Get Mystery Box with random crypto!

இன்றைய கூட்டுப்பிரார்த்தனை உயிர்ஆற்றலை பயன்படுத்தி இயற்கை வ | ஹீலர் பாஸ்கரின் கூட்டுப்பிரார்த்தனை குழு

இன்றைய கூட்டுப்பிரார்த்தனை

உயிர்ஆற்றலை
பயன்படுத்தி
இயற்கை விவசாயம் செய்வோம்!

உழவர்கள் இயற்கை உரமிட்டு
நிலத்தை
வலுப்படுத்துகிறார்கள்!

நிலத்தை உழ எருதுகள் பயன்படுத்தப்படுகின்றன!

வரப்பு வெட்டும் பணியை ஆண்கள் செய்கின்றனர்!

தானியங்கள்
விதைக்கும் பணியை ஆண்கள் செய்கின்றனர்!

நாற்று பறிக்கும் பணியை ஆண்களும் பெண்களும் செய்கின்றனர்!

நிலத்தைச் சுற்றிலும் ஆண்கள் உயிர் வேலி அமைக்கிறார்கள்!

சிறுவர் சிறுமியர்கள் நாற்று பரிமாறும் பணியை செய்கின்றனர்!

நாற்று நடும் பணியை பெண்கள் செய்கின்றனர்!

தண்ணீர் பாய்ச்சும் பணியை ஆண்கள் செய்கின்றனர்!

களை எடுக்கும் பணியை பெண்கள் செய்கின்றனர்!

தானிய அறுவடை பணியை பெண்கள் செய்கின்றர்!

அதை கட்டி
களத்துமேட்டிற்கு
எடுத்து செல்லும் பணியை ஆண்கள் செய்கின்றனர்!

தானியக் கதிர்களை அடிக்கும் பணியில் ஆண்கள் ஈடுபடுகின்றனர்!

தானியங்களை தூற்றும் பணியில் பெண்கள் ஈடுபடுகின்றனர்!

குவியலாக சேர்க்கப்பட்ட தானியங்களை, ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைவரும் மூட்டைகளாக கட்டுகின்றனர்!

உயிரிகளால் உருவாக்கப்பட்ட தானியங்கள்
மாட்டு வண்டிகளின் மூலமாக எடுத்துச் சென்று தானிய குதிருக்குள் சேமிக்கப்பட்டு மக்கள் அனைவரும், மகிழ்ச்சியாக நிறைந்த வருமானம் பெற்று மன நிறைவுடன் வாழ்கின்றனர்!

உயிர் ஆற்றலை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை மீட்டெடுத்த பிரபஞ்ச பேராற்றலுக்கு கோடான கோடி நன்றிகள்!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

வாழ்க வையகம்
வாழ்க வளமுடன்