Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 76

2021-07-17 17:50:51
அவங்க பதில் கொடுக்கலன்னா நாம அப்படியே விட்டுடுவோமா? அதுக்கும் சட்டத்தில் வழி இருக்குல்ல. நாளை மாலை தவறாமல் கலந்துகொள்ளுங்கள்.

Online Training | Right To Information act | July 18 | Sunday | 6pm
Zoom meeting link: https://us02web.zoom.us/j/7200020099
224 views14:50
ओपन / कमेंट
2021-07-17 07:35:53
அறப்போர் புகார் எதிரொலி.
மணலியில் சென்னை மாநகராட்சி பணிக்காக விடப்பட்ட டெண்டர் #ரத்து.
டெண்டருக்கு விண்ணப்பிக்க EMD செலுத்த அலுவலகம் வந்த ஒப்பந்ததாரர்களை குண்டர்களை வைத்து விரட்டிய விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரி காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார்.
இனி சென்னை மாநகராட்சி டெண்டர்களில் EMD தொகை Online வாயிலாக மட்டுமே வாங்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட அறப்போர் புகாருக்கு விரைந்து நடவடிக்கை எடுத்த சென்னை மாநகராட்சி ஆணையர் மற்றும் தமிழ்நாடு அரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். டெண்டர்களை செட்டிங் செய்து மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க திட்டம் போடும் ஊழல்வாதிகளுக்கு இது ஒரு பாடமாக அமையட்டும்.
அறப்போர் தொடரும்...
273 views04:35
ओपन / कमेंट
2021-07-16 17:23:05
மக்கள் பிரச்சனைகளுக்காக மக்களோடு இணைந்து செயல்பட்டு, தவறு செய்யும் அரசாங்கத்தை துணிந்து கேள்வி கேட்கும் விழிப்புணர்வு கொண்ட சமுதாயத்தை உருவாக்க தோள் கொடுக்க வாருங்கள்.
அறப்போர் குழுக்களில் உங்களை இணைத்துக்கொள்ளுங்கள்:

Registration Links:
District Teams - https://arappor.org/volunteer.php
Health Team - https://bit.ly/ArapporHealthTeam
RTI Team - http://bit.ly/API-RTI-Team
Tender Team - http://bit.ly/API_Tender_Team
Cultural Team - http://bit.ly/ArapporCulturalTeam

Donation Link - https://arappor.org/donate/

Contact: contact@arappor.org, 7200020099
281 views14:23
ओपन / कमेंट
2021-07-16 14:15:01
அதிமுக ஆட்சி காலத்தில் பேனர் கலாச்சாரத்தை எதிர்த்து குரல் கொடுத்த #எதிர்க்கட்சி திமுக, 2019ம் வருடம் செப்டெம்பர் மாதத்தில் பொதுமக்களுக்கு இடையூறாக பேனர், cut out வைக்க மாட்டோம் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
இப்போ அவர்கள் #ஆளுங்கட்சி..

இந்த ஆபத்தான பேனர் மற்றும் கொடி கம்பங்களால் மேலும் ஒரு உயிரிழப்பு நடப்பதற்கு முன்னால் பேனர் கலாச்சாரத்துக்கு முடிவு கட்டப்படுமா? ஆபத்தான வகையில் பேனர்கள் வைத்தவர்கள் கைது செய்யப்படுவார்களா? சாலைகளில் எந்த அனுமதியும் இல்லாமல் பேனர் கொடிகள் வைத்த போது அதை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அரசு ஊழியர்கள் தண்டிக்கப்படுவார்களா?
553 views11:15
ओपन / कमेंट
2021-07-16 11:58:22 கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அதே காட்சிகள் தற்பொழுது சென்னை மாநகராட்சியில் அரங்கேற துவங்கிவிட்டன. ஆன்லைன் மூலம் EMD (டெண்டர் வைப்புத்தொகை) செலுத்த வழிவகை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் மணலியில் டெண்டர் விண்ணப்பிக்க EMD செலுத்த வந்தவர்களை பெட்டியில போடவிடாமல் குண்டர்களை வைத்து விரட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதையும் மீறி EMDஐ பெட்டியில் போட்ட ஒருவரின் டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. EMD செலுத்தவில்லை என்று காரணம் கூறி மற்ற அனைவரது டெண்டர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டர்களை மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுப்பியது யார்? திருவற்றியூர் திமுக MLA திரு.சங்கர் Thiruvottiyur K.P. Shankar பதில் சொல்வாரா? உள்ளாட்சி அமைச்சர் நேரு இது குறித்து விசாரணை நடத்துவாரா? சென்னை மாநகராட்சி ஆணையர் ஆன்லைன் மூலம் EMD செலுத்தும் முறையை உடனடியாக கொண்டு வருவாரா? வெளிப்படையான நிர்வாகத்தை கொடுப்போம் என்று உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் ஆரம்பகட்டத்திலேயே செட்டிங் டெண்டர்களை தடுத்து நிறுத்துவாரா?
முறைகேடாக எடுக்கப்பட்ட இந்த டெண்டர் ரத்து செய்யப்படுமா?
282 views08:58
ओपन / कमेंट
2021-07-16 11:58:19
270 views08:58
ओपन / कमेंट
2021-07-15 15:30:43
உங்கள் வீட்டில் இருந்தபடியே அரசாங்கத்திடம் இருந்து உங்களுக்கு தேவையான தகவல்களை பெறுங்கள். தகவல் உரிமை சட்டம் பயன்படுத்துவது குறித்த பயிற்சியை வீட்டில் இருந்தபடியே எடுத்துக்கொள்ளுங்கள்.

