Get Mystery Box with random crypto!

ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

टेलीग्राम चैनल का लोगो welovehealerbaskar — ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு
टेलीग्राम चैनल का लोगो welovehealerbaskar — ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு
चैनल का पता: @welovehealerbaskar
श्रेणियाँ: गूढ़ विद्या
भाषा: हिंदी
ग्राहकों: 4.26K
चैनल से विवरण

"ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை சேனல்"
சேனலின் நோக்கம்:
🌸 வேற்றுமையில் ஒற்றுமை( இயற்கை மருத்துவ முறைகளை ஒன்றிணைத்தல்)
🌸 கூட்டு பிரார்த்தனை
🌸 தற்சார்பு வாழ்க்கை
🌸 மேலதிகாரம் சொல்லும் நல்ல விசயங்களை மட்டும் ஏற்று நடத்தல்.
வாழ்க வையகம் 🙏.

Ratings & Reviews

2.67

3 reviews

Reviews can be left only by registered users. All reviews are moderated by admins.

5 stars

0

4 stars

0

3 stars

2

2 stars

1

1 stars

0


नवीनतम संदेश 33

2021-12-04 00:30:56 இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

" பல்லுயிர்களுக்கு நன்றி "

உலக மக்கள் அனைவரும்

ஏர் உழும் எருதுகளிடம் பரிவு காட்டுவோம்!

பிரதான உணவைத் தரும் பசுக்களிடம்
அன்பு செலுத்துவோம்!

வயல்வெளிகளை வட்டமிடும் ஆடுகளை நேசிப்போம்!

தெருவோரம்
சுற்றித்திரியும் விலங்குகளிடம் இரக்கம் கொள்வோம்!

குளங்களில் துள்ளிக்குதிக்கும் மீன்களுடன் நாமும் துள்ளி குதித்து விளையாடுவோம்!

ஊர்க்குருவிகளை
காகங்களை கருணையோடு நோக்குவோம்!

எட்டு திக்கிலும் அன்பை வெளிப்படுத்துவோம்!

பிரபஞ்சத்தோடு
நல் உணர்வுகளை பரிமாறுவோம்!

அனைத்து உயிர்களிடத்தும் உண்மையான அன்பை கொடுப்போம்!

அனைவரும் ஒன்றிணைந்து அன்பு நிறைந்த உலகத்தை உருவாக்குவோம்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
990 views21:30
ओपन / कमेंट
2021-12-03 16:51:46 வாழ்க வையகம், வாழ்க வையகம்

சேலம் மாவட்டம், நாச்சங்காட்டை சேர்ந்த திரு.அருண் பிரகாஷ் அவர்களுக்கு நல்ல எண்ணங்களும், நல்ல பழக்கங்களும் மேலோங்கவும், அவர் திருமதி. சௌமியா, குழந்தை மற்றும் குடும்ப நலனுக்கேற்றவாறு செயல்படவும், அவரது உடல்நிலை மேம்படவும், அவர் தனது மனைவி, குழந்தையுடன் ஒற்றுமையுடன் வாழவும் பிரபஞ்ச பேராற்றலை பிரார்த்திக்கிறோம்.

அருட்பேராற்றல் கருணையினால் திரு.அருண் பிரகாஷ், திருமதி.சௌமியா மற்றும் குழந்தை ஜாஸ்மிகா ஆகியோர் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
705 views13:51
ओपन / कमेंट
2021-12-03 00:30:20 இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

கடல் அன்னைக்கு நன்றி!

கடலில் உருவாகிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்திற்கு நன்றி!

அனைத்து உயிர்களின் நலன் கருதி, மழை அளவாக பொழிந்தமைக்கு நன்றி!

கார்த்திகையில் கன மழை பெய்து கொண்டிருப்பதற்கு நன்றி!

அனைத்து நீர் ஆதாரங்களும் நிரம்பி கொண்டிருப்பதற்கு நன்றி!

அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பு ஏற்படுத்தி தரும் பிரபஞ்ச பேராற்றலுக்கு
மிக்க நன்றி!

அனைத்து உயிர்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்
இறை ஆற்றலுக்கு நன்றி!

உயிர்களின்
எதிர்கால நலன் கருதி எட்டுத்திக்கிலும்
பெய்து கொண்டிருக்கும் கனமழைக்கு
கோடான கோடி நன்றிகள்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
1.8K views21:30
ओपन / कमेंट
2021-12-02 13:30:58 வாழ்க வையகம், வாழ்க வையகம்

சென்னையில் வசிக்கும் திரு. மகேஷ் அவர்களின் மனைவி திருமதி. கீதாஞ்சலி அவர்கள் தனது கணவர் மீதும் அவரது குடும்பத்தின் மீதும் அன்புடனும், ஒற்றுமையுடன் இருக்கவும், மனமகிழ்ச்சியுடனும் வாழவும், திருமதி.கீதாஞ்சலி உலகில் நடக்கும் உண்மைகளை உணர்ந்து பிரபஞ்சத்தின் சக்தியால் பாதுகாப்பாக இருப்பதற்கும் பிரபஞ்ச பேராற்றலே அருள்புரிவாயாக.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன் .
305 views10:30
ओपन / कमेंट
2021-12-02 10:08:45 வாழ்க வையகம், வாழ்க வையகம்

பெங்களூரை சேர்ந்த கமல்நாத் அவர்களுக்கு பொருத்தமான பெண்ணுடன் கூடிய விரைவில் திருமணம் நடைபெற அவரை வாழ்த்தி, பிரபஞ்ச பேராற்றலிடம் அவருக்காக பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
394 views07:08
ओपन / कमेंट
2021-12-02 00:31:04 இன்றைய கூட்டு பிரார்த்தனை

குழந்தைகள் அனைவரும் ஒற்றுமையாக விளையாடி மகிழட்டும்!

கபடி, கில்லி, கிட்டி, கோலி, குதிரை பந்து, பம்பரம், திருடன் போலீஸ், நீச்சல், வில், கிரிக்கெட், என அவர் அவர் வட்டார விளையாட்டுக்களை குழந்தைகள் ஒற்றுமையாக விளையாடி மகிழட்டும்!

குழந்தைகள், தட்டாங்கள், தாயம், ஆடுபுலி ஆட்டம், பல்லாங்குழி, நொண்டி, கண்ணாமூச்சி, ஒத்தையா ரெட்டையா, என பல்வேறு விதமான விளையாட்டுக்கள் விளையாடி மனதிற்கும், கண்களுக்கும், உடம்பிற்கும், புத்திக்கும், வேலையும் ஆரோக்கியமும் கிடைக்கட்டும்!

நமது பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் குழந்தைகளின் ஒற்றுமை ஓங்கி வளரட்டும்!

பெற்றோர்கள் அனைவரும் தாங்கள் விளையாடி மகிழ்ந்ததை உணர்ந்து தன் குழந்தைகளையும் வீட்டிற்கு வெளியே மற்ற குழந்தைகளுடன் விளையாட விடட்டும்!

குழந்தைகள் பெரியவர்களை மதித்து நடக்கட்டும்!

பாரம்பரிய விளையாட்டுகள் மூலம் குழந்தைகளின், மெய் ஞானம், கட்டுறிதியான உடல், தெளிவான மனம், வலிமையான ஒற்றுமை, பாசமுள்ள சகோதரத்துவம், கள்ளங்கபடமற்ற அன்பு,... ஆகிய அனைத்தும் கிடைக்கட்டும்!

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!
49 views21:31
ओपन / कमेंट
2021-12-01 03:30:12 உலக நன்மைக்காகவும், மற்றவர்களின் நன்மைக்காகவும் தினமும் பதியப்படும் நமது குழுவின் பிரார்த்தனைகளில் தங்களது நேரத்தை செலவிட்டு பங்குபெறும் அனைத்து தூய உள்ளங்களுக்கும் மிக்க நன்றி .

