Get Mystery Box with random crypto!

𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣 𝔸
टेलीग्राम चैनल का लोगो arapporchannel — 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣
चैनल का पता: @arapporchannel
श्रेणियाँ: राजनीति
भाषा: हिंदी
ग्राहकों: 2.60K
चैनल से विवरण

Arappor Channel

Ratings & Reviews

3.00

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

1

4 stars

0

3 stars

1

2 stars

0

1 stars

1


नवीनतम संदेश 6

2022-06-10 09:12:38 மாநில நெடுஞ்சாலைத்துறையில் நடக்கும் ஊழல் சம்பந்தமான தகவல்களை மறைக்கும் தீரஜ் குமார் IAS மற்றும் அதிகாரிகள். அமைச்சர் வேலு இது குறித்து என்ன சொல்லப் போகிறார்?? @evvelu @mkstalin @CMOTamilnadu


381 views06:12
ओपन / कमेंट
2022-06-08 09:59:14 ஒரு ஏரியின் கரையில் அரசாங்கத்தின் உத்தரவையும் மீறி ஆக்கிரமிப்பாளர்களுக்கு அதிகாரிகள் பட்டா வழங்கியுள்ளனர் என்று அமைச்சர் குற்றம் சாட்டுகிறார். ஆனால் அந்த அதிகாரிகள் யார் என்றும் தெரியாது? அவர்கள் மேல் ஒரு FIR கூட பதியப்படாது. வெறும் எச்சரிக்கை தான். இப்படி ஊழல் அதிகாரிகளுக்கு பயப்படும் அரசாங்கம் மக்களுக்கு என்ன நல்லது செய்ய முடியும்?
வாங்க கேட்கலாம்.
#KollaiyaneVeliyeru | June 19 | Valluvar Kottam | 10 AM
செய்தி: https://m.dinakaran.com/article/News_Detail/771176
316 views06:59
ओपन / कमेंट
2022-06-08 09:58:19
282 views06:58
ओपन / कमेंट
2022-06-07 12:08:26
அறப்போர் இயக்கம் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஊழல்களை வெளியிட்டதால் இயக்கத்தின் மீது தொடரப்பட்ட 3 அவதூறு வழக்குகளுக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
392 views09:08
ओपन / कमेंट
2022-06-07 07:05:45 அரசு வழங்கிய பட்டா இங்கே! அரசு வழங்கிய இடம் எங்கே?

சுமார் 16 ஆண்டுகளாக அரசு பட்டா பெற்றும், உரிய நிலத்தில் குடியேற முடியாமல் பரிதவிக்கும் 130 குடும்பங்களுக்கு தீர்வு வழங்க கோரி, அம்மக்களின் பிரதிநிதிகளுடன், அறப்போர் இயக்கம் இணைந்து (06.06.2022) சேலம் மாவட்ட ஆட்சியரை சந்தித்து உடனடி தீர்வு காணுமாறும் கோரிக்கை வைத்துள்ளது.

2005ல் எடப்பாடி நகர அரசு மருத்துவமனை கட்டுமான பணி துவங்கும் போது, அந்த இடத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்த சுமார் 18 குடும்பங்களை, அரசு நிர்வாகம் அப்புறப்படுத்தியது, அப்போது அவர்களுக்கு மாற்று இடம் தருவதாக அரசு உறுதியளித்தது.

அதை தொடந்து விளிம்பு நிலை மக்கள் அடையாளம் கண்டு, அந்த 18 குடும்பங்கள் உட்பட சுமார் 130 குடும்பங்களுக்கு 17.11.2006 அன்று, சேலம் நேரு கலையரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பட்டா வழங்கப்பட்டது, அந்த நிகழ்வில் அப்போதைய வேளாண்மைத்துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கலந்து கொண்டு பட்டாவையும், அதற்குறிய லேஅவுட்டும்(Lay-Out Sketch) பயனாளிகளுக்கு வழங்கினார். ஆனால் அரசு பட்டா கிடைத்தும் அங்கு குடியேறமுடியாமலும், மாற்று இடம் கிடைக்காமலும், சுமார் 16 ஆண்டுகளாக, இன்று வரை தெருவோரமாகவே வாழ்ந்து வருகின்றனர் அந்த பயனாளிகள்.

பட்டா கிடைத்த 130 பயனாளிகளில் சுமார் 30 பயனாளிகள் ஆரம்பத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட, பட்டா நிலத்தில் வீடு கட்ட முயன்றனர், அப்போது ஒரு நபர் முழு நிலத்திற்கும் உரிமை கோரினார். மேலும், அந்த நபர் இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடியதாகவும், நீதிமன்றம் அவருக்கு சாதகமாக தீர்ப்பளித்ததாகவும் தெரிகிறது. இதனால், அரசிடம் இருந்து பட்டா கிடைத்தும் உரிய நிலம் கிடைக்காமல் 130 பயனாளிகளும் மீண்டும் நிலமற்றவர்களாக மாறினர். இதற்கிடையில், பயனாளிகளுக்கு மாற்று நிலம் ஏற்பாடு செய்து தருவதாக ஆட்சியர் மூலம் அரசு உறுதியளித்ததாக தெரிகிறது.

