Get Mystery Box with random crypto!

2028 கோடி ரேஷன் பொருட்கள் கொள்முதல் ஊழலில் ஒரு IAS அதிகாரியை இ | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

2028 கோடி ரேஷன் பொருட்கள் கொள்முதல் ஊழலில் ஒரு IAS அதிகாரியை இடமாற்றம் செய்தாகிவிட்டது. அவர் நமது வரிப்பணத்தில் சம்பளம் வாங்கிக்கொண்டு நிம்மதியாக இருக்கிறார். அந்த ஊழலுக்கு காரணமான Christy நிறுவனம் தொடர்ந்து எந்த தடையும் இல்லாமல் தமிழ்நாடு அரசுடன் வியாபாரம் செய்து பணம் சம்பாதித்து வருகிறது. அந்த துறையை நிர்வாகித்த முன்னாள் அதிமுக அமைச்சர் காமராஜ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
குடிசை மாற்று வாரிய கட்டிடங்கள் மிகவும் மோசமான தரத்தில் கட்டப்பட்டுள்ள விஷயம் கண்கூடாக தெரிந்த பிறகும் இரண்டு அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்து விட்டு கட்டிடம் கட்டிய PST நிறுவனத்தை காப்பாற்றும் முயற்சி நடைபெற்று வருகிறது. தரமற்ற கட்டிடம் கட்டப்பட ஊழல் தான் காரணம் என்று யாரும் சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால் அந்த ஊழலில் சம்பந்தப்பட்ட நிறுவனமும் அரசியல்வாதிகளும் காப்பாற்றப்படுகிறார்கள்.
ஊழலுக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் அறப்போர் இயக்கத்திற்கு மாற்று கருத்து இல்லை. ஆனால் ஊழல் செய்தவர்களை தப்பிக்க வைத்துவிட்டு ஊழலுக்கு உடந்தையாக இருந்தவர்களை மட்டும் தண்டிப்பது போல பாவனை செய்து அந்த ஊழலையே மூடி மறைக்க செய்யும் முயற்சியை அறப்போர் இயக்கம் கண்டிக்கிறது.
அதிமுக அரசின் ஊழல் ஒப்பந்ததாரர்களையே திமுக அரசும் தாலாட்டி சீராட்டி பாதுகாக்க போகிறதா? அல்லது ஊழல் செய்த அவர்கள் நிறுவனங்கள் அனைத்தையும் இனி அரசு பணிகளுக்கு டெண்டர் எடுக்க முடியாத வண்ணம் தடை செய்ய போகிறதா?
#Arappor | #Blacklist | #Christy | #PSTempire