Get Mystery Box with random crypto!

ஊரடங்கால் வேலைக்கு போக முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

ஊரடங்கால் வேலைக்கு போக முடியாமல் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகளில் 13 பொருட்கள் கொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மதிப்பு கிட்டத்தட்ட 670 கோடி ரூபாய். ஆனால் இதற்காக விடப்பட்ட டெண்டரில் பங்கேறக்கும் நிறுவனங்கள், மொத்த தேவையில் குறைந்தபட்சம் 30% பொருட்களை சப்ளை செய்ய வேண்டும் என்ற விதிமுறையை வைத்துள்ளார்கள். இதன் மூலம் 3 நிறுவனங்களுக்கு மேல் இந்த டெண்டரில் பங்கேற்க முடியாத சூழ்நிலை நிலவுகிறது. இந்த விதிமுறையின் மூலம் இந்த டெண்டர் முழுவதும் கிறிஸ்டி நிறுவனத்திற்கு மட்டுமே கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

அறப்போர் கோரிக்கை:
மாவட்டத்திற்கு 5 நிறுவனங்கள் பங்கேறக்கும் வகையில் டெண்டர் விதிகளை மாற்றுங்கள். இதன் மூலம் வேலை வாய்ப்புகள் இல்லாத இந்த நேரத்தில் 190 சிறிய நிறுவனங்கள் தமிழகம் முழுவதும் பயனடைய வாய்ப்புள்ளது. மேலும் கிறிஸ்டி நிறுவனம் மட்டுமே இந்த டெண்டரை எடுப்பதன் மூலம் அவர்கள் என்ன விலை குறிப்பிட்டாலும் அந்த அதிக விலைக்கே பொருட்களை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு தமிழக அரசு தள்ளப்படும். ஆனால் 190 சிறிய நிறுவனங்கள் பங்கேற்பதை உறுதி செய்தால் விலையில் கடும் போட்டி நிலவும். இதன் மூலம் அரசுக்கு செலவு குறையும். மேலும் பலருக்கு நிவாரணம் அளிக்க அந்த பணம் பயன்படும்.

வெளிப்படையான நிர்வாகத்தை திமுக அரசு கொடுக்கும் என்று உறுதி அளித்த முதல்வர் ஸ்டாலின் இந்த டெண்டரில் தலையிட்டு தேவையான மாற்றத்தை செய்வாரா?

வீடியோ: