Get Mystery Box with random crypto!

கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அதே காட்சிகள் தற்பொழுது சென்னை | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

கடந்த அதிமுக ஆட்சியில் நடைபெற்ற அதே காட்சிகள் தற்பொழுது சென்னை மாநகராட்சியில் அரங்கேற துவங்கிவிட்டன. ஆன்லைன் மூலம் EMD (டெண்டர் வைப்புத்தொகை) செலுத்த வழிவகை செய்யப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்து ஒரு வாரம் கூட முடியாத நிலையில் மணலியில் டெண்டர் விண்ணப்பிக்க EMD செலுத்த வந்தவர்களை பெட்டியில போடவிடாமல் குண்டர்களை வைத்து விரட்டிய நிகழ்வு அரங்கேறியுள்ளது. அதையும் மீறி EMDஐ பெட்டியில் போட்ட ஒருவரின் டெண்டர் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. EMD செலுத்தவில்லை என்று காரணம் கூறி மற்ற அனைவரது டெண்டர்களும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்த குண்டர்களை மாநகராட்சி அலுவலகத்திற்குள் அனுப்பியது யார்? திருவற்றியூர் திமுக MLA திரு.சங்கர் Thiruvottiyur K.P. Shankar பதில் சொல்வாரா? உள்ளாட்சி அமைச்சர் நேரு இது குறித்து விசாரணை நடத்துவாரா? சென்னை மாநகராட்சி ஆணையர் ஆன்லைன் மூலம் EMD செலுத்தும் முறையை உடனடியாக கொண்டு வருவாரா? வெளிப்படையான நிர்வாகத்தை கொடுப்போம் என்று உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின் ஆரம்பகட்டத்திலேயே செட்டிங் டெண்டர்களை தடுத்து நிறுத்துவாரா?
முறைகேடாக எடுக்கப்பட்ட இந்த டெண்டர் ரத்து செய்யப்படுமா?