Get Mystery Box with random crypto!

4 வருடங்களாக அதிமுக ஆட்சியில் கிறிஸ்டி என்ற ஒரே ஒரு நிறுவனம் ம | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

4 வருடங்களாக அதிமுக ஆட்சியில் கிறிஸ்டி என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் ரேஷன் பொருட்கள் டெண்டர்களை எடுக்கும் வகையில் செட்டிங் செய்து பருப்பு பாமாயில் மற்றும் சர்க்கரை ஆகிய பொருட்களை சந்தை விலையை விட மிக அதிகமான் விலையில் கிறிஸ்டி நிறுவனத்திடம் வாங்கியதால் அரசுக்கு 2028 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது கிறிஸ்டி நிறுவனம் 2028 கோடி கொள்ளை அடித்துள்ளது. இதில் அதிமுக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அன்றைய உணவுத்துறை செயலாளர் சுதா தேவி IAS மற்றும் உணவுத்துறை உயர் அதிகாரிகளின் பங்கு என்ன என்பது பற்றி இது வரை இந்த ஒரு வருடத்தில் துறை ரீதியான விசாரணையும் நடத்தப்படவில்லை, அறப்போர் லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகாரும் விசாரிக்கப்படவில்லை.

திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்கட்சிகளும், கிறிஸ்டி நிறுவனமும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். திமுகவின் உணவுத்துறை அமைச்சர் ஊழலை தடுத்து விட்டோம் ஊழலை தடுத்து விட்டோம் என்று சொல்கிறாரே தவிர அந்த ஊழலை செய்தது யார் அவர்கள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்று வாய் திறக்க மறுக்கிறார். வேறு யார் தான் இந்த ஊழல் பற்றியும் இந்த ஊழல்வாதிகள் விசாரிக்கப்பட வேண்டும் என்பது பற்றியும் பேசுவது? மக்களாகிய நாம் தானே.

வாங்க உரக்க கேட்கலாம்.
ஊழல்வாதிகள் இங்கே! FIR எங்கே?
#KollaiyaneVeliyeru | June 19 | Valluvar Kottam | 10 AM

Register to Volunteer: https://docs.google.com/forms/d/e/1FAIpQLSeP9IwWO3BihT03i7FWzb9C60ZFWF6sa9uB1UOmad-EODhN4A/viewform?usp=sf_link