Get Mystery Box with random crypto!

The Seithikathir®

टेलीग्राम चैनल का लोगो seithikathir — The Seithikathir® T
टेलीग्राम चैनल का लोगो seithikathir — The Seithikathir®
चैनल का पता: @seithikathir
श्रेणियाँ: अवर्गीकृत
भाषा: हिंदी
ग्राहकों: 15.12K
चैनल से विवरण

WELCOME! SUPPORT OUR JOURNALISM!
• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.
WE THANK YOU FOR YOUR TRUST IN US.

Ratings & Reviews

4.33

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

2

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश

2023-07-23 00:52:21 The Seithikathir pinned «செய்திக்கதிர் 8 ஆண்டுகள்: வாசகர்கள், நண்பர்களுக்கு இதயத்திலிருந்து அன்பு நிறைந்த வணக்கம்! மக்களிடம் நம்பிக்கையை பெற்ற சமூக ஊடகமான 'செய்திக்கதிர்', உங்களின் அன்பும் ஆதரவோடும், இன்று 9ஆவது ஆண்டில் இனிதே அடியெடுத்து வைக்கிறது... செய்திகளை உள்ளது உள்ளபடி சொல்வதும்…»
21:52
ओपन / कमेंट
2023-07-23 00:52:15 The Seithikathir pinned «186) பிரகாஷ் ஆனந்தராஜ் சி 187) சிவராமன் ராமமூர்த்தி 188) குருமூர்த்தி எஸ் 189) கோபிநாத் ச 190) செந்தில்குமார் பி 191) ஸ்ரீ தங்கம் முத்துராஜ் 192) பிரதீப்குமார் 193) காசிராஜன் எஸ் 194) பாஸ்கர் பி., ஆத்தூர் 195) சந்தோஷ்குமார் சி 196) வினோத் ஏ.எஸ். 197) தூயவன்…»
21:52
ओपन / कमेंट
2023-07-23 00:51:59 The Seithikathir pinned « செய்திக்கதிர் வளர்ச்சிக்கு உதவிய அன்பு உள்ளங்கள்.! • Google Pay • Paytm: 9842940657 • விருப்பம் உள்ள நண்பர்கள் மாதம் ரூ.1 முதல் ரூ.100 வரை தங்களால் இயன்ற நிதியை நன்கொடையாக தாருங்கள். -------------------------------------------------- ➤ JULY 2022 - APRIL…»
21:51
ओपन / कमेंट
2023-07-22 19:30:44
1.1K viewsThe Seithikathir, 16:30
ओपन / कमेंट
2023-07-22 19:30:41 வச்ச குறி தப்பாது... தன்னம்பிக்கை நாயகி ஷீத்தல் தேவி.

உலக பாரா வில்வித்தை பைனலுக்கு முன்னேறிய இரு கைகள் இல்லாத முதல் வீராங்கனை என வரலாறு படைத்தார் இந்தியாவின் ஷீத்தல் தேவி.

செக் குடியரசில் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது.

பெண்களுக்கான காம்பவுண்டு ஓபன் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஷீத்தல் தேவி, தென் கொரியாவின் சோய் நா மியை சந்தித்தார். இருகைகளும் இல்லாத ஷீத்தல் தேவி, 137-136 என வெற்றி பெற்றார்.

மற்றொரு காலிறுதியில் இந்தியாவின் சரிதா, பாராலிம்பிக் சாம்பியன், சீனாவின் ஜோவ் ஜியாமினை சந்தித்தார்.

இதில் சரிதா 139-127 என வெற்றி பெற்றார். பின் நடந்த அரையிறுதியில் இந்திய வீராங்கனைகள் ஷீத்தல் தேவி, சரிதா மோதினர்.

முதல் செட்டில் ஷீத்தல் தேவி 26-27 என பின் தங்கினார்.

இரண்டாவது செட்டில் (29-27) முந்தினார் ஷீத்தல் தேவி. 3, 4வது செட்டில் இருவரும் 27-27, 27-27 என சமநிலை வகித்தனர்.

ஐந்தாவது செட்டில் ஷீத்தல் தேவி 28-25 என ஆதிக்கம் செலுத்தினார். முடிவில் ஷீத்தல் தேவி 137-133 என வென்று பைனலுக்கு முன்னேறினார்.

