Get Mystery Box with random crypto!

சென்னையின் 47 குளங்களை சீரமைப்பதாக சென்னை மாநகராட்சி 106 கோடி | 𝔸𝕣𝕒𝕡𝕡𝕠𝕣

சென்னையின் 47 குளங்களை சீரமைப்பதாக சென்னை மாநகராட்சி 106 கோடி செலவில் ஆரம்பித்த திட்டம் நல்ல நிலையில் இருந்த குளங்களையும் சீரழித்து போட்டிருக்கிறது. தேர்தல் சமயத்தில் அரைகுறை பணிகள் நடந்து கொண்டிருந்த குளங்களின் படங்களை பகிர்ந்து அமைச்சர் வேலுமணி இதை ஒரு பெரிய சாதனையாக பேசி வந்தார். அவை அனைத்தும் மக்களை ஏமாற்றும் செயல் என்பது இந்த குளங்களை நேரில் பார்த்தாலே புரியும்.
உதாரணத்திற்கு கொட்டிவாக்கம், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள குளத்தை சீரமைப்பதாக சொல்லி அதன் எல்லைகளை சுருக்கி, கொள்ளளவை குறைத்து காங்கிரீட் தொட்டி அமைத்து அதை சுற்றியும் ஆக்கிரமிப்புகள் வருவதற்கு ஏற்றபடி நிலத்தை சமப்படுத்தி வசதிகள் செய்துள்ளதை படத்தில் பார்க்கலாம்.
மேலும் கொட்டிவக்கம் பகுதி ஒரு Aquifer ஏரியா. அதாவது தண்ணீர் எளிதில் நிலத்தில் புகக்கூடிய மணல் நிறைந்த பகுதி. இந்த பகுதியில் நீரோட்டம் மிகவும் குறைந்த ஆழத்திலேயே இருக்கும். இது போல குளத்தை சுற்றிலும் காங்கிரீட் சுவர் அமைத்தால் அந்த நீரோட்டம் தடைபடும். நல்ல நிலையில் இருந்த பழைய குளத்தை இடித்து இது போல சிதைத்து போட்டிருப்பது ஒரு கிரிமினல் செயல்.
இந்த தொட்டியை உடனடியாக இடித்து போட்டு பழைய கொள்ளளவு இருக்கும் படி குளத்தை மீட்டு எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புகள் நடக்காத வண்ணம் எல்லைகளை பாதுகாக்க வேண்டும். இதை உடனடியாக அதிகாரிகள் பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். நீங்கள் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்.