Get Mystery Box with random crypto!

ஒரு வருட ஆட்சியில் ஊழலுக்கு எதிரான திமுக அரசின் நடவடிக்கைகள் த | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

ஒரு வருட ஆட்சியில் ஊழலுக்கு எதிரான திமுக அரசின் நடவடிக்கைகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்றே சொல்ல வேண்டும். சென்னை மாநகராட்சியில் மட்டுமே இது வரை முழுமையான E Tender நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர சேவை பெறும் உரிமை சட்டம், லோக் ஆயுக்தா சட்ட திருத்தம் ஆகியவை குறித்து எந்த தகவலும் வரவில்லை. குறிப்பாக அதிமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான IAS அதிகாரிகள் மீது FIR பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக அவர்களுக்கு உயர் பதவிகள் கொடுப்பது அப்பட்டமாக ஊழலை ஊக்குவிக்கும் செயல். இது தவிர அதிமுக ஆட்சியில் ரேஷன் ஊழல்களில் ஈடுபட்ட கிறிஸ்டி மற்றும் கட்டுமான ஊழலில் ஈடுபட்ட PST போன்ற நிறுவனங்களுக்கு எதிராக ஒரு சிறிய விசாரணை நடத்த கூட திமுக அரசால் முடியவில்லை என்பது வருத்தம் தரும் விஷயம்.

மக்களாகிய நாம் இணைந்து அரசுக்கு அழுத்தம் கொடுப்பது மட்டுமே ஒரு சில நல்ல மாற்றங்களை கொண்டு வரும் என்பதால் ஊழலுக்கு எதிரான உங்கள் அனைவரையும் அறப்போர் இயக்கத்துடன் இணைந்து பணி செய்ய அழைக்கிறோம்.
உங்கள் விவரங்களை www.arappor.org/volunteer.php என்ற இணைப்பில் பதிவு செய்யுங்கள். அறப்போர் மாவட்ட குழுக்களில் இன்றே இணையுங்கள்.