Get Mystery Box with random crypto!

2019ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

2019ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி அவர்களின் தலைமையில் சென்னை மாநகராட்சியின் 47 குளங்களை சீரமைக்க 106 கோடி ரூபாய் செலவில் போடப்பட்ட டெண்டர் பணிகளின் அவல நிலையை இந்த ஒரு குளத்தின் மூலம் அறியலாம்.
சிவன் கோவில் குளம் இன்று சிவன் கோவில் தண்ணீர் தொட்டியாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு இரண்டு முறை கோடிக்கணக்கில் டெண்டர் போடப்பட்டு இது வரை 56 லட்சம் செலவும் செய்துள்ளனர். ஆனால் 1.5 ஏக்கர் குளம் இன்று 0.5 ஏக்கர் தண்ணீர் தொட்டியாக மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறது.
கடந்த ஒரு வருட காலமாக இந்த நீர்நிலைகளின் டெண்டர்கள் குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க திமுக அரசை அறப்போர் இயக்கம் வலியுறுத்தி வருகிறது. ஆனால் அமைச்சர் நேரு அவர்களுக்கு சென்னையின் நீர்நிலைகளை பாதுகாப்பாதை விட வேறு பெரிய வேலைகள் இருக்கிறது போல. இந்த பக்கம் எட்டி கூட பார்க்கவில்லை. ஒரு நகரத்தின் நீர்நிலைகளின் முக்கியத்துவத்தை ஆட்சியாளர்களுக்கு புரிய வைப்பது எப்படி? ஆளுங்கட்சியின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டிய தமிழக எதிர்க்கட்சிகளை தூக்கத்தில் இருந்து தட்டி எழுப்புவது எப்படி?

Video: