Get Mystery Box with random crypto!

The Seithikathir®

टेलीग्राम चैनल का लोगो seithikathir — The Seithikathir® T
टेलीग्राम चैनल का लोगो seithikathir — The Seithikathir®
चैनल का पता: @seithikathir
श्रेणियाँ: अवर्गीकृत
भाषा: हिंदी
ग्राहकों: 15.12K
चैनल से विवरण

WELCOME! SUPPORT OUR JOURNALISM!
• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.
WE THANK YOU FOR YOUR TRUST IN US.

Ratings & Reviews

4.33

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

2

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 5

2023-06-10 10:58:23 குத்தகைக்கு விடப்படும் அரசு சொத்துக்களின் வாடகை பாக்கியை வசூலிக்க தவறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்-தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஓசூரில் சேதமடைந்த வணிக வளாகத்தை புதுப்பிப்பதற்காக கடையை காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீசை எதிர்த்து அஷ்வக் அகமது, பவன்குமார் ஜெயின் ஆகியோரின் மனுக்கள் தள்ளுபடி

மனுதாரர்கள் எந்த உரிமமும் இல்லாமல் தொடர்ந்து 30 ஆண்டுகளாக முறையாக வாடகை செலுத்தாமல் கடை நடத்தி வருகின்றனர் - ஓசூர் சார் ஆட்சியர்

கட்டிடம் சேதமடைந்துள்ள நிலையில் கடையை நடத்த அனுமதிப்பது ஆலோசனைக்கு உரியதல்ல, சார் ஆட்சியர் அனுப்பிய நோட்டீசில் எந்த பிழையும் இல்லை - நீதிமன்றம்
31 viewsDeva Nathan, 07:58
ओपन / कमेंट
2023-06-10 10:40:20 இரும்புப் பெருஞ்சுவராக மாற வேண்டும்: சீன எல்லைக் காவல் படைக்கு அதிபா் உத்தரவு

சீன எல்லைக் காவல்படை வீரா்கள் இரும்புப் பெருஞ்சுவராக மாறி எல்லையைக் காக்க வேண்டும் என்று அந்நாட்டு அதிபா் ஷி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளாா்.
332 viewsThe Seithikathir, 07:40
ओपन / कमेंट
2023-06-10 10:39:01 டான் பிராட்மேன் சாதனையை சமன் செய்த ஷர்துல் தாக்குர்!

இந்திய கிரிக்கெட் வீரர் ஷர்துல் தாக்குர் டான் பிராட்மேனின் சாதனையை சமன் செய்துள்ளார்.

ஒவல் மைதானத்தில் வெளிநாட்டு வீரர் தொடர்சியாக 3 முறை அரைசதம் அடித்துள்ள பட்டியலில் தாக்குரும் இணைந்துள்ளார்.  2021-2023 தொடரில் தாக்குர் 57 (36), 60 (72), 51 (109) என தொடர்ச்சியாக அரைசதம் அடித்துள்ளார். டான் பிராட்மேன், ஆலன் பார்டரை தொடர்ந்து ஷர்துல் தாக்குர் சமன் செய்துள்ளார். இதற்குமுன் 1930-1934இல் பிராட்மேன் இதை செய்தார். ஆலன் பார்டர் 1985-1989இல் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சிறந்த ஆல்ரவுண்டராக தாக்குர் முன்னேறி வருகிறார்.

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir
334 viewsThe Seithikathir, 07:39
ओपन / कमेंट
2023-06-10 09:29:43 சென்னையில் ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ₨80 குறைவு .

ஒரு கிராம் தங்கம் ₨5,590க்கும், சவரன் ₨44,720க்கும் விற்பனை.
831 viewsThe Seithikathir, 06:29
ओपन / कमेंट
2023-06-10 09:14:23 திமுக கட்சியின் புதுப்பிக்கப்பட்ட இணையதளத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

புதிய இணையதளத்தை கருணாநிதி நூற்றாண்டு கொண்டாட்டங்களின் பகுதியாக தொடங்கி வைப்பு

இயக்க வரலாறு, அண்மை நிகழ்வுகள், சாதனை ஆகியவை இணையதளத்தில் நிறைந்துள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
970 viewsDeva Nathan, 06:14
ओपन / कमेंट
2023-06-10 09:11:46 பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதன் காரணமாக, சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த முடிவு.

