Get Mystery Box with random crypto!

Kitchen OLBN ™ 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗

टेलीग्राम चैनल का लोगो kitchenolbn — Kitchen OLBN ™ 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗 K
टेलीग्राम चैनल का लोगो kitchenolbn — Kitchen OLBN ™ 🫕 Samayal 🥗 Food 🍔 சமையல் 🍕 உணவு 🍱 கிச்சன் 🍧 சைவம் 🧆 அசைவம் 🍗
चैनल का पता: @kitchenolbn
श्रेणियाँ: भोजन
भाषा: हिंदी
ग्राहकों: 1.55K
चैनल से विवरण

🍱 சமையல் குறிப்புகள்
🥗 பாரம்பரிய சமையல்
🫕 ஆரோக்கிய சமையல்
🍗 சைவம் & அசைவம்
🍔 செய்முறை & குறிப்புகள்
🧆 வீட்டு சமையல்
🧄 மருத்துவ சமையல்
🍳 Fast Food
🍟 Street Food
🍧 Healthy Food & Tips
🫕 @KitchenOLBN

Ratings & Reviews

2.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

0

2 stars

1

1 stars

1


नवीनतम संदेश 2

2022-06-15 10:18:30
எண்ணெய் கத்தரிக்கா காரகுழம்புனா இப்படித்தான் இருக்கணும்...

@KitchenOLBN
595 views07:18
ओपन / कमेंट
2022-05-27 16:23:46
ஊட்டச்சத்து நிறைந்த கதம்ப சுண்டல்! - Kitchen OLBN

மொச்சை, காராமணி, பச்சைப் பட்டாணி, வேர்க்கடலை, கொண்டைக்கடலை (தலா 100 கிராம்) முதல் நாள் இரவே ஊறவைத்து மறுநாள் உப்பு சேர்த்து வேக வைக்கவும்.

வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

பின் வேகவைத்த சுண்டலை இதில் சேர்த்து தேங்காய் துருவலை தூவி கிளறி இறக்கினால் கதம்ப சுண்டல் ரெடி!

@KitchenOLBN
192 viewsedited  13:23
ओपन / कमेंट
2022-05-27 16:17:30
'ஷெல்ஃப் லைஃப்' பட்டியல்!

பிரிட்ஜில் குளிரூட்டப்பட்டு பாதுகாக்கப்படும் உணவு பொருட்களின் 'ஷெல்ஃப் லைஃப்' குறித்த பட்டியல்:

● சமைத்த மீன்: 3-4 நாட்கள்

● சமைக்கப்படாத மீன்: 1-2 நாட்கள்

● பச்சை முட்டை: 3-5 வாரங்கள்

● திறக்கப்பட்ட ஜூஸ்: 1 வாரம்

● திறக்கப்படாத ஜூஸ்: 3 வாரங்கள்

● குழம்பு: 1-2 நாட்கள்

● பால்: 1 வாரம்

● வெண்ணெய்: 1-3 மாதங்கள்

● பாலாடைக் கட்டி: 1-2 வாரங்கள்

@KitchenOLBN
202 viewsedited  13:17
ओपन / कमेंट
2022-05-10 13:49:14
இட்லி பர்கர் சாப்பிடறீங்களா ஃப்ரெண்ட்ஸ்.?



@KitchenOLBN
528 views10:49
ओपन / कमेंट
2022-04-08 09:37:49
எறும்பை சமாளிக்க... டிப்ஸ்! - Kitchen OLBN

◆ வீட்டில் எறும்பு புற்று உள்ள இடங்களில் பெருங்காயத்தூளை தூவினால் எறும்பு நடமாட்டம் இருக்காது.

◆ 1 டம்ளர் நீரில் 4 ஸ்பூன் உப்பு கலந்து சுவரின் மூலைகளில் தெளித்தால் வீட்டிற்குள் எறும்புகள் நுழைவதைத் தடுக்கலாம்.

◆ 1 டம்ளர் நீரில் கற்பூரத்தை நன்கு கரைத்து, எறும்பு அதிகம் உள்ள இடங்களில் தெளித்தால், சிறிது நேரத்தில் எறும்புகள் காணாமல் போய்விடும்.

