னை தேர்ந்தெடுத்த மக்களுக்கு எத்தனை பெரிய துரோகத்தை செய்திருக்கிறார்!

இந்த துரோகத்துக்கு கடுமையான தண்டனை கொடுத்தே ஆக வேண்டும்.

#Arappor | #DVAC | #KCVeeramani
343 views15:49
ओपन / कमेंट
2021-08-19 08:28:44
இதற்கு பெயர் தான் அதிகார துஷ்பிரயோகம். அமைச்சர் பதவியில் இருந்து என்ன என்னவெல்லாம் பண்ணி இருக்கார் பாருங்க.
தமிழ்நாடு அரசு என்ன செய்ய போகிறது?
Press meet You Tube video link:


Evidence and Complaint: https://bit.ly/KCVeeramaniDVACcomp
161 views05:28
ओपन / कमेंट