"கோடைவிடுமுறைக்கு பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வியாண்டில் ஒரு பாடத்திற்கு 4 மணி நேர பற்றாக்குறை ஏற்படும்"

"பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், பாடங்களை நடத்துவதற்கு ஏதுவாக சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்தப்படும்"

"மாணவர்களுக்கு பாடச்சுமை இல்லாதபடியும், ஆசிரியர்கள் பயிற்சியில் பாதிப்பு ஏற்படாத வகையிலும் சனிக்கிழமை வகுப்புகள் நடத்தப்படும்"-பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ்.
985 viewsDeva Nathan, 06:11
ओपन / कमेंट
2023-06-10 08:12:06 குறள் எண் : 860
பால் : பொருட்பால்
அதிகாரம் : இகல்

குறள் :
இகலானாம் இன்னாத எல்லாம் நகலானாம்
நன்னயம் என்னும் செருக்கு.


உரை :
மன வேறுபாட்டால் துன்பம் எல்லாம் உண்டாகும். நல்லிணக்க நட்பால், நீதி என்னும் செல்வச் செருக்கு உண்டாகும்.

English :
All calamities are caused by hatred; but by the delight (of friendship) is caused the great wealth of good virtues.

தி ஆ 2054 விடை (வைகாசி-27)
தமிழ் வாழ்க
1.1K viewsIlayaraja, edited  05:12
ओपन / कमेंट
2023-06-10 08:10:53 இன்றைய புத்தக மொழி
10/06/23


தான் இளைப்பாற முடியாது
எனத் தெரிந்தும்
நிழலுக்காக
மரம் வைப்பவனே
வாழ்வை உணர்ந்தவன்.

- ரவீந்திரநாத் தாகூர் -

1.1K viewsIlayaraja, edited  05:10
ओपन / कमेंट
2023-06-10 07:50:10 நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் சூப்பர் வேலை..!

நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC India Limited - NLCIL), ஒரு முதன்மையான நவ்ரத்னா பொதுத்துறை நிறுவனமாகும்.

நெய்வேலி அலகுகளில் பயிற்சி அளிப்பதற்காக, தகுதியுள்ள நபர்களிடமிருந்து ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

பணியின் பெயர்: தொழில்துறை பயிற்சியாளர் [Specialised Mining Equipment (SME) Operations] and (Mines & Mines Support Services)

காலிப்பணியிடங்கள்: 500 (Specialised Mining Equipment (SME) Operations - 238, Mines & Mines Support Services - 262)

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 37 முதல் 42 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வித்தகுதி:

ஐடிஐ - ஃபிட்டர் அல்லது டர்னர் அல்லது எலக்ட்ரீசியன் அல்லது வெல்டிங் அல்லது எம்எம்வி அல்லது டீசல் மெக்கானிக் அல்லது டிராக்டர் மெக்கானிக் அல்லது சிவில் அல்லது ஃபவுண்டரி அல்லது கேபிள் இணைப்பு வர்த்தகம் என்ஏசி சான்றிதல் வைத்திருக்க வேண்டும்.

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir

சம்பளம்:

விண்ணப்பதாரர்களுக்கு 18,000 (1ஆம் ஆண்டு) முதல் 22,000 (3ஆம் ஆண்டு) வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு முறை மற்றும் பணிக் காலம் :

தொழில்துறை பயிற்சிக்கான விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒப்பந்த அடிப்படையில் மூன்று ஆண்டுகளுக்கு பயிற்சியளிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் https://web.nlcindia.in/pap_training/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் இதற்கு ஜூலை 8-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 08.07.2023
1.2K viewsThe Seithikathir, 04:50
ओपन / कमेंट
2023-06-10 07:48:12 பழங்கால நாணயங்கள் முதல் செல்லப் பிராணிகள் வரை - சென்னை பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தை | ஒரு விசிட்

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir

சென்னை பல்லாவரம் சந்தை வாரம் தோறும் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த சந்தை 150 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் இந்தச் சந்தைக்கு சில தனித்துவங்கள் உண்டு.

சென்னையின் புகழ்பெற்ற சந்தைகளில் ஒன்று பல்லாவரம் சந்தை. இந்தச் சந்தையில் வெளி மாவட்டத்தில் இருந்து வரும் வியாபாரிகள் பலரும் வியாபாரத்தில் ஈடுபடுகிறார்கள். சில வியாபாரிகள் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் பொருட்களை சேகரித்து வந்து இங்கே சந்தையில் விற்கிறார்கள். பலர் முன்பே கடைகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் கூடுதல் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கு வெள்ளிக்கிழமைகளில் இங்கு வருகிறார்கள். தற்போது கரண்ட் சவுத் சாலைக்கு இணையாக இயங்கும் சாலை வாரம்தோறும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை சந்தை நடைபெறுகிறது.