@KitchenOLBN
972 viewsedited  06:37
ओपन / कमेंट
2022-02-01 05:53:43
கிச்சன் டிப்ஸ்: நலம் தரும் வெந்தயம்! - Kitchen OLBN

◆ வெந்தயத்தை கறுப்பாக வறுத்து தூள் செய்து, காப்பி பொடியில் கலந்து குடித்து வந்தால் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு நல்லது.

◆ சாம்பார் கீரை, புளிப்பு கூட்டு போன்றவற்றை கொதித்து இறக்கும் சமயம், துளி வெந்தய பொடி தூவி இறக்கினால் நல்ல வாசனையாக இருக்கும். உடலுக்கும் ஆரோக்கியம்.

@KitchenOLBN
3.1K viewsedited  02:53
ओपन / कमेंट
2022-01-30 10:30:26
சமையல் குறிப்புகள்! - Kitchen OLBN

◆ துவரம் பருப்பை வேக வைக்கும்போது ஒரு தேக்கரண்டி வெந்தயத்தை சேர்த்து வேக வைத்தால் பருப்பு சீக்கிரம் வெந்துவிடும்.

◆ ஜவ்வரிசியை வெறும் வாணலியில் வறுத்து, பொடித்து அதை 2 தேக்கரண்டி எடுத்து மாவுடன் கலந்து வடை, பஜ்ஜி, போண்டா, தோசை, அடை போன்றவை செய்தால் மொறு மொறுப்பாக வரும்.

◆ சேனைக்கிழங்கை வேக வைக்கும் போது சிறிதளவு புளித் தண்ணீர் ஊற்றி வேக வைத்து சமைத்து சாப்பிட்டால் நாக்கு அரிக்காது.

@KitchenOLBN
2.6K viewsedited  07:30
ओपन / कमेंट
2022-01-20 08:33:31
உணவில் உப்பு அதிகமானால்..! - Kitchen OLBN

◆ உடலில் உப்பு அதிகம் சேர்வதால் சிறுநீரகக் கற்கள் உருவாகும்.

◆ நீரிழிவு நோய்க்குக் காரணமாகலாம்.

◆ உயர் ரத்த அழுத்தத்துக்கு (BP) அதிகமான உப்பு முதன்மை காரணம்.

◆ உப்பு அதிகமானால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், இதனால் நோய்கள் அதிகரிக்கும்.

◆ வயிற்றுப் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.

◆ ஒருவருக்கு ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 5 கிராம் உப்பு போதுமானது.

◆ அதேநேரம் உடலுக்கு குறைந்த அளவு உப்பும் அவசியம்.

@KitchenOLBN
2.5K viewsedited  05:33
ओपन / कमेंट
2022-01-17 14:30:38
கோதுமை மாவு கீரை அடை செய்யலாம் வாங்க! - Kitchen OLBN

கோதுமை மாவில் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

பின் அதில் நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், கீரை, கொத்தமல்லி, சீரகத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

தோசைக்கல்லில் மாவை சற்று கனமாக ஊற்றி எடுத்தால் கோதுமை மாவு கீரை அடை ரெடி.

@KitchenOLBN
2.2K views11:30
ओपन / कमेंट
2022-01-17 04:30:48
திருநெல்வேலி சுண்டக்கறி தெரியுமா? - Kitchen OLBN

மதியம் வைத்த இடி சாம்பார், அவியல், பச்சடி, பொரியல் அனைத்தையும் ஒரு பெரிய பாத்திரத்தில் ஒன்றாக சேர்த்து அதனை மீதமான தீயில் சூடேற்ற வேண்டும்.

இந்த பொருட்கள் அனைத்தும் ஒன்றாக இணைந்து சுண்டி வரும். அதன் வாசனையே ஒரு விதமாக ரம்மியமாக இருக்கும்.

இந்த கலவையோடு தேவைக்கேற்ப சற்று புளிக்கரைசல் மற்றும் மிளகாய் வத்தல் பொடி, உப்பு சேர்த்து மண் சட்டியில் சுண்ட வைத்தால் கூடுதல் சுவையாக இருக்கும்.

@KitchenOLBN
1.9K views01:30
ओपन / कमेंट