அருட்பேராற்றல் கருணையினால் நீங்கள் அனைவரும், உங்களது அன்பு குடும்பமும் உடல்நலம், நீளாயுள், நிறைசெல்வம், உயர்புகழ், மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
505 views00:30
ओपन / कमेंट
2021-12-01 00:30:30 இன்றைய கூட்டு பிரார்த்தனை

“இயற்கையை காப்போம்”

பாரம்பரிய வீரிய விதைகள் மூலம் விவசாயம் செழிக்கட்டும்!

பாரம்பரிய வீரிய விதைகளை மட்டுமே விவசாயிகள் பயிரிடட்டும்!

அரசு பாரம்பரிய வீரிய விதை வங்கிகளை அனைத்து கிராமத்திலும் தொடங்கட்டும்!

இயற்கை உரங்களை மட்டுமே விவசாயிகள் பயன்படுத்தட்டும்!

நாட்டு மாடுகள், நாட்டு கோழிகள் மட்டுமே நடமாடட்டும்!

காகித பைகள், துணி பைகள், பாக்கு, மட்டை தட்டு,... என மண்ணில் மக்கும் பொருட்களை மட்டும் மக்கள் பயன்படுத்தட்டும்!

ஊரெல்லாம் நாட்டு ரக வீரிய மரங்கள், வளரட்டும்!

மரங்களில் குருவி பறவைகளின் சத்தம், மக்களின் காதுகளில் இனிமையை ஏற்படுத்தட்டும்!

தட்டான்கள் பெருகட்டும்!

உலகம் முழுவதும் உள்ள காலி இடங்களில் பனைமரங்களை மக்கள் ஆர்வத்துடன் நடட்டும்!

இவ்வனைத்தும் நடைபெற அழகிய பசுமையான பிரபஞ்சத்திடம் அனைவரும் ஒன்றாக இணைந்து கூட்டு பிரார்த்தனை செய்வோம்.

வாழ்க வளமுடன்!
வாழ்க வளமுடன்!!
வாழ்க வளமுடன்!!!
544 views21:30
ओपन / कमेंट
2021-11-30 11:32:34 வாழ்க வையகம், வாழ்க வையகம்

கோயம்புத்தூரை சேர்ந்த ஹீலர் விஜயகுமார் ஐயா அவர்களின் உடல்நலம் பூரணமாக குணமடைந்து, நல்ல உடல்நலத்துடன் இயல்பாக செயல்படவும், நீண்ட ஆயுளுடன் ஆனந்தமாக வாழவும் எல்லாம் வல்ல இறையாற்றலை பிரார்த்திக்கிறோம்.

வாழ்க வளமுடன், வாழ்க வளமுடன்
572 views08:32
ओपन / कमेंट
2021-11-30 00:30:26 இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

உடலை மனதை தூய்மை படுத்துவோம்!

கண்களை
தூய்மை செய்து உற்சாகப்படுத்தினால்
கல்லீரல் சுறுசுறுப்பாகும்!

நாசிகளை
தூய்மை செய்து உற்சாகப்படுத்தினால்
நுரையீரல் சுறுசுறுப்பாகும்!

உதடுகளை
தூய்மை செய்து உற்சாகப்படுத்தினால்
மண்ணீரல் சுறுசுறுப்பாகும்!

நாவினை
தூய்மை செய்து உற்சாகப்படுத்தினால்
இதயம் சுறுசுறுப்பாகும்!

காதுகளை
தூய்மை செய்து உற்சாகப்படுத்தினால்
சிறுநீரகம் சுறுசுறுப்பாகும்!

உடலை
தூய்மை செய்து சுறுசுறுப்பாக்கினால்
மனம் உற்சாகமாகும்!

உடலும் மனமும் தூய்மையாக வலிமையாக இருந்தால், வாழ்வு மிக சிறப்பாக இருக்கும்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்
648 views21:30
ओपन / कमेंट