Get Mystery Box with random crypto!

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

टेलीग्राम चैनल का लोगो welovehealerbaskar — ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு
टेलीग्राम चैनल का लोगो welovehealerbaskar — ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு
चैनल का पता: @welovehealerbaskar
श्रेणियाँ: गूढ़ विद्या
भाषा: हिंदी
ग्राहकों: 4.26K
चैनल से विवरण

"ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை சேனல்"
சேனலின் நோக்கம்:
🌸 வேற்றுமையில் ஒற்றுமை( இயற்கை மருத்துவ முறைகளை ஒன்றிணைத்தல்)
🌸 கூட்டு பிரார்த்தனை
🌸 தற்சார்பு வாழ்க்கை
🌸 மேலதிகாரம் சொல்லும் நல்ல விசயங்களை மட்டும் ஏற்று நடத்தல்.
வாழ்க வையகம் 🙏.

Ratings & Reviews

2.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

2

2 stars

1

1 stars

0


नवीनतम संदेश 16

2022-04-23 00:30:27 இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

உடலைப் போற்றிப் பாதுகாப்போம்

ஐம்புலன்கலான
கண் காது மூக்கு நா உடல் ஆகியவற்றை குளிர்ந்த நீரில் மற்றும் மிதமான நீரில் தூய்மை செய்து உற்சாகப்படுத்துவோம்

அதிகாலையில் எழுந்து காற்றின் அதிக பிராணனை பெற்று நுரையீரலை உற்சாகப்படுத்துவோம்

அப்படியே காலாற நடந்தும் குனிந்து நிமிர்ந்து வேலை செய்தும் இதயத்தை உற்சாகப்படுத்துவோம்

ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு வயிற்று உறுப்புகளை உற்சாகப்படுத்தவோம்

தாகத்தின் போது ஆற்று நீர் ஊற்று நீர் மற்றும் நமது பாரம்பரிய நீர் ஆகாரங்களை குடித்து சிறுநீரகத்தை உற்சாகப்படுத்தவோம்

இரவு நேரங்களில் நன்றாக தூங்கி பித்தப்பை கல்லீரலை உற்சாகப்படுத்துவோம்

மனதை எப்போதும் அமைதியாக இயல்பாக வைத்துக்கொண்டு எளிமையாக பாதுகாப்பாக மகிழ்ச்சியாக நாம் வாழ்வோமாக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
352 views21:30
ओपन / कमेंट
2022-04-22 19:06:36 வாழ்க வையகம், வாழ்க வையகம்

ஆரணியை சேர்ந்த புண்ணியகோட்டி அவர்களின் குடல் மண்டலம் மொத்தமும் புத்துயிர் பெற்று, பூரணமாக குணமடையவும், நல்ல மனதைரியம் கிடைக்க பெற்று, ஆரோக்கியமான வாழ்க்கை வாழவும் எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
67 views16:06
ओपन / कमेंट
2022-04-22 05:30:50 வாழ்க வையகம், வாழ்க வையகம்

சென்னையை சேர்ந்த ஆ. உதயகுமார் அவர்கள் அவர்களின் கணையம் வலுப்பெற்று, பூரணமான குணமடையவும், அவர் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் நீளாயுள் வாழவும் எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
328 views02:30
ओपन / कमेंट
2022-04-22 00:30:36 இன்றைய கூட்டு பிராத்தனை

இயற்கையாக உடலை குளிர்ச்சியாக வைப்போம்

கருவேப்பிலைச் சாறு தேய்த்துக் குளிப்போம்

வெள்ளரிச்சாறு
தேய்த்துக் குளிப்போம்

நுங்கு நீர் தேய்த்து குளிப்போம்

புதினாச் சாறு தேய்த்து குளிப்போம்

குளிர்ந்த நீரில் வெட்டிவேர் சேர்த்துக் குளிப்போம்

சோற்றுக்கற்றாழை சேர்த்து குளிப்போம்

வாரம் இருமுறை செக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்போம்

தேங்காய் பால் (15 தினங்களுக்கு ஒரு முறை) தேய்த்து குளிப்போம்

புற்றுமண் தேய்த்துக் குளிப்போம்

இயற்கை முறையில் உடலை குளிர்ச்சி படுத்துவோம்
வெப்பத்தைத் தணித்து வாழ்வோம்

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
378 views21:30
ओपन / कमेंट
2022-04-21 17:30:33 வாழ்க வையகம், வாழ்க வையகம்

