Get Mystery Box with random crypto!

தமிழகத்தில் புதிய அரசாங்கம் பதவி ஏற்பதற்கு 2 நாட்கள் முன்னதாக | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

தமிழகத்தில் புதிய அரசாங்கம் பதவி ஏற்பதற்கு 2 நாட்கள் முன்னதாக ரேஷன் கடைகளுக்கு துவரம் பருப்பு வாங்குவதில் #80கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. இந்த டெண்டரில் பங்கேற்ற மூன்று நிறுவனங்களும் கிறிஸ்டி நிறுவனங்களுடன் நேரடி மற்றும் மறைமுக தொடர்பு வைத்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் டெண்டரில் பங்கேற்ற மூவரும் சந்தை விலையை விட மிக அதிகமாக டெண்டர் கோரியுள்ளார்கள்.
இந்த கொள்ளையில் உடந்தையாக இருந்த முன்னாள் உணவுத்துறை இயக்குனர் சுதா தேவி பணியிட மாற்றம் மட்டுமே செய்யப்பட்டு எந்த கவலையும் இல்லாமல் இருக்கிறார். இந்த கொள்ளையை அரங்கேற்றும் கிறிஸ்டி நிறுவனம் இன்னும் Black List செய்யப்படாமல் ரேஷன் கடைகளுக்கான கொள்முதலை முழுவதும் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
ஊழல் குறித்த விளக்க வீடியோ:



Corona நோய் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் தமிழக அரசாங்கம் முழு கவனத்தையும் செலுத்தினாலும், நம் கண் முன்னே மக்கள் பணம் இது போல அநியாயமாக கொள்ளை போவதை பார்த்துக்கொண்டு எவ்வாறு சும்மா இருக்க முடியும்? தமிழக அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு மக்கள் பணம் கொள்ளை போவதை தடுக்கும் படி அறப்போர் இயக்கம் கேட்டுக்கொள்கிறது.