Topic: API RTI Training Session
Time: Jul 18, 2021 06:00 PM India
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/7200020099
Meeting ID: 72000 20099
181 views12:30
ओपन / कमेंट
2021-07-15 08:25:56
#PunishTheCorrupt #Viswanathan
தமிழ்நாடு மின்சார வாரியத்திற்காக தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது. சந்தை விலையை விட அதிகமாக விலை நிர்ணயம் செய்து டெண்டர் செட்டிங் செய்யப்படுகிறது. அப்பொழுது மின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன். வாங்கப்பட்ட நிலக்கரியில் 50% பிரதமர் மோடியின் நெருங்கிய நண்பர் அதானியிடம் வாங்கப்படுகிறது. இந்த முறைகேடு குறித்து CAG அறிக்கையிலும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த முறைகேட்டின் மூலம் தமிழ்நாடு அரசுக்கு பல கோடிகள் இழப்பு ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் மின்சார துறை அதிகாரிகள் மீது அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்புதுறையில் கொடுத்த புகார் விசாரிக்கப்படுமா?

சட்டம் தன் கடமையை செய்யுமா?

நிலக்கரி இறக்குமதி ஊழல் குறித்த ஆதாரங்களும் விளக்கங்களும்:
Evidence - http://bit.ly/AdaniNathamCoalScam
Press Meet Video -


In short -

249 views05:25
ओपन / कमेंट
2021-07-14 08:00:57
#PunishTheCorrupt - #OPS
2006 முதல் 2017 வரை வருமானத்திற்கு அதிகமாக தனது மனைவி, மகன்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் அதிக சொத்துக்கள் வாங்கி குவித்த முன்னாள் முதல்வர், முன்னாள் துணை முதல்வர் மற்றும் முன்னாள் நிதி அமைச்சர் #பன்னீர்செல்வம் மீது ஆதாரங்களுடன் அறப்போர் இயக்கம் லஞ்ச ஒழிப்பு துறையில் கடந்த 2017ம் வருடம் புகார் அளித்தது. அந்த புகாரை விசாரித்து FIR பதிவு செய்ய வலியுறுத்தி 2018ம் வருடம் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தது. இந்த புகார் மீது விரைவாக முதல் கட்ட விசாரணை நடத்தி முடிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த புகார் விசாரிக்கப்படுமா? சட்டம் தன் கடமையை செய்யுமா? OPS மீது FIR போடப்படுமா?

Disproportionate Assets complaint on former Deputy Chief Minister O Panneerselvam OPS
312 views05:00
ओपन / कमेंट
2021-07-13 15:01:13 #PunishTheCorrupt - #RamMohanrao
முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தனி செயலாளர் மற்றும் முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராம் மோகனராவ் தனது சகோதரர் நிறுவனம் மூலம் டெண்டர் விதிகளை அவர்களுக்கு சாதகமாக வளைத்து, முறைகேடாக தமிழக அரசு மருத்துவமனைகளின் பராமரிப்பு ஒப்பந்தத்தை எடுத்த விவகாரம் குறித்து அறப்போர் இயக்கம் 2017ம் வருடம் லஞ்ச ஒழிப்பு துறையில் கொடுத்த புகார் விசாரிக்கப்படுமா?
வீடியோ விளக்கம்:

335 views12:01
ओपन / कमेंट