Get Mystery Box with random crypto!

பல மாதிரித்தேர்வுகள் எழுதி பழகியவர்களுக்கு எப்படி Time managem | Kavin Tnpsc Academy

பல மாதிரித்தேர்வுகள் எழுதி பழகியவர்களுக்கு எப்படி Time management வராமல் போனது ? ஒரே ஒரு காரணம் தான்.மாதிரித்தேர்வுகளை OMR எழுதி பயிற்சி பெறாமல் Online முறையில் மாதிரி தேர்வுகளை எழுதியதே அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு. 1.Tnpsc ஒரு சில தேர்வுகளை மட்டுமே CBT முறையில் நடத்துகிறது.குருப் 2,குருப் 4 போன்ற தேர்வுகளை நடத்துவதில்லை.Tnpsc ஆன்லைனில் நடத்ததாத தேர்வை ,ஆன்லைனில் எழுதியது மிகப்பெரிய தவறு.நன்கு தெரிந்த 50 கேள்விகளை ஆன்லைனில் 10 நிமிடத்தில் கூட முடிக்கலாம்.ஆனால் OMR இல் முடியாது.2.இவர்கள் இருவரும் OMR பழகாததால் தேர்வறையில் சில சிக்கல்களை எதிர்கொண்டார்கள்.அதாவது பயந்து பயந்து Shading செய்வது.எங்கே கட்டத்துக்கே வெளியே Shading போகுமோ ! இல்லை , கட்டத்திற்குள்ளையே சரியாக Shading செய்யாமல் விடுவோமோ என்ற அச்சமே மேலோங்கியிருந்தது.அவர்கள் OMR இல் பழகியிருந்தால் இந்நேரம் அவர்கள் வெற்றியாளர்கள்.போரில் நன்கு பயிற்சி பெற்ற ஒரு மாவீரனின் வாளின் கைப்பிடி சரியில்லாமல் போனால் என்ன ஆகும்.அது தான் இங்கு நடந்தது.எனவே Tnpsc எந்த முறையில் தேர்வை நடத்துகிறதோ அந்த முறையில் பயிற்சி எடுங்கள்.இல்லையேல் எவ்வளவு திறமையிருந்தாலும் அந்த போர்வீரனின் நிலைதான் ஏற்படும்.பயிற்சி மையங்கள் ஆன்லைனில் விரைவாக Score பார்ப்பது,விரைவாக தரவரிசையை எடுப்பது போன்ற தன் பணிகளை ஆன்லைன் முறை எளிமையாக்குவதால் அவர்கள் அதில் தேர்வு நடத்துகின்றனர்.தேர்வர்கள் சோம்பல் காரணமாக எளிதான ஆன்லைன் முறையை நாடுகின்றனர்.இனி தயவு செய்து சிறு தேர்வுக்கு கூட ஆன்லைன் முறையை Support செய்யாதீர்கள். என்றும் மாணவர் நலனில்........ - ரேகா சோமசுந்தரம், ஒருங்கிணைப்பாளர்,கவின் டி.என்.பி.எஸ்.சி.அகாடமி.