Get Mystery Box with random crypto!

அறப்போர் இயக்கம் கொரோனா நடவடிக்கைகள் குறித்த கீழ்கண்ட மனுவை சு | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

அறப்போர் இயக்கம் கொரோனா நடவடிக்கைகள் குறித்த கீழ்கண்ட மனுவை சுகாதார செயலாளருக்கு இன்று அனுப்பியுள்ளோம். அதில் முக்கியமான ஆறு கோரிக்கைகளை சுகாதார துறைக்கு வலியுறுத்தி உள்ளோம்.
1. முதலாவதாக, கொரோனா இறப்பு குறித்த வெள்ளை அறிக்கை வெளியிடுமாறு வலியுறுத்தி உள்ளோம். சென்னையின் முக்கிய மருத்துவமனைகளின் சவக்கிடங்குகள் முன் நிற்கும் மக்கள் கூட்டம், மற்றும் அமரர் ஊர்தி பதிவு செய்ய நிற்கும் நீண்ட வரிசைகள் அரசு இறப்புகளை பெருமளவில் மறைக்கிறது என்பதை வெளிப்படையாக காட்டுகிறது.
அதுமட்டும் இல்லாமல் கொரோனாவால் இறந்த முன்கள பணியாளர்களின் விவரங்களையும் துறை வாரியாக வெளியிட வேண்டும். இதன் மூலம் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் விடுபடாமல் சரியான நிவாரண உதவிகளை பெற முடியும்.
2. கடந்த சில மாதங்களாக இறப்பு சன்றிதழ்கள் அரசு இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை. இறப்பு சான்றிதழ் போன்ற அத்தியாவசிய சேவையை அரசு எந்த காரணமும் சொல்லாமல் தடையின்றி உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
3. கருப்பு பூஞ்சை நோய் தமிழகத்தில் வேகமாக பரவுவதால் உடனடியாக அதற்கான அத்தனை மருந்துகளையும் அரசு வாங்கி தமிழக அரசு மருத்துவமனைகளுக்கு விநியோகிக்க வேண்டும். ராஜஸ்தான், டெல்லி, மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் இதற்காக உபயோகிக்கப்படும் Liposomal Amphoterin B என்ற மருந்து பெருமளவில் தட்டுப்பாட்டில் உள்ளதால், இதனை உடனடியாக போதிய அளவில் TNMSC கொள்முதல் செய்ய வேண்டும்.
4. tncovidbeds.tnega.org என்ற இணையதளத்தில் எப்படி பிற படுக்கை தொடர்பான விவரங்கள்
வெளியிடப்பட்டுள்ளதோ அதேபோல்
Ventilators தொடர்பான விவரங்களையும் இணைக்க வேண்டும். குறிப்பாக இன்னும் எத்தனை ventilators order செய்யப்பட்டு உள்ளது அது எப்போது எந்தெந்த தேதிகளில் சப்ளை செய்யப்படும் என்ற விவரங்களையும் மக்களுக்கு அறிவிக்க வேண்டும்.
5. மாவட்ட வரியான oxygen war room அமைக்க வேண்டும். Emergency oxygen fetching units zone வாரியாக நிறுவப்பட வேண்டும். Tanker tracking system, மொபைல் units, nasal oxygen அதிகமாக்காப்பட வேண்டும். செங்கல்பட்டு, நெல்லை மற்றும் கடலூர் அரசு மருத்துவமனைகளில் நடந்த அவல சம்பவங்கள் சுகாதாரத்துறை சரியாக oxygen பற்றாக்குறையை எதிர்நோக்க திட்டமிடவில்லை என்று தெளிவாக தெரிகிறது. இது போன்ற சம்பவங்கள் மேலும் ஏற்படாமல் இருக்க மாவட்ட வாரியான oxygen war room அமைத்து துரிதமாக செயல்பட வேண்டும்.
6. தனியார் மருத்துவமனைகளில் Bills மற்றும் discharge சுருக்கம் கொடுக்காமல் மக்களை ஏமாற்றுவது இப்போது சாதாரணமாகிவிட்டது. அதிக கட்டணம் வசூலிப்பதால் பல மருத்துவமனைகள் Bills கொடுப்பது இல்லை. பொதுவான ICMR மற்றும் முன்பே நடைமுறையில் இருந்த Clinical Establishment வழிமுறைகளையும் இப்போது பல தனியார் மருத்துவமனைகள் கடைபிடிப்பதில்லை. இது தொடர்பாக மக்கள் புகார் அளிக்க தனி தொடர்பு எண்களை சுகாதார துறை வெளியிட வேண்டும். புகார்களை உடனுக்குடன் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.