Get Mystery Box with random crypto!

2015-16 வருடத்தில் ஸ்ரீராம் நிறுவனத்தின் Bharath Coal Chemical | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

2015-16 வருடத்தில் ஸ்ரீராம் நிறுவனத்தின் Bharath Coal Chemicals Ltd நிறுவனம் அன்றைய வீட்டு வசதித்துறை அமைச்சர் வைத்திலிங்கம் மகனின் நிறுவனமான எந்த தொழிலும் செய்து சம்பாதிக்காத Muthammaal Estates Pvt Ltd நிறுவனத்திற்கு 27.9 கோடி ரூபாய் கடனாக (unsecured loan) கொடுத்த பிறகு 2016 ம் வருடத்தில் அவர்களது 1450 வீடுகள் கட்டும் ப்ராஜக்ட்டுக்கு CMDAவிடம் இருந்து கட்டிட அனுமதி தரப்படுகிறது. கொடுக்கப்பட்ட கடன் (Unsecured Loan) இந்த கட்டிட அனுமதி வாங்குவதற்காக கொடுக்கப்பட்ட லஞ்சம் என்பதற்கான முதல் காரணம் இது.

ஸ்ரீராம் நிறுவனத்தின் அதே Bharath Coal Chemicals Ltd 2020 ம் வருடத்தில் 281 கோடி ரூபாய் கடன் இருப்பதால் எங்களை திவால் என்று அறிவிக்க வேண்டும் என்று சொன்ன போது கூட அந்த 27.9 கோடி ரூபாய் கடனை அமைச்சர் மகனிடம் இருந்து திரும்ப வாங்கவில்லை என்பது தான் இது கடன் இல்லை லஞ்சம் என்பதற்கான இரண்டாவது காரணம்.

ஒரே ஒரு கட்டிட அனுமதிக்கே அன்றைய அமைச்சர் வைத்திலிங்கமும் அவரது மகனும் இந்த தில்லாலங்கடி நாடகம் நடத்தி இருக்கிறார்கள் என்றால் அவர் அமைச்சராக இருந்த போது கொடுக்கப்பட்ட மற்ற கட்டிட அனுமதிகளுக்கு அமைச்சர் எவ்வளவு லஞ்சம் வாங்கி இருப்பார்?

இந்த அதிமுக அமைச்சரின் ஊழலை திமுக அரசு விசாரிக்குமா? ஆதாரங்களுடன் கொடுக்கப்பட்ட அறப்போர் இயக்கத்தின் புகாரை வருடம் 55 கோடி மக்கள் பணத்தில் செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்குமா?

ஊழல் குறித்த வீடியோ -


ஊழல் புகார் மற்றும் ஆதாரங்கள் - https://bit.ly/VaithilingamBribeComplaint