அதற்காக சேலம், ஆவணிபேரூர் கீழ்முகம் கிராமத்தில், இந்து சமய அறநிலையத் துறையின் (HR & CE) கட்டுப்பாட்டின் கீழ் வரும், அருள்மிகு கோட்டை மாரியம்மன் & சின்ன மாரியம்மன் திருக்கோவிலுக்குச் சொந்தமான, சர்வே எண். 246/2 - 6.30 ஏக்கர் நிலம் கண்டறியப்பட்டு,அந்த நிலத்திற்கு சந்தை மதிப்பு / வழிகாட்டு மதிப்பைவிட சுமார் 150% அதிகம் செலுத்த ஒப்புதல் தெரிவித்து மாவட்ட ஆட்சியர் கடிதம் வழங்கியதாக அறிகிறோம் (ந.க.எண் 20034/2011(pc2) - நாள் 07.03.2012), ஏறக்குறைய 9 ஆண்டுகள் கடந்தும், இந்த விவகாரத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

விளிம்பு நிலையில் வாழும் அந்த மக்கள், கைத்தறி மற்றும் இதர பகுதிகளில் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். கடந்த 16 ஆண்டுகளாக சேலம் எடப்பாடி தாலுகா மற்றும் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் பல்வேறு அதிகாரிகளின் அலட்சிய போக்கால் அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தாமதமான நீதி என்பது மறுக்கப்பட்ட நீதியாகும், மேலும் கடந்த காலங்களில் பல அதிகாரிகளின் அலட்சிய போக்கு காரணமாக மக்கள் ஏற்கனவே நிறைய பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நீண்ட கால பிரச்சனைக்கு உடனடி தீர்வு காணுமாறும், 130 பயனாளிகளுக்கும் மேற்கண்ட இடத்திலோ அல்லது அருகிலுள்ள வேறு இடத்திலோ உடனடியாக பட்டா மற்றும் உரிய நிலம் வழங்க அறப்போர் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
402 views04:05
ओपन / कमेंट
2022-06-07 07:05:41
358 views04:05
ओपन / कमेंट
2022-06-06 11:11:20 Channel photo updated
08:11
ओपन / कमेंट
2022-06-06 08:34:35
ஒரு சில நேர்மையான IAS அதிகாரிகள் தவிர பெரும்பாலான IAS அதிகாரிகள் ஊழல் செய்ய யோசனை கொடுப்பவர்களாகவும், ஊழலுக்கு அனுமதி கொடுப்பவர்களாகவும், ஊழல் அரசியல்வாதிகளுடன் கூட்டணி அமைத்து செயல்பட்டு வருகிறார்கள்.
ஊழல் செய்து கொள்ளை அடிக்க இந்த ஊழல் அதிகாரிகள் துணை தேவைப்படுவதால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் இவர்களின் அதிகாரம் பறிக்கப்படுவதில்லை. இவர்கள் மீது ஊழல் வழக்குகள் பாய்வதில்லை. இவர்களில் யாரும் சிறைக்கு செல்வதும் இல்லை.
மக்களாகிய நாம் இந்த ஊழல் அதிகாரிகளுக்கு எதிராக தெருவில் இறங்கி குரல் கொடுக்க ஆரம்பித்தால் மட்டுமே இவர்களது ஊழல் கொட்டத்தை அடக்க முடியும். அறப்போர் இயக்கத்துடன் இணைந்து கேள்விகளை கேட்க June 19 காலை 10 மணிக்கு வள்ளுவர் கோட்டத்தில் ஒன்று கூடுவோம்.
311 views05:34
ओपन / कमेंट
2022-06-05 07:50:47 நிலக்கரி வாங்குவதில் எப்படி ஊழல் நடக்கிறது? இதில் அதானி நிறுவனத்தின் பங்கு என்ன? ஒரு சின்ன கதை சொல்றோம் கேளுங்க.
2018ம் வருடம் அறப்போர் வெளியிட்ட காணொளி.


373 views04:50
ओपन / कमेंट
2022-06-04 13:45:52 4 வருடங்களாக அதிமுக ஆட்சியில் கிறிஸ்டி என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ரேஷன் பொருட்கள் டெண்டர்களை எடுக்கும் வகையில் செட்டிங் செய்து பருப்பு பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களை சந்தை விலையை விட மிக அதிகமான் விலையில் கிறிஸ்டி நிறுவனத்திடம் வாங்கியதால் அரசுக்கு 2028 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கிறிஸ்டி நிறுவனம் 2028 கோடி கொள்ளை அடித்துள்ளது. இதில் அதிமுக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அன்றைய உணவுத்துறை செயலாளர் சுதா தேவி IAS மற்றும் உணவுத்துறை உயர் அதிகாரிகளின் பங்கு என்ன என்பது பற்றி இது வரை இந்த ஒரு வருடத்தில் துறை ரீதியான விசாரணையும் நடத்தப்படவில்லை, அறப்போர் லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகாரும் விசாரிக்கப்படவில்லை.

திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்கட்சிகளும், கிறிஸ்டி நிறுவனமும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். திமுகவின் உணவுத்துறை அமைச்சர் ஊழலை தடுத்து விட்டோம் ஊழலை தடுத்து விட்டோம் என்று சொல்கிறாரே தவிர அந்த ஊழலை செய்தது யார் அவர்கள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று வாய் திறக்க மறுக்கிறார். வேறு யார் தான் இந்த ஊழல் பற்றியும் இந்த ஊழல்வாதிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் பேசுவது? மக்களாகிய நாம் தானே.

வாங்க உரக்க கேட்கலாம்.
ஊழல்வாதிகள் இங்கே! FIR எங்கே?
#KollaiyaneVeliyeru | June 19 | Valluvar Kottam | 10 AM

Register to Volunteer: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeP9IwWO3BihT03i7FWzb9C60ZFWF6sa9uB1UOmad-EODhN4A/viewform?usp=sf_link
235 views10:45
ओपन / कमेंट