Get Mystery Box with random crypto!

சென்னை மாநகராட்சியில் பொது மக்கள் எளிதில் புகார்களை அளிக்கவும் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

சென்னை மாநகராட்சியில் பொது மக்கள் எளிதில் புகார்களை அளிக்கவும், அரசின் சேவைகளை பெற்றுக்கொள்ளவும் சிறப்பாக செயல்படும் Namma Chennai Mobile App https://play.google.com/store/apps/details?id=com.ceedeev.grivenancev2&hl=en&rdid=com.ceedeev.grivenancev2 போலவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கைபேசி செயலி உருவாக்கி பொது மக்கள் மிகவும் எளிதாக அரசாங்கத்தை அணுக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.

இணையம் மூலமாக மாவட்ட புகார்கள் அளிக்கும் CM cell (http://cmcell.tn.gov.in/) மற்றும் https://www.gdp.tn.gov.in/ ஆகிய இணையதளங்கள் புகார்களை பெற்று அனுப்பும் தபால் நிலையங்களாக மட்டுமே இது வரை செயல்பட்டு வருகிறது. மேலும் கைபேசி செயலிகள் மூலம் சாதாரண பாமர மக்களும் எளிதில் அரசாங்கத்தை அணுக முடியும்.

ஆகவே இது குறித்து தகவல் தொழிநுட்ப அமைச்சர் திரு. மனோ தங்கராஜ் அவர்கள் நல்ல முடிவை விரைவில் அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.