Get Mystery Box with random crypto!

தமிழக மருத்துவமனைகளில் தினமும் நூற்றுக்கணக்கில் மனித உயிர்கள் | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

தமிழக மருத்துவமனைகளில் தினமும் நூற்றுக்கணக்கில் மனித உயிர்கள் Corona நோய்க்கு பலியாகிக்கொண்டு இருக்கின்றன. ஆயிரக்கணக்கில் தினமும் மனிதர்களிடையே இந்த தொற்று நோய் பரவிக்கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மருத்துவமனை வாசலிலும் ஏகப்பட்ட நோயாளிகள் உள்ளே செல்ல இடம் கிடைக்குமா என்று தங்கள் வாகனங்களிலும் ஆம்புலன்ஸ் உள்ளேயும் படுத்து காத்துக்கொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட இக்கட்டான சிக்கலை மக்களும் அரசாங்கமும் இணைந்து செயல்பட்டால் மட்டுமே கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மருத்துவமனைகளில் உயிரிழப்பு ஏற்படுவது ஏற்றுக்கொள்ள முடியாத செயல். வட இந்திய நகரங்களில் கடந்த ஒரு மாத காலமாக ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட்ட செய்திகளை பார்த்த பிறகும் தமிழகத்தில் நிலைமையை சமாளிக்க திட்டம் தீட்டதாமல் இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட காரணம் என்ன? இதற்கு யார் பொறுப்பு? இனியும் இது போன்ற ஒரு குறைபாடு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று சுகாதார செயலாளர் உடனடியாக மக்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

நிலைமையின் தீவிரம் இப்படி இருக்க இன்னும் பலர் மாஸ்க் அணியாமல், தனி மனித இடைவெளியை பின்பற்றாமல் கவனக்குறைவாக இருப்பது மிகுந்த கவலையையும் அச்சத்தையும் அளிக்கிறது. நோய் வந்தபின் கவலைப்படுவதை விட வரும் முன் பாதுகாப்பாக இருப்பது மிகவும் முக்கியம். தினசரி தொற்று எண்ணிக்கையை குறைப்பதான் மூலம் மக்கள் மருத்துவமனைகளில் குவிவது தடுக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கும் பணி எளிதாகும்.

ஆகையால் அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே செல்லாதீர்கள். அப்படி வெளியே செல்வதாக இருந்தால் கண்டிப்பாக மாஸ்க் அணிந்து சென்று தனிமனித இடைவெளியை பின்பற்றி உங்களை நோய் தொற்றில் இருந்து காத்துக்கொள்ளுங்கள்.