Get Mystery Box with random crypto!

இரண்டாவது மாதமாக தொடர்ந்து சந்தை விலையை விட குறைவான விலையில் ட | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

இரண்டாவது மாதமாக தொடர்ந்து சந்தை விலையை விட குறைவான விலையில் டெண்டர் எடுக்கப்பட்டுள்ள துவரம் பருப்பு. இதற்கு ஒரே காரணம் டெண்டரில் அனுமதிக்கப்பட்ட போட்டி. 10 நிறுவனங்கள் பங்கேற்றதால் ஏற்பட்ட மாற்றம். அறப்போர் புகாரை ஆராய்ந்து உடனடி நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுக்கள். இதன் மூலம் கடந்த இரண்டு மாதங்களில் 200 கோடிக்கும் மேல் அரசுக்கு இழப்பு தடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதிமுக ஆட்சியில் தொடர்ந்து 6 வருடங்களாக போட்டியே இல்லாமல் தாங்கள் மட்டுமே பங்குபெற்று சந்தை விலையை விட மிக அதிக விலைக்கு டெண்டர் எடுத்து 2000 கோடிக்கும் மேல் இழப்பு ஏற்படுத்திய Christy நிறுவனங்களை டெண்டர்களில் பங்கேற்க தடை விதிக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஏன் இந்த தயக்கம்? Christy நிறுவனம் தமிழ்நாடு அரசுக்கும் திமுகவுக்கும் அழுத்தம் கொடுக்கிறதா? உணவுத்துறை அமைச்சர் திரு. சக்கரபாணி இது குறித்து வெளிப்படையாக அறிக்கை அளிப்பாரா?

#BlacklistChristy