Get Mystery Box with random crypto!

The Seithikathir®

टेलीग्राम चैनल का लोगो seithikathir — The Seithikathir® T
टेलीग्राम चैनल का लोगो seithikathir — The Seithikathir®
चैनल का पता: @seithikathir
श्रेणियाँ: अवर्गीकृत
भाषा: हिंदी
ग्राहकों: 15.12K
चैनल से विवरण

WELCOME! SUPPORT OUR JOURNALISM!
• The Seithikathir - India's Leading Tamil Multimedia News and Infotainment platform on Social Media. Breaking Alerts, Developing Stories from India and around the world.
WE THANK YOU FOR YOUR TRUST IN US.

Ratings & Reviews

4.33

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

2

3 stars

0

2 stars

0

1 stars

0


नवीनतम संदेश 7

2023-05-24 19:30:30 கூகுள் பே யூசர்களுக்கு குட் நியூஸ்!

கூகுள் பே செயலியில் இப்போது ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் பணப்பரிவர்த்தனை வசதி மிக எளிதாக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், போன்பே, கூகுள் பே, பேடிஎம் போன்ற ஏராளமான UPI செயலிகள் பயன்பாட்டில் உள்ளன.

குறிப்பாக கிராமங்கள் முதல் நகரங்கள் வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மக்கள் ஆதரிக்கத் துவங்கியுள்ளனர்.

இதன்மூலம் மளிகை கடை முதல் உயர்தர வணிகம் வரை அனைத்துக்கும் எளிதாக ஸ்கேன் செய்து பணம் அனுப்பமுடியும்.

இதுவரை கூகுள் பே செயலியில் வங்கி கணக்கு இணைக்கும் போது டெபிட் கார்டு பயன்படுத்தி மட்டுமே இணைத்து வந்தநிலையில் கூகுள் பே செயலியில் இப்போது ரூபே கிரெடிட் கார்டுகளை இணைத்து யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்ளும் வகையில் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir

தற்போது ஆக்சிஸ் வங்கி, கனரா வங்கி, ஹெச்.டி.எஃப்.சி வங்கி, இந்தியன் வங்கி, கோடக் மஹிந்திரா வங்கி, பேங்க் ஆஃப் பரோடா, பஞ்சாப் நேஷனல் வங்கி மற்றும் யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா வழங்கும் ரூபே கிரெடிட் கார்டுகளை கூகுள் பே செயலி ஆதரிக்கிறது.

அதேபோல் இனி வரும் நாட்களில் மேலும் சில வங்கி கார்டுகளை இணைக்க கூகுள் பே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால் விசா மற்றும் மாஸ்டர் வழங்கிய கிரெடிட் கார்டுகளை தற்போது இணைக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

எப்படி இணைப்பது?

முதலில் கூகுள் பே ஓபன் செய்து settings பக்கம் செல்ல வேண்டும்.

அடுத்து Setup payment method செலக்ட் செய்து Add ரூபே கிரெடிட் கார்டு ஆப்ஷனை கிளிக் செய்யவும்.

அதன்பின் கிரெடிட் கார்டு விவரங்கள், 6 இலக்க கிரெடிட் கார்டு எண், எக்ஸ்பைரி டேட், பின் நம்பர் ஆகியவை கொடுத்த பின் ஓ.டி.பி வரும்.

ஓ.டி.பி பதிவிட்டபின்பு கூகுள் பே செயலியில் உங்கள் கிரெடிட் கார்டு இணைக்கப்பட்டுவிடும்.

அதன்பிறகு பணம் செலுத்தும் போது ரூபே கிரெடிட் கார்டு என்ற ஆப்ஷனையும் செலக்ட் செய்து பணம் செலுத்திக்கொள்ளலாம்.
1.5K viewsThe Seithikathir, 16:30
ओपन / कमेंट
2023-05-24 19:25:30 இனி நிம்மதி!: வெப்பம் ஓய்ந்து பருவமழை துவங்கப் போகுது!!

இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது:

இந்தியா முழுவதும் நிலவி வந்த வெப்ப அலை ஓய்ந்தது.
இனி வெயிலின் தாக்கம் குறையும்.

இதன் காரணமாக, ராஜஸ்தான், பஞ்சாப், டில்லி, உ.பி., அரியானா, சத்தீஸ்கரில் ஆலங்கட்டி மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 2 நாட்களில் அந்தமான் கடற்பகுதியில் தென்மேற்கு பருவமழை துவங்கும். தமிழகத்திலும் மழை பெய்யும்.

இனிமேல் வெப்பநிலை குறைந்து மேகமூட்டத்துடன் காணப்படும்.

ராஜஸ்தான், பஞ்சாப், டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா மற்றும் சண்டிகர் ஆகிய மாநிலங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மலைப் பகுதிகளில் அடுத்த 2- 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கிழக்கு இந்தியாவில் புயல்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளன.

நாட்டில் வெப்ப அலைகள் முடிந்துவிட்டதால், வெப்பநிலை குறைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir
1.4K viewsThe Seithikathir, 16:25
ओपन / कमेंट
2023-05-24 16:14:25
1.9K viewsThe Seithikathir, 13:14
ओपन / कमेंट
2023-05-24 16:13:25 திருப்பூர் மாவட்டம் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

கோயில் உண்டியல் பூட்டு உடைக்க முயற்சித்தும், சுவாமி மீது அணிவித்திருக்கும் துணிகளை கலைந்தும், சிலைகள் இருக்கும் பீடத்தின் கோபுரமும் சேதப்படுத்தப்பட்டு உள்ளது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் பிரசித்தி பெற்று விளங்கும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோயிலில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது.

