Get Mystery Box with random crypto!

6. மே 5, 2021 முடிவடைந்த பருப்பு டெண்டரில் கிறிஸ்டி குழுவினர் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

6. மே 5, 2021 முடிவடைந்த பருப்பு டெண்டரில் கிறிஸ்டி குழுவினர் மட்டும் நேரடியாகவும் மறைமுகமாகவும் பங்கு எடுத்து ஒரு கிலோ துவரம் பருப்பு ரூபாய் 143 முதல் 147 வரை ஒப்பந்தப்புள்ளி தந்தார்கள். அதேபோல் ஒரு கிலோ கனடா மஞ்சள் பருப்பிற்கு ரூபாய் 139 முதல் 145 வரை ஒப்பந்தப்புள்ளி கொடுத்தார்கள். ஆனால் இரண்டின் சந்தை மதிப்பும் ரூபாய் 100 விட குறைவு. இந்த ஆதாரங்களை வெளிக்கொண்டு வந்த பிறகு புதிதாக பதவியேற்ற தமிழக அரசு கிறிஸ்டி நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு கொடுக்கப்பட்ட டெண்டர் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் புது டெண்டர் போட்டனர். ஆனால் இந்த முறை நாம் கேட்டுக்கொண்டபடி பல விதிகளை பழையபடி தளர்த்தினார்கள். கிறிஸ்டி நிறுவனங்களைத் தவிர மற்றவர்களும் பங்கு பெற வழிவகை செய்த உடனேயே இந்த ஒப்பந்தத்தில் 11 பேர் பங்கெடுத்து பலரும் 100 ரூபாய்க்கு குறைவாக ஒப்பந்தப்புள்ளி தந்தனர். கிறிஸ்டியன் ராசி நிறுவனம் ரத்தான ஒப்பந்தத்திலும் புது ஒப்பந்தத்திலும் பங்கெடுத்தது. மே 5 இந்த நிறுவனம் ஒரு கிலோ துவரம் பருப்பு விலை 146.5 ரூபாய் என்று ஒப்பந்தப்புள்ளி கொடுத்தது. ஆனால் அதே நிறுவனம் இருபதே நாட்களில் மே 26 அன்று 87 ரூபாய் என்று ஒப்பந்தப்புள்ளி கொடுத்தது. இந்த இடைப்பட்ட காலத்தில் சந்தை மதிப்பில் எந்த பெரிய மாற்றமும் இல்லை. அதேபோல் கனடா மஞ்சள் பருப்புக்கு மே 5 142 ரூபாய் ஒப்பந்தப்புள்ளி கொடுத்த ராசி நிறுவனம் தற்பொழுது மே 26 அன்று ஒரு கிலோ 78 ரூபாய் என்று ஒப்பந்தப்புள்ளி கொடுத்துள்ளது. அவர்களே ஆவண ரீதியாக இத்தனை நாட்களாக ஒரு கிலோவிற்கு எத்தனை ரூபாய் கொள்ளை அடித்துக் கொண்டிருந்தார்கள் என்பதை பதிவு செய்துள்ளார்கள். இந்த ஆதாரங்களையும் மேலும் மற்றவர்களை போட்டிபோடா வண்ணம் வைப்பதன் மூலமாக எப்படி விலை அதிகமாக பெற்று கிறிஸ்டி நிறுவனம் அரசையும் மக்களையும் ஏமாற்றினார்கள் என்பதன் ஆதரங்களையும் புகாருடன் இணைத்துள்ளோம்.

7. அறப்போர் இயக்கம் இந்த புகாரில் சர்க்கரை பாமாயில் பருப்பு ஒப்பந்த ஆவணங்களை விலாவாரியாக ஆய்வு செய்து அதை ஆதாரங்களாக இணைத்துள்ளோம். மேலும் கொள்முதல் விலையை அன்றைய சந்தை மதிப்புடன் ஒப்பிட்டு எப்படி சந்தை மதிப்பைவிட மிக அதிகமாக விலை கிறிஸ்டியின் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பதற்கான ஆதாரங்களையும் புகாரில் இணைத்துள்ளோம். சந்தை மதிப்பிற்கான ஆதாரங்களையும் இணைத்துள்ளோம். மேலும் கிறிஸ்டி நிறுவனம் மட்டும் பங்கு பெறும் வகையில் டெண்டர் ஆவணங்கள் எப்படி மாற்றப்பட்டது என்பதற்கான ஆவணங்களையும் புகாரில் இணைத்துள்ளோம். மேலும் எம் எம் டி சி, எஸ் டி சி போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் போர்வையில் கிறிஸ்டி எப்படி இந்த டெண்டர்களில் போட்டி போட்டது என்பதற்கான ஆவணங்களையும் புகாரில் இணைத்துள்ளோம். இவை அனைத்தும் பொது ஆவணங்கள் மற்றும் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலமாக பெறப்பட்ட ஆவணங்கள். விசாரிக்கப்பட வேண்டிய பொது ஊழியர்கள் பட்டியல் மற்றும் அவர்கள் எப்படி இந்த கூட்டு சதியில் ஈடுபட்டார்கள் என்பதையும் புகாரில் வைத்துள்ளோம்

8. பாமாயில் டெண்டர்களில் கடந்த 4 ஆண்டுகளில் கிறிஸ்டி குழு நிறுவனங்களிடம் வாங்கிய 56..56 கோடி பாக்கெட்டுகளில் அரசாங்கத்திற்கு ஏற்பட்டிருக்கக்கூடிய இழப்பின் மதிப்பு ரூ.902 கோடி. மேலும், பருப்பு டெண்டர்களில், கடந்த 6 ஆண்டுகளில் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடமிருந்து கொள்முதல் செய்யப்பட 6 லட்சம் டன் பருப்பு வகைகளில் ஏற்பட்ட இழப்பு ரூ.870 கோடி.மேலும் சர்க்கரையில் கிறிஸ்டியிடம் கொள்முதல் செய்த 2.7 லட்சம் சர்க்கரையில் ஏற்பட்ட இழப்பு ரூ 256 கோடி. குறைந்த பட்சமாக கிறிஸ்டி நிறுவன ஊழலால் மட்டும் தமிழக அரசு இழந்த பணம் ரூ 2028 கோடி

9. உடனடியாக லஞ்ச ஒழிப்பு துறை FIR பதிவு செய்து துறை அமைச்சர் காமராஜ், இயக்குநர் சுதா தேவி IAS உள்ளிட்ட பொது ஊழியர்கள் மீதும் கிறிஸ்டி சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீதும் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களான MMTC, STC, கேந்திரிய பண்டரின் ஊழியர்களின் மீதும் ஊழல் தடுப்பு சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடனடியாக இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட வேண்டும். இயக்குநர் சுதா தேவி IAS மற்றும் சம்பந்தப்பட்ட பொது ஊழியர்கள் இடைக்கால பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். மேலும் தமிழக அரசு உடனடியாக கிறிஸ்டி குழு நிறுவனங்களை கருப்பு பட்டியலில் வைக்க வேண்டும். மேலும் இழந்த பணத்தை உடனடியாக மீட்க வேண்டும்.

Arappor Complaint copy to DVAC here: https://arappor.org/blog/blog/post/arappor-complaint-dvac-ration-scam-2015-2021
Evidences here: http://bit.ly/2028CrRationScamAnnexure