Get Mystery Box with random crypto!

The Seithikathir®

टेलीग्राम चैनल का लोगो seithikathir — The Seithikathir® T
टेलीग्राम चैनल का लोगो seithikathir — The Seithikathir®
चैनल का पता: @seithikathir
श्रेणियाँ: अवर्गीकृत
भाषा: हिंदी
ग्राहकों: 15.12K
चैनल से विवरण

WELCOME! SUPPORT OUR JOURNALISM!
• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.
WE THANK YOU FOR YOUR TRUST IN US.

Ratings & Reviews

4.33

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

2

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 3

2023-07-04 09:36:06 ஒருபுறம் மதுக்கடைகளை மூடுவதாக அறிவித்து விட்டு, மறுபுறம் புதிய மதுக்கடைகளை திறப்பது கண்டிக்கத்தக்கது.

புதிய மதுக்கடைகள் திறக்கப்படாது என்பதை அரசின் கொள்கையாக அறிவிக்க வேண்டும்.

இப்போதுள்ள மதுக்கடைகளை படிப்படியாக மூடுவதற்கான கால அட்டவணையை தமிழ்நாடு அரசு உடனடியாக வெளியிட வேண்டும்- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
649 viewsDeva Nathan, 06:36
ओपन / कमेंट
2023-07-04 08:33:25 அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் மாறுபட்ட தீர்ப்பு காரணமாக வழக்கில் 3வது நீதிபதியை நியமிக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரை.
1.2K viewsDeva Nathan, 05:33
ओपन / कमेंट
2023-07-04 08:22:48 BREAKING:

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது தொடர்பாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு.

செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது. அவரை விடுவிக்க வேண்டும் என்று ஒரு நீதிபதியும், நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை என மற்றொரு நீதிபதியும் மாறுபட்ட தீர்ப்பு.

அமைச்சர் செந்தில்பாலாஜி சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாக அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி நிஷா பானு

உடனடியாக விடுவிக்க நீதிபதி நிஷா பானு உத்தரவு/ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல - நீதிபதி பரத சக்கரவர்த்தி

நீதிமன்ற காவல் சட்டவிரோதமில்லை - நீதிபதி பரத சக்கரவர்த்தி
1.3K viewsThe Seithikathir, 05:22
ओपन / कमेंट
2023-07-04 07:59:28 அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளதால் கேரளா, கர்நாடகா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆந்திரா, கோவா, தெலங்கானா, தமிழகம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு பருவமழையையொட்டி வடக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் ஒருவாரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு என்றும் கனமழை காரணமாக கர்நாடகாவில் மங்களூரு, முல்கி உள்ளிட்ட பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர்.
1.4K viewsDeva Nathan, 04:59
ओपन / कमेंट
2023-07-04 07:46:24 மருத்துவமனையில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிஸ்சார்ஜ்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சென்னை அப்பலோ மருத்துவமனையில் மாதாந்திர உடல் பரிசோதனை.

நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது டிஸ்சார்ஜ்
1.5K viewsDeva Nathan, 04:46
ओपन / कमेंट
2023-07-04 07:32:45 இன்றைய புத்தக மொழி
04/07/23


நற்பண்பு இல்லாத அறிவு
ஆபத்தானது...
அறிவில்லாத நற்பண்பு
பயனற்றது.

- ஜவஹர்லால் நேரு -

1.4K viewsIlayaraja, edited  04:32
ओपन / कमेंट
2023-07-04 07:22:06 சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ரூ.43,616க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு ரூ.17 உயர்ந்து ரூ.5,452க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 30 காசுகள் அதிகரித்து ரூ.75.80-க்கு விற்பனையாகிறது.
1.5K viewsDeva Nathan, edited  04:22
ओपन / कमेंट
2023-07-04 07:21:28 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை தொடக்கம்:

சென்னையில் முதற்கட்டமாக 82 நியாய விலைக் கடைகளில் தக்காளி விற்பனை தொடங்கியது.

நியாயவிலைக்கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.60க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வட சென்னை 32, மத்திய சென்னை 25, தென்சென்னை 25 என மொத்தம் 82 ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

முதலில் வரும் 50 குடும்ப அட்டைதாரர்களுக்கு மட்டுமே தக்காளி விற்கப்படும் என தகவல்.
1.4K viewsDeva Nathan, 04:21
ओपन / कमेंट
2023-07-04 07:15:34 காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு தமிழக அரசு கடிதம்:

ஜூலை மாதம் தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நீரை வழங்குமாறு கர்நாடகாவிற்கு உத்தரவிட வேண்டும்.

ஜூன் மாதத்திற்குரிய 9.19 டி.எம்.சி, ஜூலை மாதத்திற்குரிய 34 டி.எம்.சி தண்ணீரை வழங்க கர்நாடகாவுக்கு உத்தரவிட வேண்டும்.

ஜூலை மாதம் வழங்க வேண்டிய தண்ணீரை குறைக்காமல் வழங்க அறிவுறுத்த வேண்டும் என கடிதத்தில் வலியுறுத்தல்.

மேட்டூர் அணையில் உள்ள தண்ணீர் இன்னும் 10 நாட்கள் மட்டுமே போதுமானதாக உள்ளது.

காவிரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்திருந்த நிலையில் கடிதம்.
1.3K viewsDeva Nathan, 04:15
ओपन / कमेंट
2023-07-04 07:13:34 முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை ₹404 கோடியில் விரிவாக்கம் செய்து தமிழக அரசு அரசாணை வெளியீடு.

இதன்மூலம் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் செயல்படும் 31,008 அரசுப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர்.
1.3K viewsDeva Nathan, 04:13
ओपन / कमेंट