வழக்கம் போல் அதிகாலை நேரத்தில் கோயில் அர்ச்சகர்கள் நடை திறந்த பொழுது கோயிலில் உள்ளே பொருட்கள் சிதறி கிடந்ததும், 63 நாயன்மார்கள் உள்ள கோபுரங்களின் கலசம் மற்றும் சிலைகள் மீது உள்ள துணிகளை களைந்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்த அர்சகர்கள் உடனே கோவில் நிர்வாகம் மற்றும் அவிநாசி காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல் துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் தலைமையில் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் தடையவியல் நிபுணர்களை வரவழைக்கப்பட்டு கைரேகை சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

மர்ம நபர்கள் கோயில் உண்டியலை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனர். மேலும் 63 நாயன்மார்கள் மேலே உள்ள கலசங்களையும் உடைத்து எரிந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த அவிநாசி காவல் துறையினர் மற்றும் அவிநாசி துணை கண்காணிப்பாளர் பவுல்ராஜ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் ஆய்வு செய்ய வர உள்ளனர்.

இந்த நிலையில், சாமி சிலைகள் உடைத்து விட்டு கோயிலுக்குள் பதுங்கி இருந்தவர் பிடிபட்டு உள்ளார்.

• THE SEITHIKATHIR | TELEGRAM |
• JOIN US: https://t.me/Seithikathir
1.9K viewsThe Seithikathir, 13:13
ओपन / कमेंट
2023-05-24 16:08:38 ரூ. 2,000 நோட்டுகள் தபால் நிலையங்களில் மாற்றப்படுமா?

தபால் நிலையங்களில் ரூ.2,000 நோட்டுகள் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

புழக்கத்தில் இருக்கும் ரூ.2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ஆா்பிஐ கடந்த வெள்ளிக்கிழமை அறிவித்தது.

அதன்படி, வங்கிகளில் ரூ.2,000 நோட்டுகளை இன்றுமுதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை மாற்றிக்கொள்ளலாம்.

இந்நிலையில், தபால் நிலைய கணக்குகளில் ரூ.2,000 நோட்டுகள் மாற்றப்படாது என்றும், வங்கிகளில் மட்டுமே ரூ.2,000 நோட்டுகள் மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.8K viewsThe Seithikathir, 13:08
ओपन / कमेंट
2023-05-24 16:07:41 மே29-இல் விண்ணில் பாய்கிறது ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட்!

போக்குவரத்து வழிகாட்டுதலுக்கான என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்-12 ராக்கெட், வரும் 29-ஆம் தேதி விண்ணில் பாய்கிறது.

ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஏவுதளத்திலிருந்து அன்றைய தினம் காலை 10.42 மணிக்கு அந்த ராக்கெட் செலுத்தப்படவுள்ளது.

தரைவழி, கடல்வழி மற்றும் வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக ‘இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு’ என்ற கட்டமைப்பை (ஐஆா்என்எஸ்எஸ்) உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) முடிவு செய்தது.
1.8K viewsThe Seithikathir, 13:07
ओपन / कमेंट
2023-05-24 16:06:37 கடைகளில் இனி செல்போன் எண் வழங்க கட்டாயம் இல்லை!

சில்லறை வர்த்தகக் கடைகளில் பொருள்கள் வாங்கிகொண்டு பணம் கட்டும்போது, வாடிக்கையாளர்களிடம் செல்போன் எண்ணைக் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என வியாபாரிகளுக்கு மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை உத்தரவிட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் தங்கள் செல்போன் எண்ணை பிறரிடம் பகிர்வதில் தயக்கம் உள்ளதாகவும், இதனால் பல சைபர் குற்றங்கள் நடைபெறுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட செல்போன் எண்ணை கேட்டு விற்பனையாளர்கள் வற்புறுத்துவதாகவும், இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நியாயமற்ற  செயலாக இருப்பதாகவும்,

மேலும் விற்பனையாளர்கள் செல்போன் எண்ணை சேகரிப்பதில் எந்த தேவையும் இல்லை என்று வாடிக்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
1.7K viewsThe Seithikathir, 13:06
ओपन / कमेंट
2023-05-24 16:05:26 ரூ 2000 நோட்டுகளை வாங்குவதில் ரயில்வேயில் தடையில்லை.

'பயணியருக்கான சேவையை பெற, 2000 ரூபாய் நோட்டுகளை வாங்குவதில் ரயில்வேயில் எந்த தடையும் இல்லை' என, தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1.6K viewsThe Seithikathir, 13:05
ओपन / कमेंट
2023-05-24 14:49:29 தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனத்திற்கும், சிங்கப்பூரைச் சேர்ந்த Hi-P இண்டர்நேஷ்னல் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.

மின்னணு பாகங்கள் தயாரிப்பு நிறுவனமான Hi-P இண்டர்நேஷ்னல், தமிழ்நாட்டில் ரூ. 312 கோடி முதலீடு.

சிங்கப்பூரைச் சேர்ந்த ஐடிஇ கல்வி சேவை நிறுவனம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இடையே ஒப்பந்தம் கையெழுத்து.

சிங்கப்பூர் இந்தியா கூட்டாண்மை அலுவலகம், தமிழ்நாடு சிப்காட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்.
1.8K viewsDeva Nathan, 11:49
ओपन / कमेंट
2023-05-24 14:49:25
1.8K viewsDeva Nathan, 11:49
ओपन / कमेंट