Get Mystery Box with random crypto!

Kitchen OLBN ™ 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

टेलीग्राम चैनल का लोगो kitchenolbn — Kitchen OLBN ™ 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗 K
टेलीग्राम चैनल का लोगो kitchenolbn — Kitchen OLBN ™ 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗
चैनल का पता: @kitchenolbn
श्रेणियाँ: भोजन
भाषा: हिंदी
ग्राहकों: 1.55K
चैनल से विवरण

🍱 சமையல் குறிப்புகள்
🥗 பாரம்பரிய சமையல்
🫕 ஆரோக்கிய சமையல்
🍗 சைவம் & அசைவம்
🍔 செய்முறை & குறிப்புகள்
🧆 வீட்டு சமையல்
🧄 மருத்துவ சமையல்
🍳 Fast Food
🍟 Street Food
🍧 Healthy Food & Tips
🫕 @KitchenOLBN

Ratings & Reviews

2.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

0

2 stars

1

1 stars

1


नवीनतम संदेश 3

2022-01-16 15:36:05
அசத்தலான கிச்சன் டிப்ஸ்! - Kitchen OLBN

◆ மோர்குழம்பு தயாரிக்கும் போது அடுப்பில் இருந்து இறக்கும் முன் உப்பு சேர்க்க கூடாது. அப்படி சேர்த்தால் மோர்குழம்பு நீர்த்து போய்விடும்.

◆ கேரட் அல்வா அல்லது கோதுமை மாவு அல்வா செய்யும் போது மாவுக்கேற்றாற்போல் நெய்சேர்த்து வறுத்து அதில் பால் அல்லது தண்ணீர் சேர்த்து கிளற வேண்டும். சர்க்கரைக்கு பதில் வெல்லம் சேர்க்க இன்னும் சுவையாக இருக்கும்.

@KitchenOLBN
1.6K viewsedited  12:36
ओपन / कमेंट
2022-01-16 04:31:00
அசத்தலான சமையலுக்கு கிச்சன் டிப்ஸ்! - Kitchen OLBN

◆ பருப்பு பொடி செய்யும் போது துவரம் பருப்புடன் சிறிது கொள்ளுப் பயரையும் சேர்த்து கொண்டால் பொடி மிகவும் சுவையாக இருக்கும். இது வாயுப் பிரச்சனையை தீர்ப்பதோடு கொழுப்பையும் குறைக்க உதவுகிறது.

◆ பாயாசம் செய்யும் போது ஜவ்வரிசி ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க வெறும் வாணலியில் நெய் சேர்த்து வறுத்தால் ஜவ்வரிசி ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.

@KitchenOLBN
1.5K views01:31
ओपन / कमेंट
2022-01-15 15:30:42
கோதுமை ரவை பொங்கல் செய்யலாம் வாங்க! - Kitchen OLBN

1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கோதுமை ரவையை போட்டு லேசாக வறுக்கவும்.

பின் பாசிப்பருப்பை சேர்த்து லேசாக வறுக்கவும்.

பின் 3 கப் தண்ணீர், உப்பு சேர்த்து வேகவிடவும்.

வெந்தவுடன் தாளித்து வைத்திருந்த மிளகு, பச்ச மிளகாய், இஞ்சி, சீரகம், முந்திரி, கறிவேப்பிலை சேர்த்து கிளறி இறக்கினால் சத்தான கோதுமை ரவை பொங்கல் ரெடி.

@KitchenOLBN
1.5K views12:30
ओपन / कमेंट
2022-01-15 09:30:44
சமையல் குறிப்புகள்! - Kitchen OLBN

◆ எலுமிச்சை சாதம் செய்யும்போது இஞ்சி, பச்சை மிளகாயை மிக்சியில் அரைத்து வதக்கி, பின் சாதம் போட்டு கிளறினால் சுவையாக இருக்கும்.

◆ இஞ்சி பூண்டு விழுது நீண்ட காலம் புதிதாக இருக்க, அதை தயாரிக்கும் போது எண்ணெய் மற்றும் உப்பு கலந்து ஃபிரிட்ஜில் காற்று புகாத டப்பாவில் சேமிக்கவும்.

◆ பாகற்காயை வறுவல் செய்யும்போது, காயை எண்ணெய்யில் நன்றாக வறுத்து, பிறகு உப்பு, காரம் போட்டால் மொறுமொறுப்பு குறையாமல் இருக்கும்.