ஏழை மக்களின் சூப்பர் மார்க்கெட்: பல்லாவரம் வெள்ளிக்கிழமை சந்தையில் அனைத்து விதமான பொருட்களும் மலிவான விலைக்கு கிடைப்பதால் சாமானிய மக்களுக்கு இது சூப்பர் மார்க்கெட்டாக விளங்குகிறது. இந்தச் சந்தையில் அனைத்து விதமான பொருட்களும் கிடைக்கும். வீட்டுக்கு பயன்படுத்தும் சமையல் பொருட்கள், காய்கறிகள் முதல் மின்னணு சாதன பொருட்கள் முதல் பழமையான பொருட்கள், சிலைகள் வரை இங்கு கிடைக்கின்றன.

குறிப்பாக, பழங்கால நாணயங்கள் இந்த சந்தையில் உள்ள கடைகளில் பரவலாக கிடைக்கின்றன. இந்த நாணயங்களை வாங்க கடைகளில் சூழ்ந்து இருக்கும் கூட்டத்தினரை காணும்போது, தமிழகத்தில் பலருக்கு நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் இருப்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

செல்லப் பிராணிகள்.. - இச்சந்தையில் வீட்டில் வளர்க்கும் வளர்ப்பு பிராணிகள் (நாய், பூனை) மற்றும் அனைத்து விதமான செடிகளும் இங்கு கிடைக்கின்றன. இதன் காரணமாகவே இந்தச் சந்தைக்கு ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றனர். வாரம்தோறும் இச்சந்தைக்கு 50 ஆயிரம் வரை மக்கள் வருகை தருகிறார்கள் என அங்குள்ள வியாபாரிகள் கூறுகின்றனர்.

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir

இந்தச் சந்தையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கடை '90 கிட்ஸ் மிட்டாய் கடை'. இக்கடையில் 90-களை நினைவுப்படுத்தும் 25-க்கும் மேற்பட்ட மிட்டாய்கள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இந்தக் கடைக்காகவே பலரும் சந்தைக்கு வருகை புரிகின்றனர். மேலும், குழந்தைகள் பலரின் தேர்வாக இந்தக் கடை உள்ளது.

பல்லாவரம் சந்தையும் நவாப்களும் - இந்தச் சந்தை முதன்முதலில் பல்லாவரத்தில் உள்ள சண்டி தெருவில் ஆடு மாடுகள் விற்கும் சந்தையாக இருந்ததாகவும், சில ஆண்டுக்கு முன்னர்தான் அது திரிசூலம் ரயில் நிலையம் அருகே உள்ள பழைய ஜிஎஸ்டி சாலைக்கு மாற்றப்பட்டது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் பலர் இங்கு வியாபாரம் செய்கின்றனர். இங்கு வாரம் தோறும் பல லட்ச ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்று வருகிறது .

இச்சந்தை ஏன் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது? - பலருக்கும் இந்தக் கேள்வி எழலாம். தமிழ்நாட்டில் ஆற்காடு நவாப் ஆட்சி இருந்தபோது வெள்ளிக்கிழமை வாரச்சந்தை நடைமுறைக்கு வந்தது. அவர்களுக்கு மதராஸிலும் (சென்னை) சில அரண்மனைகள் இருந்தன. வெள்ளிக்கிழமை நவாப்களுக்கு விருந்து அளிக்கும் தினமாக இருந்து வந்தது. இதனால், வெள்ளிக்கிழமைகளில் கால்நடைகள் மற்றும் இறைச்சியை அதிக அளவில் வாங்கினார்கள். இதன்மூலம் அந்த நாட்களில் விற்பனையையும் விற்பனையாளரின் பொருளாதாரத்தையும் திறம்பட அதிகரித்தது. அப்போதிருந்து, இந்தச் சந்தை வெள்ளிக்கிழமைகளில் மட்டுமே திறக்கப்படுகிறது.

சுவாரஸ்யமான பொருட்களை கொண்ட இந்த பல்லாவரம் சந்தை, அங்கு பார்வையிடும் அனைவருக்கும் சிறந்த வர்த்தகம் சார்ந்த அனுபவத்தை அளிக்கிறது என்றால் அது மிகையல்ல.
1.1K viewsThe Seithikathir, 04:48
ओपन / कमेंट