Get Mystery Box with random crypto!

கீழ்கட்டளை ஏரிக்கு யார் பொறுப்பு? PWD அதிகாரிகளை கேட்டால் பல்ல | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

கீழ்கட்டளை ஏரிக்கு யார் பொறுப்பு? PWD அதிகாரிகளை கேட்டால் பல்லாவரம் முனிசிபாலிட்டி தான் பொறுப்பு என்கிறார்கள். பல்லாவரம் முனிசிபாலிட்டி அதிகாரிகளை தேடினால் இப்போ நாங்க தாம்பரம் மாநகராட்சியில் இருக்கிறோம் என்கிறார்கள். இவர்கள் செய்யும் குழப்பத்தில் 2018 முதல் அந்த ஏரியில் போடப்பட்ட பிளாட்கள் இது வரை அகற்றப்படாமல் இருக்கிறது. இப்படியே காலம் தாழ்த்தி பிறகு அங்கே குடியிருப்புகள் வந்தவுடன் இதை இடித்தால் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கதை சொல்லி ஏரியின் அளவை குறைத்து விடுவார்கள். இதற்கு என்ன தான் முடிவு? ஆட்சியாளர்களுக்கு நீர்நிலைகள் மீது கொஞ்சமாவது அக்கறை இருக்கிறதா? நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதை வேடிக்கை பார்க்க தான் உங்களுக்கு மக்கள் வாக்களித்தார்களா? கோடிக்கணக்கில் செலவு செய்து நீர்நிலைகளை பாதுகாப்பதாக சொல்லும் ஆட்சியாளர்களுக்கு ஏரியில் போடப்பட்ட பிளாட்களை அகற்றுவதில் என்ன பிரச்சனை? ஆக்கிரமிப்பு செய்பவர்களின் அரசியல் பின்புலம் உங்களை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறதா? நீதிமன்ற உத்தரவுகளுக்கு எல்லாம் கொஞ்சமாவது மதிப்பளிப்பீர்களா?
திமுக ஆட்சி அமைத்து ஒரு வருடம் முடிய இருக்கும் நிலையில் இன்னும் பழைய அதிமுக அரசையே குறை சொல்லி காலத்தை ஓட்டுவது ஆட்சிக்கு அழகா அழுக்கா?
கீழ்கட்டளை ஏரி ஆக்கிரமிப்பு குறித்து அறப்போர் கொடுத்த தொடர் புகார்களின் அடிப்படையில் ஏரியின் எல்லைகள் குறிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்த பதிவுகளை காண:
https://www.facebook.com/600895630049473/posts/2138594319612922/
https://www.facebook.com/600895630049473/posts/2139248196214201/