@KitchenOLBN
1.4K views06:30
ओपन / कमेंट
2022-01-14 17:30:30
அசத்தலான சமையலுக்கு டிப்ஸ்! - Kitchen OLBN

◆ துவரம்பருப்பை வேக வைக்கும் போது சிறிய தேங்காய் துண்டை நறுக்கி போட்டால் பருப்பு விரைவில் வெந்து பக்குவமாக இருக்கும்.

◆ தோசைக்கு மாவு அரைக்கும் போது கொஞ்சம் வெண்டைக்காயையும் சேர்த்து அரைத்தால் தோசை மிருதுவாக இருக்கும்.

◆ தக்காளி சட்னி செய்யும்போது சிறிது வறுத்த எள்ளுப்பொடி & எலுமிச்சை சாறு கலந்தால் ருசி அதிகமாக இருக்கும்.

@KitchenOLBN
1.4K views14:30
ओपन / कमेंट
2022-01-14 14:31:00
சுவையான சில டிப்ஸ்..! - Kitchen OLBN

◆ குலாப் ஜாமுன் ஜீரா மிகுந்துவிட்டால், அதில் மைதாவை சிறிது சிறிதாக சேர்த்து பிசைந்து சப்பாத்தி போல் திரட்டி, சதுர துண்டுகளாக வெட்டி. எண்ணெயில் பொரித்தால் சுவையான பிஸ்கட் ரெடி.

◆ எந்தவிதமான சூப் செய்தாலும், சோள மாவு இல்லாவிட்டால், ஒரு டீஸ்பூன் அவலை வறுத்து, பொடித்து, சலித்து, அதில் சேர்த்துக் கொதிக்கவிட்டால் சூப் கெட்டியாக, ருசியாக இருக்கும்.

@KitchenOLBN
1.3K views11:31
ओपन / कमेंट
2022-01-14 07:30:59
மூலிகை பூரி செய்யலாம் வாங்க..

ஒரு கைப்பிடி அளவு தூதுவளை, முள் முருங்கை, ஆடாதோடை இலை, முருங்கைக்கீரை இவைகளை விழுதாக அரைக்கவும்.

இதனுடன் ஒரு கப் வரகரிசி மாவு, ஒரு கப் பச்சரிசி மாவு சேர்த்து கலக்கவும்.

பிறகு உப்பு, மிளகுதூள், சுக்குத்தூள் சேர்த்து கெட்டியாக பிசையவும்.

பின் சிறு பூரிகளாக தட்டி எண்ணெயில் பொரித்து எடுத்தால் மூலிகைபூரி ரெடி.

இது சளி, இருமலை போக்கக்கூடியது.

@KitchenOLBN
1.3K views04:30
ओपन / कमेंट
2022-01-14 05:30:41
சமையல் குறிப்புகள்..

◆ பூசணியை சமைக்கும்போது, விதைகளுடன் கூடிய ஜவ்வு போன்ற பகுதியை தூக்கி எறிந்துவிடாமல், அதை தோசைக்கு அரைக்கும் மாவுடன் சேர்த்து அரைத்தால் மிருதுவான தோசை கிடைக்கும்.

◆ முருங்கைக்கீரையை சமைக்கும்போது, சிறிதளவு சர்க்கரை கலந்து சமைத்தால் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாமல் உதிரியாக இருக்கும்.

◆ சோளத்தை வேக வைக்கும்போது ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்க்க, அதில் இயற்கையாக உள்ள இனிப்புச்சுவை தூக்கலாக தெரியும்; ருசியும் கூடும்.

@KitchenOLBN
1.3K views02:30
ओपन / कमेंट
2022-01-14 03:30:51
பொங்கலோடு
பொங்கட்டும் மகிழ்வு..

பெருகட்டும் வளம்!



இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!



@KitchenOLBN
1.3K views00:30
ओपन / कमेंट
2022-01-09 05:42:46
சமையலறை டிப்ஸ்..! - Kitchen OLBN

● ரசம் ஒரு கொதிக்கு அதிகமாக கொதிக்ககூடாது.

● காபிக்கு பால் ஒரு கொதிக்கு மேல் காயக்கூடாது.

● மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

● கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

● காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

● தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.

● பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

@KitchenOLBN
1.8K viewsedited  02:42
ओपन / कमेंट