இரு கைகளும் இல்லாமல் உலக பாரா வில்வித்தை பைனலுக்கு முன்னேறிய முதல் வீராங்கனை என வரலாறு படைத்தார் ஷீத்தல்.

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir
1.1K viewsThe Seithikathir, 16:30
ओपन / कमेंट
2023-07-22 19:27:53
அமெரிக்காவின் ஓக்லஹோமாவைச் சேர்ந்த சார்லி கிளிண்டன் என்ற சிறுவன் பிடித்த, மனிதனைப் போன்று பற்கள் கொண்ட மீன்

புகைப்படங்களை பகிர்ந்துள்ளது ஓக்லஹோமா வனவிலங்கு பாதுகாப்புத் துறை!

இந்த மீன் தென் அமெரிக்காவை பூர்வீகமாகக் கொண்டது எனவும், இந்த மீன்களால் மனிதர்களுக்கு பாதிப்பில்லை எனவும் தகவல்!
1.1K viewsThe Seithikathir, edited  16:27
ओपन / कमेंट
2023-07-22 19:22:18 ரஷ்ய அதிபர் புதினை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி போர்க்குற்றம் புரிந்ததாக ரஷ்ய அதிபர் புதினை உலக நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் பிரிக்ஸ் மாநாட்டுக்கு புதின் வந்தால் அவரை கைது செய்ய வேண்டும் என அந்நாட்டின் எதிர்க்கட்சி, பிரிட்டோரியா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதை ஏற்ற நீதிமன்றம், புதின் தென்னாப்பிரிக்கா வந்தால் கைது செய்யலாம் என உத்தரவிட்டுள்ளது.
1.1K viewsThe Seithikathir, 16:22
ओपन / कमेंट
2023-07-22 19:20:03 உச்சநீதிமன்றத்தில் ஏஐ தொழில்நுட்பம்

சென்னை ஐஐடியின் 60வது பட்டமளிப்பு விழாவில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்துகொண்டார். அப்போது அவர், “நவீன தொழில்நுட்பங்கள் அடித்தட்டு மக்களை சென்றடைந்து பயனளிக்க வேண்டும். சட்டத்துறையில் தொழில்நுட்ப வளர்ச்சி பெரிய அளவில் இல்லை. உச்சநீதிமன்றத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை செயல்படுத்த உள்ளோம்” என பேசினார்.
1.1K viewsThe Seithikathir, 16:20
ओपन / कमेंट
2023-07-22 19:19:10 துப்பாக்கிகளை பயன்படுத்த தடை விதித்த நாடு

பிரேசிலில் சமீபகாலமாக துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனால் அந்நாட்டு அரசு, பொதுமக்கள் 9 மிமீ பிஸ்டல்களை வைத்திருக்க தடை விதித்துள்ளது. மேலும், மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்ட துப்பாக்கிகள் எண்ணிக்கையை 4ல் இருந்து 2 ஆகவும், ஒவ்வொரு துப்பாக்கிக்கும் அனுமதிக்கப்பட்ட வெடி மருந்துகளை 200ல் இருந்து 50 ஆகவும் குறைத்துள்ளது.
1.1K viewsThe Seithikathir, 16:19
ओपन / कमेंट
2023-07-22 16:59:38 ரஷ்யாவின் முடிவால் பசி, பட்டினி ஏற்படும்: ஐ.நா

கருங்கடல் தானிய ஒப்பந்தத்தை புதுபிக்க ரஷ்யா மறுத்துவிட்டது. இதனால் உக்ரைனில் இருந்து தானியங்கள் ஏற்றுமதி தடைப்பட்டு, பல நாடுகளில் தானியங்களின் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவின் இந்த முடிவால் பலரும் இறக்கலாம் என்று ஐ.நா தெரிவித்துள்ளது. “இந்த தானிய விலை உயர்வு வளரும் நாடுகளில் கடுமையாக உணரப்படும். சிலர் பசியுடன் இருப்பார்கள். சிலர் பட்டினியால் வாடுவார்கள்” என்று தெரிவித்துள்ளது.
1.8K viewsThe Seithikathir, 13:59
ओपन / कमेंट