Get Mystery Box with random crypto!

சாலை மீது சாலை போட்டு வீடுகளை குழிக்குள் தள்ளும் அபாயகரமான செய | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

சாலை மீது சாலை போட்டு வீடுகளை குழிக்குள் தள்ளும் அபாயகரமான செயலுக்கு இன்று தமிழக அரசு முடிவுரை எழுதியுள்ளது. இனி பழுதடைந்த பழைய சாலையை அப்புறப்படுத்திய பிறகு தான் புதிய சாலை போட வேண்டும். எத்தனை ஆழத்திற்கு பழைய சாலையை அப்புறப்படுத்துகிறார்களோ அந்த அளவிற்கு மட்டும் தான் புதிய சாலைகள் போடப்பட வேண்டும். அதாவது பழைய சாலை இருந்த மட்டத்தை விட சிறிதளவும் புதிய சாலை உயரமாக இருக்க கூடாது.

இந்த உத்தரவு மிகவும் முக்கியமானது. பல கனவுகளுடன் புதிய வீடு கட்டி குடியேறுபவர்களின் வீடுகளை 10 வருடத்திலேயே சாலை உயரத்தை அதிகரிப்பதன் மூலம் மழை நீர் சேகரிப்பு குளங்களாக மாற்றிக்கொண்டு இருந்தார்கள். மழைக்காலம் வந்தாலே மோட்டார் வாடகைக்கு எடுத்து வீட்டு உள்ளே வரும் மழை நீரை வெளியேற்றும் வேலையை செய்ய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டார்கள். சென்னை மற்றும் பல நகரங்களில் லட்சக்கணக்கில் செலவு செய்து மக்கள் தங்கள் வீடுகளை உயரப்படுத்தும் பணிகளை செய்து வருகிறார்கள். சாலை உயரம் அதிகரிக்கும் என்று பயந்து மக்கள் தங்கள் வீட்டு உயரத்தை தேவைக்கு அதிகமாக உயர்த்தி வாகனங்கள் உள்ளே செல்ல மிகப்பெரிய சாய்தளங்களை சாலையை ஆக்கிரமித்து அமைத்தார்கள். தற்பொழுது போடப்பட்டுள்ள உத்தரவு கண்டிப்புடன் செயல்படுத்தப்பட்டால் இந்த தூயரங்களில் இருந்து மக்களுக்கு மிகப்பெரிய விடுதலை கிடைக்கும்.

புதிய சாலைகள் அமைக்கும் முன்பு பழைய சாலைகளை அகற்ற வலியுறுத்தி சென்னை மாநகராட்சியுடன் அறப்போர் இயக்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. பல இடங்களில் அறப்போர் இயக்க தன்னார்வலர்களின் புகார்களால் பழைய சாலைகள் அகற்றப்பட்டு வந்தாலும் இனி பழைய சாலையை அகற்றாமல் எந்த புதிய சாலையும் போடக்கூடாது என்று மக்கள் துணிந்து சொல்லலாம். எந்த ஒரு காரணத்தையும் சொல்லி நம்முடைய சாலை உயரத்தை ஒப்பந்ததாரர்கள் அதிகரிக்க முடியாது.

அரசு உத்தரவை கமெண்ட் பகுதியில் பார்க்கலாம்.