Get Mystery Box with random crypto!

கடந்த அதிமுக ஆட்சியில் 4 வருடங்களாக ரேஷன் பொருட்கள் கொள்முதல் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

கடந்த அதிமுக ஆட்சியில் 4 வருடங்களாக ரேஷன் பொருட்கள் கொள்முதல் செய்ததில் டெண்டர்களில் செட்டிங் செய்து கிறிஸ்டி நிறுவனத்திற்கு மட்டுமே அத்தனை டெண்டர்களும் கிடைக்கும் படி செய்து அதிக விலைக்கு பொருட்களை வாங்கி தமிழக அரசுக்கு 2028 கோடி இழப்பு ஏற்படுத்தினார்கள். இந்த ஊழல் குறித்த வீடியோக்கள்: https://youtube.com/playlist?list=PLct7OlMA06sgm3B6lspQ05AT62CRn5CWH

இந்த ஊழல் குறித்து அறப்போர் இயக்கம் பல்வேறு ஆதாரங்கள் மற்றும் புகார்கள் கொடுத்த போதும் அன்றைய எதிர்க்கட்சியாக இருந்த திமுக இது குறித்து பேசவில்லை. ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் முடிந்த நிலையில் இன்றும் திமுக அரசு இந்த ஊழல் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் சட்டசபையில் பேசிய திமுக அமைச்சர் சக்கரபாணி அவர்கள் அதிமுக ஆட்சியில் ரேஷன் துறையில் நடந்த ஊழலை தடுத்து திமுக ஆட்சியில் அரசுக்கு ஏற்பட இருந்த கோடிக்கணக்கான இழப்பை தடுத்துள்ளோம் என்று பெருமை பேசி இருக்கிறார். நீங்க தடுத்த அந்த ஊழலை செய்தது யார்? அவர்கள் மீது தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்று ஏன் சொல்ல மறுக்கிறீர்கள் அமைச்சர் சக்கரபாணி அவர்களே!! எது உங்களை தடுக்கிறது?