வேலூரை சேர்ந்த சுரேஷ் அவர்கள் விரும்பும் அரசுப்பணி அவருக்கு விரைவில் கிடைக்க அவரை வாழ்த்தி, பிரபஞ்ச பேராற்றலிடம் பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
214 views14:30
ओपन / कमेंट
2022-04-21 13:30:41 வாழ்க வையகம், வாழ்க வையகம்

திருச்செங்கோட்டை சேர்ந்த அ.சண்முகானந்தம் அவர்களின் சிறுநீரக மண்டலம் பூரணமாக குணமடைந்து, கழிவு நீக்க மண்டலம் சீராக செயல்படவும், அவர் நல்ல உடல் மற்றும் மன நலத்துடன் நீளாயுள் வாழவும் எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
316 views10:30
ओपन / कमेंट
2022-04-21 11:18:28 வாழ்க வையகம், வாழ்க வையகம்

திருச்செங்கோட்டை சேர்ந்த‌ திரு. அண்ணாமலை அவர்களின் மனைவி திருமதி. அ. பாக்கியம் அவர்களின் கண் செல்கள், நரம்புகள், தசைகள் என அனைத்தும் புத்துயிர் பெறவும், அவரது கண்கள் பூரணமாக குணமடைந்து தெளிவான கண் பார்வையுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும் வாழ எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
357 views08:18
ओपन / कमेंट
2022-04-21 00:30:54 கூட்டு பிராத்தனை

இறைவனின் படைப்புகளை போற்றுவோம்

நீர் நிலம்

அடர்வனம்

இளந்தென்றல்

தொடுவானம்

செந்தீ கதிரவன்

இயற்கை கட்டுமானங்கள்

பல்லுயிர்களின் புகலிடங்கள்

எண்ணிலடங்கா
அரிய காட்சிகள்

இறைவனின் இந்தபிரம்மாண்ட படைப்புகளை பாதுகாத்து மகிழ்வுடன் வாழ்வோமாக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
484 views21:30
ओपन / कमेंट
2022-04-20 00:30:41 இன்றைய கூட்டுப்பிரார்த்தனை
மழை ஆற்றலுக்கு நன்றி

ஊற்று நீர் சுரப்பதற்கும்

ஆற்று நீர் பெருகுவதற்கும்

பொய்கை நிலைத்திருப்பதற்கும்

இயற்கை பசுமையுடன் திகழ்வதற்கும்

விளை நிலம் ஈரப்பதமாக இருப்பதற்கும்

எங்கும் குளிர் தென்றல் வீசுவதற்கும்

பல்லுயிர்கள் நலமாய் வாழ்வதற்கும்

மக்கள் வளமாக மகிழ்ச்சியாக வாழ்வதற்கும்

பருவம் தவறாது பெய்து வரும் மழை ஆற்றலே உன்னால் மட்டுமே அனைத்தும் சாத்தியம் என்பதை உணர்ந்தேன்
உமக்கு மனமார்ந்த நன்றிகள் கோடி

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
595 views21:30
ओपन / कमेंट
2022-04-19 00:30:25 இன்றைய கூட்டு பிரார்த்தனை
🗨🗨🗨மழை ஆற்றலே வருக வருக

கோடை மழையே
வருக வருக

ஊற்று நீரை பெருக்க
வருக வருக

ஆற்று நீரை அதிகரிக்க வருக வருக

அன்னை பூமியை நனைக்க வருக வருக

இயற்கையை செழிப்பாக்க வருக வருக

பல உயிர்களின் நலனை காக்க வருக வருக

சூரியனை சற்று இளைப்பாற வைக்க
வருக வருக

நிலமெங்கும் குளிர்ந்த காற்று வீச வருக வருக

உயிர்களின் ஒழுக்கம் மேம்பட வருக வருக

மக்கள் செல்வ செழிப்போடு அற வழியில் நடக்க மழையே வருக வருக

ஒட்டுமொத்த உயிர்களும் வாழ்வதற்கு ஆதாரமாக விளங்கும் மழையாற்றலே வருக வருக

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
691 views21:30
ओपन / कमेंट